- Wednesday
- December 24th, 2025
தமிழ் மக்களை ஓரங்கட்டும் செயற்பாட்டினை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பளை பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி மற்றும் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள் பொது...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக செயற்படுவதற்கு நம்பிக்கைக்கு உரியவர் என்று நாடாளுமன்றத்தால் நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஜேவிபி வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வைப்...
மன்னார் மனித புதை குழியிலிருந்து இது வரை 21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். இந்தப் புதை குழியில் இருந்து இதுவரை 276 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு மனுவொன்றை தாக்கல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருக்கு மனநலக் கோளாறு உண்டு என்பதை ஆராயுமாறு நீதித் துறையை நாடப்பட்டுள்ளது. மன நலக்கோளாறு கட்டளைச் சட்டத்தின் 2ஆம் அத்தியாயத்துக்கு அமைய ஜனாதிபதி...
கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் வகையில் மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. மன்னார் சதோச வளாகத்தில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 112ஆவது நாளாக நேற்று வியாழக்கிழமை சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது. இதுவரை வெளியிடப்பட்ட பல...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இணையத்தளத்தில் மஹிந்த மற்றும் ரணில் ஆகிய இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்று முன்தினம் (புதன்கிழமை) நாடாளுமன்ற இணையத்தளத்தில் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால்...
தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு பொதுத் தேர்தலே சிறந்த தீர்வாக அமையும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ண டில்சான் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டுள்ள டில்சான், நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே இவ்வாறு குறிப்பிட்டார். ‘நீதிக்கான குரல்’ எனும் அமைப்பின் கீழ்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திரச்சிகிச்சைகளை முன்னெடுத்த விவகாரம் வைத்தியசாலை நிர்வாகத்துக்குள் பூதாகரமாகியுள்ளது. அதுதொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, பணம் வழங்கி சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...
நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் சட்டம் பொதுவானது என தெரிவித்த சரத் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறை செல்லக்கூட நேரிடும் என கூறியுள்ளார். நாடாளுமன்ற அமர்வு இடம்பெற முன்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரி அவரது சொந்த சொத்தை பங்கிடுவது போல்தான் அரசாங்கத்தை...
வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலைக்குச் செல்லும் வழியில் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் சித்திரவதைக்கும் உள்படுத்தப்பட்டுள்ளார். மூன்று பேர் கொண்ட கும்பல் முச்சக்கர வண்டியில் மாணவியைக் கடத்திச் சென்று முல்லைத்தீவில் வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். “இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முல்லைத்தீவில் வைத்துக்...
நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும் கையொப்பமிட்டு தம்மிடம் பரிந்துரைத்தாலும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்ததாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர். குறித்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற...
பிரதமர் மற்றும் அமைச்சரவை இயங்குவதற்கு .இடைக்காலத் தடை உத்தரவு வழங்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை வழங்கியது. பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் எந்த அதிகாரத்தைக் கொண்டு பதவியில் நீடிக்க முடியும் என்று நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு அறிவித்தல் அனுப்ப மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை வழங்கியது. அத்துடன், இந்த மனு மீதான விவாதம் வரும் 12ஆம் 13ஆம்...
தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரை உபயோகித்து வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தமிழக அரசின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஸ்விட்ஸர்லாந்தினை மையமாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் இயங்கும் புதிய அமைப்பொன்றினால்...
தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் வீதிகளில் சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியில் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட குளத்தினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொது மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக...
விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் என கருணா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயுர் ஊட்டும் நடவடிக்கையிது எனவும் அவர்...
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பில் இன்னும் இரண்டொரு தினங்களில் ஜனாதிபதி முக்கிய தீர்மானம் ஒன்றை எடுப்பார் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது....
மட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்பதாக, நளின் பண்டார மற்றும் சுமந்திரன் எம்.பி.கள் பாராளுமன்றில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்து கேள்வியெழுப்பியுள்ளனர். இன்றைய பாராளுமன்ற அமர்வில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த பிரேரணை மீதான...
நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியுள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஒக்ரோபர் 26ஆம் திகதிக்கு முன்னைய ஐக்கிய தேசிய முன்னணி அரசு அமைவதற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இவ்வாறு அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் புலனாய்வாளர் ஒருவர் கலந்து கொண்டு இன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு மெழுகு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியமை அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களை...
ஆவா குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அசோக் என்ற இளைஞன் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரண்டைந்தார். வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய், சுன்னாகம் உள்ளிட்ட பொலிஸாரால் தேடபட்டு வந்த அவருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பல வழக்குகள் நிலுவையிலுள்ளன. அந்த வழக்குகளில் அசோக் மீது பிடியாணை...
Loading posts...
All posts loaded
No more posts
