Ad Widget

வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக ரூபா 10 லட்சம் இழப்பீடு – பிரதமர் அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 10 லட்சம் ரூபா நிதியை இழப்பீடாக உடனடியாக வழங்க பிரதமர் ரணில் விக்கிரம சிங்க உத்தரவிட்டார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சொத்து இழப்பு மதிப்பீடு நிறைவடைந்ததும் 25 லட்சம் ரூபா வரை காப்பீட்டுப் பணம் வழங்குமாறும் அவர் இதன்போது அறிவுறுத்தினார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள இடர் தொடர்பான பாதிப்புக்கள் மற்றும் மக்களுக்கான இழப்பீடுகள் – உதவிகள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் கிளிநொச்சிக்கு வருகை தந்தார்.

இதன்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ள இடர் பாதித்த பகுதிகள் ஊடாகப் பறந்த உலங்கு வானூர்தியில் இருந்தவாறே பிரதமர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளுடனான முக்கிய கூட்டத்தில் பிரதமர் ஈடுபட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்திலேயே பிரதமர் இந்த இழப்பீடுகள் தொடர்பில் அறிவித்தார்.

Related Posts