Ad Widget

கைதுவேட்டைக்கான காரணத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் அரசு!

“புனர்வாழ்களிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்படுவதால் மக்கள் மத்தியில் அச்சநிலை உருவாகியுள்ளது. எனவே, கைதுக்கான காரணத்தை அரசு உடனடியாகத் தெளிவுப்படுத்த வேண்டும்.” இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தியது.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நுண்நிதியளிப்புச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியும் குழுக்களின் பிரதி தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு வலியுறுத்தினார்.

“புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அச்சநிலை தொடர்கின்றது. எனவே, அரசு உண்மையைத் தெளிவுப்படுத்த வேண்டும். வடக்கில் இன்று வறுமைநிலை தலைதூக்கியுள்ளது. வேலையில்லாப் பிரச்சினையும் உச்சத்தை தொட்டுள்ளது. அலுவலக உதவியாளர் பதவிக்கு சிறப்புப் பட்டம் பெற்ற பட்டாதாரிகள் விண்ணப்பிக்கும் அளவுக்கு நிலைமை கவலையாக இருக்கிநறது. எனவே, புதிய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இன்று எமது பகுதியில் இராணுவத்தின் கெடுபிடிகள் மீளத் தலைதூக்கியுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று புரியவில்லை. புதிய ஜனாதிபதியும், பிரதமரும் வந்த பின்னர், நாட்டின் எந்தப் பகுதிக்கும் சுதந்திரமாக செல்லாம் எனக் கூறப்பட்டது. அதிலும் தற்போது மாற்றம் வந்துள்ளதுபோல் தெரிகிறது. இந்நிலைமாற வேண்டும்.

வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மக்களுக்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இனியாவது அரசு ஒரு வழியைக் காட்டும் என நம்புகிநறோம். எனவே, அரசு எங்களை விட்டு விலகிப்போகக் கூடாது.

அதேவேளை, எம்.பிக்களுக்கிடையில் நேற்று (நேற்றுமுன்தினம்) ஏற்பட்ட மோதலானது நாடாளுமன்றத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. வீரவேட்டுக்களை உன்னத சபையில் தீர்க்க வேண்டாம். சபையில் இப்படிச் செயற்பட்டால் நாடாளுமன்றம் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்” – என்றும் செல்வம் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

Related Posts