- Wednesday
- December 24th, 2025
நாட்டின் அரசியலமைப்பை மீறி சட்டவிரோதமான முறையில் பதவியேற்றுள்ளீர்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விஜேராம அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சந்தித்து இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு, நாட்டின் இறையாண்மைக்கு இது பாதகமாக அமையுமென சுட்டிக்காட்டியுள்ள சம்பந்தன்,...
மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணியில் இதுவரை 207 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் நேற்று (திங்கட்கிழமை) 96 ஆவது தடவையாக மனித எலும்புக்கூடுகள் அகழும் பணிகள் இடம்பெற்றன. தற்போது வரைக்கும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 207 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த எலும்புக் கூடுகளில் இதுவரை...
வடக்கு மக்களின் பிரச்சினைகளை கடந்த மூன்றரை வருடங்களில் தீர்ப்பதற்கு, பொறுப்பு வாய்ந்த எவரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமஹாராமவில் இன்றைய தினம்(திங்கட்கிழமை) இடம்பெற்ற 2018ஆம் ஆண்டுக்கான தேசிய நெல் விதைப்பு நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும்...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் செயலகத்தில் சற்றுமுன் அவர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை ஜனாதிபதியாக இரு தடவைகள் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததால் சர்வதேச அளவில் பேசப்பட்ட தலைவராக காணப்படுகிறார். கடந்த 1945ஆம் ஆண்டு...
பருத்தித்துறை குடத்தனையில் கோடரியுடன் சென்ற நபர் வீடுகளுக்குள் கண்மூடித்தனமாக வெட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. முதலில் வீடொன்றுக்குள் புகுந்த நபர் தம்பதிகளை கொடூரமாகத் தாக்கியுள்ளார். அதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மனைவி படுகாயமடைந்துள்ளார். பின்னர் மற்றொரு வீட்டுக்குள் புகுந்த அந்த நபர் வீட்டின்...
பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு அர்ஜுன் ரணதுங்க வருகை தந்ததையடுத்து இடம்பெற்ற அசம்பாவித நிலைமையைத் தொடர்ந்து பெற்றோலிய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பணிப்புறக்கணிப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் அர்ஜுன் ரணதுங்கவை, கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தயே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோலிய...
இரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. நாட்டின் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். கட்சிகளை பற்றி நான் சிந்திக்கவில்லை. எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். நாட்டின் அரசியல் நிலைகுறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சம்பந்தன்,...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவாரென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் நீடித்த குழப்பநிலையின் உச்சகட்டமாக, நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அத்தோடு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையையும் செயற்படுத்த...
நாட்டு மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் இந்த விசேட உரையை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்திற்குள் அண்மைய காலமாக இடம்பெற்று வந்த உட்பூசல் தீவிரமடைந்து வந்த நிலையில், நேற்றிரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். எனினும், அரசியலமைப்பின்...
இலங்கையின் பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதோடு, நாட்டின் பிரதமராக தானே தொடர்ந்து உள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அரசியல் பிரச்சினைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசமைப்புத் தொடர்பான சிக்கல்கள் எழவுள்ள நிலையில், டுவிட்டர் இணையத்தளத்திலும், இது தொடர்பில் குழப்பம் காணப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ இருவரும், தங்களது டுவிட்டர் கணக்கில், தாங்களே...
கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒற்றுமை என்பதற்காக அவருடன் இணைந்து பணியாற்றி நாங்கள் தயாராக இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற...
கூட்டமைப்பின் கட்டாயத்தாலேயே புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் நேற்று (புதன்கிழமை) தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக்...
தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து, மனித உரிமைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி, கொள்கை அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டும். காலாதி காலமாக நாம் வலியுறுத்தி வந்த கொள்கைகளின் அடிப்படையில் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை அடைவதற்கு நீங்கள் யாவரும் முன்வரவேண்டும் என்று அழைக்கின்றேன். அது முடியாது என்று...
தமிழ் மக்கள் பேரவையின் பெயரில் விடுதலைப்புலிகளின் இலச்சினையுடன் அநாமதேய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இத்துண்டுப் பிரசுரத்திற்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு வெளியிடப்பட்ட இத்துண்டுப் பிரசுரமானது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி, எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கின்ற மாபெரும்...
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரின் வசமுள்ள காணிகளை இந்த வருட இறுதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே இது தொடர்பான உத்தரவை பாதுகாப்பு படையினருக்கு வழங்கிய நிலையில், நேற்று (திங்கட்கிழமை) மாகாண ஆளுநர்களுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். 2018 ஆம் ஆண்டிற்கான மாகாண சபை செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம்...
தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வு நாளைமறுதினம்(புதன்கிழமை) யாழில் நடைபெறவுள்ள நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் புலிச் சின்னத்துடன் பலருக்கும் அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. “மாபெரும் எழுச்சி தலைவன் வழியில் மக்கள் மேலவைத் தலைவன் கைகளைப் பலப்படுத்துவோம்“ எனப் குறிப்பிடப்பட்டு தமிழ் மக்கள் பேரவையால் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட...
அண்மையில் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை கடற்படையினர் முடியதால் கடற்படையினருக்கும், முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கடற்படை முகாமினூடாக முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடற்படையினர் மூடியதாலேயே இருதரப்பினருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவிக்கையில், “முள்ளிக்குளம்...
இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பெண் விடுதலை புலி உறுப்பினர்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் இன்னொரு சான்றாக #MeToo பரப்புரையில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்தியா, இலங்கை உட்பட உலகம் முழுவதும் தற்போது பெரும் பூதாகரமான பிரச்சினையாக #MeToo விவகாரம் காணப்படுகின்றது. குறிப்பாக பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிட்டக் கருத்து திரிபுப்படுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இதுதொடர்பில் நேற்றைய தினம்(புதன்கிழமை) தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதுடன், இதன்போது இந்த விடயம்...
Loading posts...
All posts loaded
No more posts
