- Sunday
- August 9th, 2026
காலநிலை மாற்றத்தின் காரணமாக வட மாகாணமானது கடுமையான சவால்களை எதிர்நோக்குகின்றது என நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் வடக்கு மாகாணமானது அரை பாலைவனமாக மாறும் என அவர் மேலும் கூறியுள்ளார். நாடாளுமன்றில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...
“இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் சர்வதேச குற்றங்களே. எனவே, இதை விசாரித்துப் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி வழங்க சர்வதேச விசாரணையே வேண்டும்.” இவ்வாறு சபையில் இன்று வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன். “சர்வதேச விசாரணையால் நாட்டின் இறைமை ஒருபோதும் பாதிக்கப்படாது” எனவும்...
இலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தனர் என்ற குற்றத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 185 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து அநூராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 185 ஆண்டுகள்...
இறுதிக்கட்டப்போரின்போது இராணுவத்தினர் இரசாயன மற்றும் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர் என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. எனவே இராணுவம் இறுதிப் போரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டம் மீதான...
பொலிஸாரின் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் அநாவசியமாக தலையீடு செய்து, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை குறிப்பாக, கஞ்சாக் கடத்தல் காரர்களை, விடுவித்தமை தொடர்பாக சபையின் அவதானத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் 1996 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இராஜதந்திர சிறப்புரிமைகள்...
கிளிநொச்சி பளை இயக்கச்சிப் பகுதியிலநேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பேரின் சடலங்கள் பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மற்றுமொரு...
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வார பத்திரிக்கையில் வெளியான செய்தியால் குறித்த பத்திரிகையை பருத்தித்துறை இளைஞர்கள் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யாழில் இருந்து வெளியாகும் வார பத்திரிகை ஒன்றின் முகப்பு பக்கத்தில் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மத்தியில் தலைவர் வே.பிரபாகரன் நடந்து வரும் படத்தை பிரசுரித்து ‘ இரவு இரண்டு மணிக்கு...
அடுத்த தேர்தலில் மைத்திரி – மஹிந்த கூட்டணியமைப்பது சாத்தியமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சுதந்திரக் கட்சி எப்போதும் கூட்டணியாகத் தான் களமிறங்கியுள்ளது. சுதந்திரக் கட்சி என்பது பிரதானக் கட்சியாகும்....
வவுனியா, செட்டிகுளம், இராமியன்குளத்தில் மக்களின் காணிகளை கையகப்படுத்திய இராணுவத்தினர் விவசாயம் செய்து வருவதாகவும் அதனை உடன் விடுவிக்க கோரியும் பாரியளவிலான ஆர்ப்பாட்மொன்று இடம்பெற்றது. வவுனியா, செட்டிகுளம், ஆண்டியாபுளியங்குளம் பள்ளிவாசல் முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மதவாச்சி மன்னார் வீதியில் ஆண்டியாபுளியங்குளத்தில் மதிய நேர தொழுகையின் பின்னர் சுமார் ஒரு மணிக்கு ஒன்றுகூடிய இஸ்லாமிய மக்கள் தமது...
தமிழீழ விடுதலைப் புலிகள் ஜனநாயகத்துக்கு விரோதமாக ஒரு நாளும் இருக்கவில்லை. 30 வருடகால வரலாறு உள்ளது. அது சிலருக்குத் தெரியாது இருக்கலாம். தமிழரசுக் கட்சியில் உள்ள அனைவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை. எதிரானவர்களும் உள்ளனர். இவ்வாறு தமிழரசுக் கட்சியின் துணை பொதுச் செயலரும் வடக்கு மாகான அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். நல்லூரில் அமைந்துள்ள...
புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் ஒற்றையாட்சி முறைமையை கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் அறிந்த வகையில் ஒற்றையாட்சி என்ற வகையிலேயே அரசியலமைப்பு வரைபு உருவாக்கப்பட்டுள்ளது. அதில்...
நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழிழ விடுதலைப்புலிகளுக்கு பயந்து ஒதுங்கியவர்களே வடக்கில் தமிழ் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையும் விரிசலை ஏற்படுத்த முனைகின்றனரென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே மகேஸ் சேனாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கிலுள்ள தமிழ் மக்கள் இயற்கை...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சென்ற மாத தொடக்கத்தில் தங்க சங்கிலிகளை திருடிய போது மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண், மீணடும் நேற்று முன்தினமும் யாழ் போதனா வைத்தியசாலையில் தங்கச்சங்கிலியை அபேஸ் செய்தார் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைபவர்களின் தங்கச்சங்கிலிகளிற்கு உத்தரவாதம் கிடையாது என பொதுமக்கள் அச்சப்படுமளவிற்கு திருடர்களின் ராஜ்ஜியம் கொடிகட்டி...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக காணிகளில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவ முகாமை அகற்றி தம்மை தமது சொந்த பூமியில் குடியமர்த்துமாறு கோரி கடந்த 2017.03.01 அன்று ஆரம்பித்த தொடர் போராட்டமானது 672 ஆவது நாளாக கேப்பாபுலவு இராணுவ தலைமையகம் முன்பாக இடம்பெற்றுவருகிறது இந்நிலையில் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்...
இலங்கை சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த புதிய ஆண்டிலாவது நிறைவேற்றுமா என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று மலர்ந்துள்ள 2019 ஆம் ஆண்டின் புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, ‘பல எதிர்பார்ப்புக்களுடன் 2019ஆம் ஆண்டு பிறக்கின்றது. மக்கள் தமது...
பகிடிவதை காரணமாக யாழ். பல்கலைக்கழக மாணவனொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைகழகத்தில் தான் மோசமாக பகிடிவதைக்கு உள்ளாகி வருவதாக வீட்டிலிருந்தவர்களிடம் தெரிவித்திருந்த மாணவன் நேற்று (வெள்ளிக்கிழமை) திடீரென அறைக்குள் சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனை அவதானித்த குடும்பத்தினர் மாணவனை மீட்டு உடனடியாக பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், குறித்த மாணவன் மேலதிக சிகிச்சைகளுக்காக...
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த இரண்டாவது சம்பவமும் பதிவாகியுள்ளது. கடந்த மாத இறுதியில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த அதே பாணியில் இந்த இளைஞரும் முயற்சித்துள்ளார். இந்தச் சம்பவம் புதன்கிழமை கோப்பாய் பொலிஸ் நிலைய தடுப்புக்காவல் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. தனக்கு...
வடக்கு மாகாணத்தில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 10 லட்சம் ரூபா நிதியை இழப்பீடாக உடனடியாக வழங்க பிரதமர் ரணில் விக்கிரம சிங்க உத்தரவிட்டார். அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சொத்து இழப்பு மதிப்பீடு நிறைவடைந்ததும் 25 லட்சம் ரூபா வரை காப்பீட்டுப் பணம் வழங்குமாறும் அவர் இதன்போது அறிவுறுத்தினார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை காரணமாக போர்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்பு கூறல் மறைக்கப்பட்டுள்ளதாக லண்டன் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான திணைக்கள உதவி பேராசிரியர் கேட் க்ரோனின் பார்மன் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பற்றிய தகவல்களை வெளியிடும் யூ.என்.டிஸ்பெச் இணையத்தளம், கேட் க்ரோனின் பார்மன் இவ்வாறு குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 10...
வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை பெற்றுத் தருமாறு கூறிவரும் சம்பந்தனோ, ஹக்கீமோ தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட வரவில்லை எனக் கூறிய இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து, இராணுவத்தினரே அந்த மக்களை தோள்களில் தூக்கி சுமந்து காப்பாற்றியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,...
Loading posts...
All posts loaded
No more posts
