அரசியல் தீர்வுகாணும் முயற்சி தோல்வியடைய கூட்டமைப்பே காரணம் என்கின்றார் மஹிந்தர்!

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சி தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தோல்வி அடைந்தமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். கொழும்பில் தமிழ் செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிவகையில், “அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று,...

யாழ் மாவட்ட செயலகத்தில் கொட்டும் மழையில் மாணவர்களை நடனமாட வைத்து சுதந்திர தின கொண்டாட்டம்!!

முப்படைகள் , பொலிஸ் அணிவகுப்புடன் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கொட்டும் மழைக்குள்ளும் சுதந்திர தின கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக காலை 8.45 மணியளவில் மாவட்ட செயலர் தேசிய கொடியை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து இராணுவம் , கடற்படை, விமான படையினரின் அணி வகுப்புடன், பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு...
Ad Widget

சுதந்திர தினத்தை துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை!!

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர் தாயகத்தில் கரிநாளாக பிரகடனப்படுத்தி துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் விடுத்தார். அத்துடன், இலங்கையின் சுதந்திர தினம் தொடர்பான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையொன்றையும் அவர்கள்...

கிளிநொச்சியில் போதைப்பொருளிற்கு அடிமையாகும் மாணவர்கள்: உளநல மருத்துவர் அதிர்ச்சி அறிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையாகி வருவதாக உளநல மருத்துவர் ஜெயராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினரின் ஏற்பாட்டில் மாணவர்களிடையே அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்...

யாழ்ப்பாணத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் சேகரிப்பு!

யாழில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை கோப்பாய் பொலிஸார் சேகரித்து வருவதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, தற்பொழுது அவசரகால சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், பொலிஸார் ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனரென வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்....

சவேந்திர சில்வாவை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்த வேண்டும்: ஜஸ்மின் சூக்கா

யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் அமைப்பினால்நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக...

கரும்புலிகளின் சீருடை அணிந்து புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் கைது; 15 பேருக்கு வலைவீச்சு!!

விடுதலைப் புலிகளின் கரும்புலி படையணியின் கறுமையான வரி சீருடையுடன் புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞர்களே கைதாகியுள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] வடக்கில் புலிகள் மீளக்கட்டியெழுப்பப்படுவதை போல தோற்றத்தை காண்பித்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதியை பெறவே இவர்கள் நாடகமாடியிருக்கலாமென பொலிசார் தெரிவித்துள்ளனர். தகவல் ஒன்றை...

வடக்கில் இராணுவம் அகற்றப்பட வேண்டும்: பென் எமர்ஷன்

வடக்கு மாகாணத்தில் இராணுவம் அகற்றப்படும்போதே தமிழ் மக்களிடத்தில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்த முடியுமென ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட நிர்ணர் பென் எமர்ஷன் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த அவர் பயங்கரவாதத்தை ஒழிக்கும்போது மனித உரிமைகள் பின்பற்றப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்ந்திருந்திருந்தார். இந்நிலையில் தற்போது அவ்வறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித...

யுத்தம் முடிந்து ஒரு தசாப்தம் ஆகியும் நீதியில் தாமதம் – சர்வதேச மன்னிப்புச்சபை

யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் ஆகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கவேண்டியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது. தெற்காசியப் பிராந்தியங்களுக்குப் பொறுப்பாக இயங்கிவரும் சர்வதேச மன்னிப்புச்சபை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டில் வாக்குறுதி வழங்கியவாறு உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டினை ஈடுசெய்தல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய...

யாழில் உயிர்கொல்லும் விஷச் சாராம் 372 பரல்கள் பிடிபட்டது!!

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கதக்கதான எதனோல் போதை அமிலம் 372 எண்ணை பரல்களுக்குள் யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 21 லீட்டர் கொள்ளளவுடைய எண்ணெய் தாங்கிகளில் அது மரக்கறி எண்ணெய் போன்று கடத்தப்பட்டுள்ளது. அதன் மொத்த அளவு 7812 லீட்டர் என கண்டறியப்பட்டுள்ளது. இன்று அதிகாலை விசேட அதிரடி படையினர் சுன்னாகம் பகுதியில் பாரவூர்தி...

விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதை நான் ஒருபோதும் எதிர்க்கவில்லை – எம்.ஏ.சுமந்திரன்

“நாடு எதிர்கொண்டுள்ள பெரிய பிரச்சனையான, இனப்பிரச்சனையை தீர்க்க வேண்டுமென்ற எண்ணத்துடன்தான் அரசியலுக்குள் நுழைந்தேன். அந்த முயற்சி வெற்றியளித்தாலோ அல்லது தோல்வியடைந்தாலோ, என்னுடைய அரசியல் பயணம் தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எடுப்பேன்“ என தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். “நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்காக, புதிய சமூக ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான...

நியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே?

கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து படகு வழியாக நியூசிலாந்தை அடையும் முயற்சியில் சென்ற தமிழர்கள் பலர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து மிகப்பெரிய நாட்டு படகு ஒன்று கடந்த 12-ந்தேதி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. மீன்பிடி படகான இந்த படகில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக பயணம் செய்தது அண்மையில்...

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்: ஜனாதிபதி

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இவ்வாரம் முதல் புதிய உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது...

ஜனாதிபதி வாகன தொடரணி விபத்துக்குள்ளாகியதால் முல்லைத்தீவில் பதற்றம்!!

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாகன தொடரணி முல்லைத்தீவு - புளியங்குளம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, கோடலிக்கல்லு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் இடம்பெற்ற போதைப்பொருள் தொடர்பான நிகழ்வு மற்றும் பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார். இந்நிலையில் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். இராணுவத்...

மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை – பாடசாலை அதிபர் கடிதம்

வவுனியா – ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை என ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அதிபர் கெ.தனபாலசிங்கம், கொழும்பிலுள்ள மதுவரி ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். குறித்த கடிதத்தில், ‘வேலாயுதம் சுரேந்திரனால் எமக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தின்படி, அவரால் கண்டி வீதி, ஓமந்தைப்பகுதியில் அமைக்கப்படும் பியர் விற்பனை நிலையம்...

தைப்பொங்கல் தினத்தில் யாழில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் நேற்றையதினம் (15) வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பட்டப்பகலில் நடைபெற்ற இவ்வாள்வெட்டு சம்பவத்தில் 2 இளைஞர்கள் படு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அதில் ஒரு இளைஞருடைய வலது கை கட்டைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத...

தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது – எம்.ஏ.சுமந்திரன்

புதிய அரசமைப்பினூடாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும். தனி நாடு என்று காலத்துக்குக் காலம் கதைகள் வரும். ஒருமித்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென்று தான் நாம் கேட்கிறோம். அதை விட்டு, தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது. இப்படி நான் சொல்வதனால், வெளியே போகும் போது, கல்லெறி விழுந்தாலும் விழும். ஆனால், நான்...

பருத்தித்துறை பகுதியில் இளைஞர் படுகொலை

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது, இளைஞர் ஒருவரை கோடாரியால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வாசுதேவன் அமல்கரன் (வயது 22) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத...

வடக்கு கிழக்கு வீடமைப்பு திட்டம் தைப்பொங்கலுடன் ஆரம்பம்: ஒவ்வொரு வீடும் 10 இலட்சம் பெறுமதி!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 10 ஆயிரம் வீடுகளில், முதற்கட்டமாக 4,750 வீடுகளை அமைக்கும் பணி தைப்பொங்கல் தினத்துடன் –நாளை- ஆரம்பமாகவுள்ளது. தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சின்...

அதிபர் ஆசிரியர்களை தாக்கும் முயற்சி – மாணவர்கள் போராட்டம்!

தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பாடசாலை மாணவர்கள் ஒன்று திரண்டு ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி பாடசாலைக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறிப்பிட்ட சில மாணவர்கள் பாடசாலையின் ஒழுக்க...
Loading posts...

All posts loaded

No more posts