கடலட்டை பிடித்தோரை மடக்கிப் பிடித்த வடமராட்சி மீனவர்களை மிரட்டிய பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்!!

வட­ம­ராட்சி கிழக்­குக் கட­லில் கட­லட்டை பிடித்த வெளி­மா­வட்ட மீன­வர்­கள் பிர­தேச மீன­வர்­க­ளால் திட்­ட­மிட்டு மடக்­கிப் பிடிக்­கப்­பட்­ட­னர். மடக்­கிப் பிடித்த மீன­வர்­களை வைத்து உரி­மை­யா­ளர்­களை இனங்­காண பிர­தேச மீன­வர்­கள் திட்­ட­மிட்­ட­போ­தும், பொலி­ஸார் அச்­சு­றுத்­தும் வகை­யில் செயற்­பட்டு பிடிக்­கப்­பட்ட மீன­வர்­களை மீட்­டுச் சென்­ற­னர்.

வட­ம­ராட்சி கிழக்­குக் கட­லில் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் கட­லட்­டைத் தொழி­லில் ஈடு­ப­டு­கின்­ற­மையை ஆதா­ர­பூர்­வ­மாக நிரூ­பிக்க முயன்ற பிர­தேச மீன­வர்­கள் மனச் சோர்­வு­டன் திரும்­பி­னர்.

வட­ம­ராட்சி கிழக்­குக் கடற்­ப­ரப்­பில் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் கட­லட்­டைத் தொழி­லில் ஈடு­ப­டு­கின்­ற­னர் என்­றும், அத­னால் தமது வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­ப­டு­கின்­றது என்­றும் வட­ம­ராட்­சிக் கிழக்கு மீன­வர்­கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­ற­னர்.

வட­ம­ராட்சி கிழக்­குக் கடல்­ப­ரப்­பில் வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளால் மேற்­கொள்­ளப்­ப­டும் கட­லட்­டைத் தொழி­லைத் தடை செய்ய வேண்­டும் என்று அவர்­கள் பல தரப்­பி­ன­ரி­டம் கோரிக்­கை­கள் விடுத்­தி­ருந்­த­து­டன், பல போராட்­டங்­க­ளை­யும் செய்­தி­ருந்­த­னர்.

இது தொடர்­பாக கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதி தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சோ.சேனா­தி­ராசா, எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆயி­யோர் கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத்­துறை அமைச்­சர் நாடா­ளு­மன்­றில் சந்­தித்­தி­ருந்­த­னர்.

வட­ம­ராட்சி கிழக்­கில் வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளால் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­கள் தொடர்­பில் அமைச்­ச­ருக்கு விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது. கட­லட்டை பிடிப்­ப­தற்­கான அனு­மதி வழங்­கப்­ப­டும் விதிக்­கப்­ப­டும் நிபந்­த­னை­களை மீறி தொழில் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­போ­தும், கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுப்­ப­தில்லை என்­றும், கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளால் அமைச்­ச­ருக்­குச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

கட­லட்டை பிடிப்­ப­தற்கு விதிக்­கப்­ப­டும் நிபந்­த­னை­கள் உரிய முறை­யில் பின்­பற்­றப்­ப­டு­வதை உறுதி செய்­யு­மாறு, கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளப் பணிப்­பா­ள­ருக்கு அமைச்­சர் உட­ன­டி­யா­கவே பணிப்­புரை விடுத்­தி­ருந்­தார். அதன்­பின்­ன­ரும் வட­ம­ராட்­சிக் கிழக்­குக் கடற்­ப­ரப்­பில் வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளால் கட­லட்­டைத் தொழில் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தது.

வட­ம­ராட்சி கிழக்­குக் கடற்­ப­ரப்­பில் இரவு வேளை அனு­ம­தி­யின்­றிக் கட­லட்டை பிடித்­த­னர் என்று தெரி­வித்­துக் கடற்­ப­டை­யி­ன­ரால் 81 மீன­வர்­கள் கடந்த மாதம் 18 ஆம் திகதி அதி­காலை கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­க­ளின் பட­கு­க­ளும் கைப்­பற்­றப்­பட்­டன. பின்­னர் அவர்­க­ளி­டம் இர­வில் கட­லட்டை பிடிப்­ப­தற்­கான அனு­மதி உள்­ளது என்று தெரி­வித்து கடற்­ப­டை­யி­னர் அவர்­களை விடு­வித்­த­னர். அத­னால் உள்­ளூர் மீன­வர்­கள் முரண்­பட்­ட­னர். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பா­ணம் வரும்­போது எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­ப­டு­வ­தற்கு மீன­வர்­கள் திட்­ட­மிட்­ட­னர்.

அதை­ய­டுத்து கடந்த மாதம் 22ஆம் திகதி கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத்­துறை அமைச்­சர் காமினி விஜித் விஜி­த­முனி செய்சா யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து வட­ம­ராட்சி கடற்­றொ­ழில் சமா­சத் தலை­வர் வர்­ண­கு­ல­சிங்­கம், மீன­வர் சங்­கப் பிர­தி­நி­தி­க­ளைச் சந்­தித்­தார்.

இந்­தச் சந்­திப்பு கடற்­றொ­ழில் சமா­சத் தலை­வர் வே.தவச்­செல்­வத்­தால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. யாழ்ப்­பா­ணம் நக­ரில் உள்ள விடுதி ஒன்­றில் சந்­திப்பு நடை­பெற்­றது.

“கடற்­றொ­ழில் அமைச்­சர் வட­ம­ராட்சி கிழக்­கில் நடை­பெ­றும் கட­லட்­டைத் தொழி­லுக்கு தடை விதிக்­கப்­ப­டும் என்று உறு­தி­ய­ளித்­தார். அங்கு கட­லட்­டைத் தொழி­லில் ஈடு­ப­டும் இரு நிறு­வ­னங்­க­ளின் செயற்­பா­டு­க­ளும் நிறுத்­தப்­ப­டும் என்­றும் இர­வில் ஒளி­பாய்ச்சி மீன்­பி­டிப்­ப­தற்­கும் தடை­வி­திக்­கப்­ப­டும் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

அமைச்­ச­ரின் உறு­தி­மொ­ழியை அடுத்து போராட்­டம் நடத்­தும் முடிவை மீனவ சங்­கங்­கள் கைவிட்­டன. இந்த உறு­தி­மொ­ழி­கள் நிறை­வேற்­றப்­ப­டா­விட்­டால் போராட்­டங்­கள் நடத்­து­வது பற்றி ஆலோ­சிப்­பது என்று மீனவ சங்­கங்­கள் முடி­வெ­டுத்­துள்­ளன.”- என்று இந்­தச் சந்­திப்­பின் பின்­னர் கடற்­றொ­ழில் சமா­சத் தலை­வர் வே.தவச்­செல்­வம் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­தச் சந்­திப்பை அடுத்து அரச தலை­வர் வரு­கை­யின்­போது நடத்­தத் திட்­ட­மிட்­டி­ருந்த போராட்­டத்தை வட­ம­ராட்சி கிழக்கு மீன­வர்­கள் கைவிட்­ட­னர்.

தமது கோரிக்­கை­க­ளுக்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாத நிலை­யில் அட்­டைத் தொழில் ஈடு­ப­டு­ப­வர்­களை கையும் மெய்­யு­மா­கப் பிடிப்­ப­தற்கு வட­ம­ராட்சி மீன­வர்­கள் திட்­ட­மிட்­ட­னர். வட­ம­ராட்சி மீன­வர் சங்­கங்­க­ளின் சமா­சத்­துக்­குட்­பட்ட 12 சங்­கங்­க­ளைச் சேர்ந்த மீன­வர்­க­ளும் நேற்­றுக் கட­லுக்­குச் செல்­ல­வில்லை.

சக்­கோட்­டைக் கரை­யில் அமர்ந்­தி­ருந்­த­னர். அதி­காலை 3 மணி­ய­ள­வில் கட­லட்­டைத் தொழி­லுக்­குச் சென்ற வெளி­மாட்ட மீன­வர்­கள் 8 பேரை மீன­வர்­கள் கையும் மெய்­யு­மா­கப் பிடித்­த­னர். அவர்­கள் பய­ணித்த பட­கு­க­ளும் கடற்­க­ரை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டன. பிடிக்­கப்­பட்ட மீன­வர்­கள் சக்­கோட்­டைக் கடற்­தொ­ழி­லா­ளர் சங்­கக் கட்­ட­டத்­தில் தடுத்து வைக்­கப்­பட்­ட­னர்.

கடற்­றொ­ழில் அமைச்­ச­ரின் வாக்­கு­றுதி பொய்த்­துப் போயுள்­ளது. மீன்­பிடி அமைச்­சர் உடன் நடை­மு­றைக்­கு­வ­ரும் வகை­யில் கட­லட்­டைத் தொழி­லைத் தடை­செய்ய வேண்­டும், டைன­மெட் பாவ­னையை தடை செய்­ய­வேண்­டும், சுருக்கு வலை, ரோலர், ஒளி பாய்ச்சி மீன்­பி­டிக்­கும் தொழில்­க­ளைத் தடை செய்ய வேண்­டும்.

அது­வரை நாங்­கள் பிடித்­துள்ள மீன­வர்­களை விட­மாட்­டோம் என்று மீன­வர்­கள் தெரி­வித்­த­னர். பிடிக்­கப்­பட்ட வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளுக்கு உணவு, குடி­தண்­ணீர் வழங்கி அவர்­க­ளைப் பாது­காப்­பா­கத் தடுத்து வைத்­த­னர்.

அர­சி­யல்­வா­தி­கள், பிர­தேச செய­லர், கடற்­தொ­ழில் நீரி­யல் வளத்­தி­ணைக்­கள அதி­கா­ரி­கள், பொலி­ஸார் காலை 10.30 மணி­ய­வில் சம்­பவ இடத்­துக்கு வந்­த­னர். அவர்­கள் மீன­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னர்.

“அனை­வ­ரும் வாக்­கு­றுதி வழங்­கு­கின்­ற­னர். ஆனால் அவை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தில்லை. சட்ட விரோ­தத் தொழில்­கள் இடம்­பெ­று­கின்­றன. கடற்­தொ­ழில் அமைச்­சர் தடை உத்­த­ரவை வழங்­கிய போதும் கட­லட்­டைத் தொழில் இடம்­பெ­று­கி­றது. யார் அனு­மதி வழங்­கு­கின்­ற­னர்?. மீன­வர்­க­ளைப் பிடிப்­பது எமது நோகக்­க­மல்ல.

எமது பகு­தி­க­ளில் இவ்­வா­றான தொழல்­கள் இடம் பெறு­வ­தைத் தடுப்­பதே நோக்­கம். இப்­போ­தும் அந்­தத் தொழிலை நிறுத்­து­வ­தற்கே மீன­வர்­களை பிடித்­துள்­ளோம். உடன் நடை­மு­றைக்கு வரும் வகை­யில் கடற்­தொ­ழில் அமைச்­சர் எமக்கு உத்­த­ர­வா­தம் தர­வேண்­டும். அது­வரை மீன­வர்­களை விடு­விக்க முடி­யாது” என்று வட­ம­ராட்சி மீன­வர்­கள் தெரி­வித்­த­னர்.

கட­லட்­டைத் தொழி­லுக்­குத் தீர்வு கிடைக்­கும்­வரை தொடர்ந்து போரா­டு­வ­தற்கு மீன­வர்­கள் முடிவு செய்­த­னர். சக்­கோட்­டைக் கடற்­தொ­ழி­லா­ளர் சங்­கத்­துக்கு முன்­பாக கொட்­ட­கை­களை அமைத்து போராட்­டத்­துக்கு தயா­ரா­கி­னர்.

அப்­போது காங்­கே­சன்­துறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் (தரம் 1) சம்­பவ இடத்­துக்கு வந்­தார். மீன­வர்­க­ளு­டன் பேச்சு நடத்­தி­னார். அவ­ருக்­கும் மீன­வர்­கள் தமது முடி­வைத் தெரி­வித்­த­னர். மீன­வர்­களை அச்­சு­றுத்­தும் தொனி­யில் உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் நடந்­து­கொள்­ளத் தொடங்­கி­னார்.

மீன­வர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் கருத்­துத் தெரி­விக்­கத் தொடங்­கும்­போது, தனக்கு அரு­கில் இருந்த பொலிஸ் அதி­கா­ரி­யைப் பார்த்து “வீடியோ எடுங்­கள்” என்று உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் கூறி­ய­வண்­ணம் இருந்­தார். அனை­வ­ரை­யும் வீடியோ எடுங்­கள் என்­றும் அடிக்­கடி கூறிக் கொண்­டி­ருந்­தார். அரு­கில் இருந்த அதி­கா­ரி­யும் மீன­வர்­க­ளைக் காணொலி எடுத்­தார். அத­னால் மக்­கள் தமது கருத்­தைத் துணிந்து கூற முடி­யாத நிலை ஏற்­பட்­டது.

நீங்­கள் செய்­வது சட்­டப்­படி சரி­யான நட­வ­டிக்கை அல்ல. எம்­மி­டம் உங்­கள் வீடி­யோக்­கள் உள்­ளன. உங்­கள் அனை­வ­ரும் கைது செய்ய முடி­யும். காணொ­லி­க­ளின் உத­வி­யு­டன் அனை­வ­ரை­யும் கைது செய்ய முடி­யும். 20 ஆண்­டு­கள் உங்­க­ளைச் சிறை­யில் அடைக்க முடி­யும் என்று கடுந்­தொ­னி­யில் காங்­கே­சன்­துறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் கூறி­னார்.

காங்­கே­சன்­துறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் (தரம் 1) ஒரு­பு­றம் மீன­வர்­களை அச்­சு­றுத்­தும் தொனி­யில் பேசிக் கொண்­டி­ருக்க ஏனைய பொலி­ஸார் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த வெளி­மா­வட்ட மீன­வர்­களை மெல்ல மெல்­லத் தமது வாக­னத்­தில் ஏற்­றி­னார்­கள்.

அதைச் சற்­றுத் தாம­த­மா­கவே மீன­வர்­கள் அவ­தா­னித்து சங்க வளா­கக் கதவை மூட முயன்­ற­போ­தும், அதற்­குள்­ளாக பொலிஸ் வாக­னம் சீறி வெளி­யே­றி­யது. அப்­போது காங்­கே­சன்­துறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் கேற்றை மூடச் சொன்­ன­வ­ரை­யும் வீடியோ எடுங்­கள் என்­றார்.

மீட்­டுச் சென்ற வெளி­மா­வட்ட மீன­வர்­கள் பருத்­தித்­துறை பொலிஸ் நிலை­யத்­தில் தடுத்து வைக்­கப்­பட்­ட­னர். இந்த விட­யம் தொடர்­பில் மேல­திக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.

Related Posts