Ad Widget

வவுனியா ஜோசப் முகாமுக்குள் புகுந்து ஐநா அதிகாரி சோதனை!

சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் நேற்றுமுன்தினம் வவுனியாவில் இயங்கும் இராணுவத்தினரின் ஜோசப் சித்திரவதை முகாமுக்குள் சென்று சோதனை நடாத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னிப் படைகளின் தலைமையகமாக இயங்கும் ஜோசப் முகாமில் கடந்த காலங்களில் பலர் இரகசியமாகத் தடுத்துவைத்து படுகொலைகள் செய்யப்பட்டதாகவும், இன்னமும் சித்திரவதைகள் தொடர்வதாகவும் அடிப்படையில் அது ஒரு சித்திரவதை முகாம் எனவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுவருகின்றன.

சிறீலங்கா இராணுவத்தால் சித்திரவதைசெய்யப்பட்ட பலர், ஜோசப் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக ஐநா நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த ஜஸ்மின் சூக்காவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள, சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான மனிதநேயமற்ற முறையில் நடத்தப்படுதல் மற்றும் தண்டிக்கப்படுதல் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர், ஜுவான் மென்டஸ் ஜோசப் முகாமுக்கு பயணம் செய்து அங்கு சோதனைகளை மேற்கொண்டுள்ளார்.

ஐநாவின் சிறப்பு அறிக்கையாளரான ஜூவான் மென்டஸ் கடந்த 29ஆம் திகதி சிறீலங்காவுக்கு பயணம் மேந்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts