- Tuesday
- June 2nd, 2026
நாட்டின் வளிமண்டலத்தில் காணப்பட்ட தாழமுக்க நிலை தற்போது நாட்டில் இருந்து விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் மழை வீழ்ச்சி குறைவடைய வாய்ப்புகள் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனினும் காற்று தொடர்ந்து அதிகரித்து வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கேகாலை – தெஹியோவிட்ட - ஹல்தொட்டை – டெனிஸ்தோட்டம் பகுதியில் மண்சரிவு ஒன்று ஏற்பட்டதில்...
சிறீலங்காவில் இடம்பெற்ற போரின்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான கொடூரங்கள் இடம்பெற்றதை உறுதிப்படுத்திய சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி உண்மையானது என சிறீலங்கா அரசாங்கம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு சில மாதங்களில் வெளியான சனல்-4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட காணொளி...
வீதிகளில் காட்டாறு கரைபுரண்டது தலைகாட்ட விடாது பேய் மழை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு 30 வீடுகளின் கூரைகள் அள்ளுண்டன நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக, இதுவரையிலும் இருவர் மரணமடைந்துள்ளனர், நால்வரைக் காணவில்லை மற்றும் 1,871 குடும்பங்களைச் சேர்ந்த 7,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 22ஆம்...
ஐ, நா. சபையின் மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன வெளியேற்றப்பட்ட பின்னணியில் நவீன உலக ஊடகத்துறை இருளில் வைக்கப்பட்டு, சர்வதேச நாடுகள் பார்த்திருக்க வன்னி மண்ணில் நடத்தப்பட்டஅந்தக் கொடூரம், பின்னர் காணொளிகளகக் கசிய, சனல் 4 போன்ற ஊடகங்களின் வெளியீடுகள் அவற்றை தெளிவாகப் போர்க்குற்றங்களாக நிரூபித்து ஆவணத் தொடர்கள் வெளியிட, ஐ....
தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்திலிருந்து தாம் நகர்ந்துவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவரருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து நேற்று கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்டுள்ள இரா.சம்பந்தன் இந்தியாவின் முன்னணி பத்திரிகையான த ஹிந்து பத்திரிகைக்கு...
நவாலி, செம்மணி, நாகர்கோவில் படுகொலைகள் குறித்த விசாரணைகளுக்குத் தயாரா என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் சவால் விடுத்துள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். தமிழினப் படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் அஞ்சலி நிகழ்வு நேற்றய தினம் நவாலி சென்பீற்றஸ் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் பலியானோருக்காக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் இடம்பெற்றது. அஞ்சலி நிகழ்வை...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. 'படுகொலைக்குக் காரணமானவர்கள்' என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தங்களது விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள். ராஜீவ்காந்தி படுகொலையின் மிக முக்கிய ஆவணம் என ஜெயின், வர்மா கமிஷன் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டது சம்பவ...
ஐ.நா உள்ளக விசாரணை நிறைவடைந்த பின்னர் அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை நடைமுறைப்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (13) வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐ.நாவின் உள்ளக விசாரணைகளை நடாத்துவதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்துவிட்டு...
யாழ்.குடா நாட்டு நீர் மாசடைந்திருப்பதால் தனக்குத் தேவையான குடிநீரை கொழும்பிலிருந்தே கொண்டுசெல்வதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். குடா நாட்டில் சீரற்ற கழிவகற்றல் கட்டமைப்பு இன்மையினால் குடிநீர் மாசடைந்திருப்பதாக தெரிவித்த அவர், இதனால் சிறுநீரக நோய் ஏற்படும் அபாயமும் இருப்பதாகக் கூறினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு...
இறுதியுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் சரணடைவோரை பாதுகாக்குமாறு ஜெனீவா உட்பட பல்வேறு சர்வதேச நாடுகளிடம் உதவிகோரியபோது எவரும் உதவி வழங்க முன்வரவில்லை என அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள் தொடர்பில் முழுப்பொறுப்பையும் பசில் ராஜபக்சவே ஏற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தெரிவிக்கையில் தமிழ் மக்கள் மீது உண்மையான...
தமிழ் சமூகத்தின் மீது நம்பிக்கையின்றி போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் இராணுவத்தினரை தொடர்ந்தும் நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாயின் மற்றொரு பிரபாகரன் மறு அவதாரம் எடுத்தால் எவரையும் குற்றஞ்சாட்டமுடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் சமஷ்டி பிரிவினை அல்ல என்பதை வலியுறுத்தியவர் மத்திய அரசாங்கத்தின் நேரடித்தலையீடுகளால் வடக்கு மாகாணசபை தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்....
முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் இறந்த தனது உறவினர்களுக்காகவும், முள்ளியவளையில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும் மாணவி ஒருவர் பள்ளிச் சீருடையில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இறுதிக்கட்டப் போரின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனவிடுதலைப்போராட்டத்தில் மாணவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அந்தவகையில் தனது மக்களின் விடுதலைக்காக முதன்முதலாக உயிர் நீத்த முதல் மாணவ வீரன் பொன் சிவகுமார்...
சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயலகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் இந்த கோரிக்கையை எதிர்கட்சி தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அரசாங்கத்திடம் விடுத்துள்ளார். சின்குவா செய்தி ஸ்தாபனத்திற்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை...
வங்காளதேசம் டாக்காக நகரில் உள்ளூரில் கிரிக்கெட் போட்டி நடத்தினர். அப்போது இரு அணியினர் விளையாடி கொண்டு இருந்தனர். ஒரு அணியின் சார்பில் பாபுல் ஷைக்தர் என்ற 16 வயது சிறுவன் விக்கேட் கீப்பராக இருந்தார். அப்போது பந்து வீசியவர் நோபால் வீசியது குறித்து அம்பயருடன் பேசிகொண்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த பேட்ஸ்மேன் அங்கிருந்த ஸ்டெம்பை...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவது தடைசெய்யப்பட்டிருந்தாலும், வடக்கு மக்கள் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் கொடிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் போன்றன தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை...
தலைச்சுற்று ஏற்பட்டு கீழே விழுந்ததில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி புதன்கிழமை (11) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரந்தன் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் விக்னேஸ்வரன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விடுதலைப் புலிகள்...
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் 'முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்’ இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், கஜதீபன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ஈகை சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியுடன், அகவணக்கம் செலுத்தி...
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முன்னிலையாகி போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்வதற்குத் தீட்டப்பட்ட திட்டம், செயற்படுத்தப்படுகின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளதெனவும், உயிர்தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் இருக்கிறது என்றும், அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்திருந்த கருத்திலிருந்து, இந்தச் சதித்திட்டம் தொடர்பிலான கருத்து, அம்பலமாகியுள்ளது என அவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் பணியாட்...
"மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகாக்களான மோசடிக்கார கும்பல் விரைவில் கைதாகும்"இவ்வாறு அரசு நேற்று புதன்கிழமை அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளது. "மஹிந்த ராஜபக்ஷ ஊழல், மோசடி, திருட்டு என கறைபடிந்த சரிதை கொண்டவர். எனவே, அவர் தன்னை கறை படியாத தலைவர் எனக் கூற முடியாது. சதாம் ஹுசைன், கடாபி, ஹொஸ்னி முபாரக் போன்ற தலைவர்களும் பல...
Loading posts...
All posts loaded
No more posts
