- Wednesday
- December 24th, 2025
பகிடிவதை காரணமாக யாழ். பல்கலைக்கழக மாணவனொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைகழகத்தில் தான் மோசமாக பகிடிவதைக்கு உள்ளாகி வருவதாக வீட்டிலிருந்தவர்களிடம் தெரிவித்திருந்த மாணவன் நேற்று (வெள்ளிக்கிழமை) திடீரென அறைக்குள் சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனை அவதானித்த குடும்பத்தினர் மாணவனை மீட்டு உடனடியாக பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், குறித்த மாணவன் மேலதிக சிகிச்சைகளுக்காக...
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த இரண்டாவது சம்பவமும் பதிவாகியுள்ளது. கடந்த மாத இறுதியில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த அதே பாணியில் இந்த இளைஞரும் முயற்சித்துள்ளார். இந்தச் சம்பவம் புதன்கிழமை கோப்பாய் பொலிஸ் நிலைய தடுப்புக்காவல் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. தனக்கு...
வடக்கு மாகாணத்தில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 10 லட்சம் ரூபா நிதியை இழப்பீடாக உடனடியாக வழங்க பிரதமர் ரணில் விக்கிரம சிங்க உத்தரவிட்டார். அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சொத்து இழப்பு மதிப்பீடு நிறைவடைந்ததும் 25 லட்சம் ரூபா வரை காப்பீட்டுப் பணம் வழங்குமாறும் அவர் இதன்போது அறிவுறுத்தினார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை காரணமாக போர்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்பு கூறல் மறைக்கப்பட்டுள்ளதாக லண்டன் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான திணைக்கள உதவி பேராசிரியர் கேட் க்ரோனின் பார்மன் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பற்றிய தகவல்களை வெளியிடும் யூ.என்.டிஸ்பெச் இணையத்தளம், கேட் க்ரோனின் பார்மன் இவ்வாறு குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 10...
வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை பெற்றுத் தருமாறு கூறிவரும் சம்பந்தனோ, ஹக்கீமோ தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட வரவில்லை எனக் கூறிய இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து, இராணுவத்தினரே அந்த மக்களை தோள்களில் தூக்கி சுமந்து காப்பாற்றியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,...
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மேல் மாகாணங்களில், இன்றையதினம் கனத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மத்திய, சப்ரகமுவ மாகாணம் மற்றும் மாத்தறை...
கொழும்பு அரசின் 2006ஆம் ஆண்டு சுற்றறிக்கைக்கு அமையவே, நோயாளர் பகுதியில் கமரா வசதியுடைய நவீன அலைபேசிகள் பயன்படுத்த முடியாது என்பதனை நடைமுறைப்படுத்துகின்றோம் என்று யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் கடமைநேரத்தில் நவீனவகை அலைபேசி களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில்...
புதிய அமைச்சர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றனர். அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :- அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 1. பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர்...
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது, மௌனத்திற்குள் இயங்கு நிலையில் உள்ளதென குறிப்பிட்டு வடமராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வல்லை முனீஸ்வரன் கோயிலை அண்மித்த பகுதிகளில் குறித்த சுவரொட்டிகள் நேற்று (புதன்கிழமை) மாலை ஒட்டப்பட்டுள்ளன. இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த சுவரொட்டிகளை அகற்றப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டியில், ‘தமிழீழ திருநாட்டை மீட்கும் எமது தியாக போராட்டமானது,...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்களையும் வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா உத்தரவிட்டார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பெற்றோல் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. அத்துடன், சுன்னாகம் பொலிஸ் நிலையம் மாற்றப்படவுள்ள வளாகத்துக்கும் கடந்த வாரம் பெற்றோல்...
யாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவர் ஒருவரை கடத்திய இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 பேரை பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட வேளை 3 பேர் தப்பி சென்றுள்ளனர். இந்த நிலையில் 4 பேரை பிடித்த மக்கள், நையபுடைத்த பின்னர் காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். அத்துடன் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர்...
ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 நபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து வேன் உட்பட வாள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இன்று அதிகாலை (18) 3 மணியளவில் மானிப்பாய் பிரதேசத்தில் வைத்துக் சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட 11 பேரில் இரண்டு பேர் ஆவா குழுவில் முக்கியஸ்தர்களான போல் விக்டர் மற்றும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து நடத்தும் கூட்டாட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பே பிரதான எதிர்கட்சியாக இருக்கும் அதனை யாரும் மறுக்க முடியாது. அதனால் நாம் எதிர்கட்சி பதவியை விட்டுக்கொடுக்க போவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்ற பின்னர்...
“தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அப்படியெனில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரும் விடுவிக்கப்பட வேண்டும். இதுவே நியாயமானது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பிரதமர் நியமனத்தின் பின்னர் ரணில் விக்ரமசங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை இன்று நடத்திய சந்திப்பில் ஆற்றிய உரையின் போது ஜனாதிபதி இதனைக் கூறினார். அவரது...
புதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளித்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளார். கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து பதவி விலகலுக்கான ஆவணத்தில் மஹிந்த கையெழுத்திட்டுள்ளார். புதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளித்து தனது பதவியிலிருந்து விலகியதாக, இதனை தொடர்ந்து இடம்பெற்ற...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பிரதமராக பதவியேற்பார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி உத்தியோகப்பூர்வமான அறிவிப்பை நேற்று மாலை வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் தான் புதிதாக ஏற்றுக்கொண்ட பிரதமர் பதவியை இராஜினாமா...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் மீண்டும் இணைந்து செயற்படத் தயார் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பிலான உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சந்தித்து கலந்துரையாடியது. இச்சந்திப்பின்போதே ஜனாதிபதி...
பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரமத நீதியரசர் நளின் பெரேரா உட்பட எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் ஏகமனதாக இந்த மனுக்கள்...
ஐக்கிய தேசியக் கட்சியுடனான ஒப்பந்தம் தொடர்பில் கூட்டமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. பொறுப்புக்கூறல், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்தே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்ததாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பு இரகசிய ஒப்பந்தம் செய்து தமிழீழத்தை அடையப் போவதாக மஹிந்த...
Loading posts...
All posts loaded
No more posts
