Ad Widget

யுத்தக் குற்றங்களை மறைப்பதற்கு ஜனாதிபதி நாடகம்: முதலமைச்சர் சி.வி. குற்றச்சாட்டு!

இலங்கை இராணுவத்தின் யுத்தக் குற்றங்களை மறைப்பதற்கே தமிழ் அரசியல் கைதிகளைப் பகடைக்காய்களாக பயன்படுத்துவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை இராணுவத்தினரை யுத்தக் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவே தமிழ்க் கைதிகளைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி அவர்களின் விடுதலை குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல முறை சுட்டிக்காட்டியுள்ளதுடன், அவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியான நீங்கள் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் உங்கள் வாக்குறுதிகளில் நம்பிக்கை இழந்தே தமிழ் அரசியல் கைதிகள் தற்போது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இனியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசியல் செய்யாது அவர்களின் எதிர்காலம் குறித்து விரைந்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என அவர் மேலும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts