- Monday
- July 28th, 2025

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா என்ற கலைநேசன் (வயது 46) இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள தனது வீட்டுக்கு இன்றையதினம் காலை 6.30 மணிக்கு வருகை தந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார், தனது கணவரை...

பெறுமதி சேர்த்துக்கொள்ளப்பட்ட வரிக்கமைய நூற்றுக்கு 11 வீதமான வரியானது 15 வீதமாக இன்று முதல் அதிகரிக்கும் என்று தேசிய வருமான வரி திணைக்களம் அறிவித்துள்ளது. நிதியமைச்சின் முன்மொழிவுக்கமைய இவ் வற் வரி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 11 வீதமாக இருந்த வரியானது இன்று நள்ளிரவுக்கு முதல் மாற்றப்படாவிட்டால் நாளை(03) தொடக்கம் மாற்றமடையும். எவ்வாறிருப்பினும் இதுவரை...

வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து சிங்கள இனவாதக் கட்சிகள் சில இணைந்து கொழும்பு நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்னர் வழக்குத் தொடர்ந்தமை யாவரும் அறிந்ததே. அதையடுத்து வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. இந்த அழைப்பாணைக்கமைய முதலாம் எதிரியாக தமிழரசுக்...

இலங்கையின் வடக்கே, இராணுவ முகாம் ஒன்றுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அத்துமீறி நுழைந்ததாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளதாக பிரதமர் விமர்சித்துப் பேசியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20-வது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றியிருந்த போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார். கிளிநொச்சியில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்றின்போது, எதிர்க் கட்சித்...

இன்று மே தினமாகும். (சர்வதேச தொழிலாளர் தினம்) 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன...

வட மாகாணத்துக்கான நீர் விநியோகம் மற்றும் நிலத்தடி நீர் மாசடைவதை தடுப்பதற்கான வழிமுறைகள் என்பவற்றை குறுகிய மற்றும் நீண்ட கால செயற்றிட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை பணித்துள்ளார். எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் ஹக்கீமின் தலைமையில் நடைபெறவுள்ள வட...

உலக தொழிலாளர் தினமான மே தினத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பிவைத்துள்ளனர். அர்ப்பணிப்பதே குறிக்கோள்: ஜனாதிபதி '2015இல், நாம் அடைந்த புதிய ஜனநாயக சுதந்திரப் பிரவேசத்தினூடே, புதிய பொருளாதார, அரசியல் அவகாசத்துக்குள் காலடி வைத்துள்ள தற்போதைய சூழலில் மலர்ந்துள்ள இந்த மே...

"வடக்கு, கிழக்கில் தொடரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கைதுவேட்டை உடன் நிறுத்தப்படவேண்டும். தமிழ் மக்கள் அச்சமின்றி வாழும் நிலைமை அங்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.'' இவ்வாறு அரசை வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். "கைதுகள் இனிமேலும் தொடர்ந்தால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாம் தயக்கமின்றி எடுப்போம். காரணமின்றி கைது செய்யப்பட்டவர்கள் உடன்...

ஆசிய நாடுகளை வாட்டியெடுத்து வரும் வெப்ப சலனத்தின் (எல்-நினோ) தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் 'லா -நினோ' சலனம் காரணமாக பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கிய வெப்ப சலனம் காரணமாக, பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத...

இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக துறவறம் பூண்டுள்ளனர். கண்டக்குளி சமுத்ராசன்ன விகாரையின் தலைமை பிக்குவான பெந்திவெவ தியசேன தேரரின் வழிநடத்தலில் இந்தச் சிறார்கள், ஓராண்டுக்கு முன்னர் பௌத்த பிக்குகளாக மாறினார்கள். துறவிகளாகி ஓராண்டுக்குள் சிங்கள...

வவுனியாவில் அமைந்துள்ள தாண்டிக்குள விவசாயப் பண்ணைக்குரிய நிலத்தில் பொருளாதார அபிவிருத்தி மையம் அமைப்பதற்காக றிசாட்பதியுதீன் அவர்களின் அமைச்சுக்கு வன்னி மாவட்ட சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தினால் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி 2016ஆம் ஆண்டு ஒலிபரப்பாகிய மின்னல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாண்டிக்குள விவசாயப் பண்ணை அமைந்துள்ள நிலம் 1989ஆம் ஆண்டு மத்திய...

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் இடம்பெறும் தொடர் கைதுகளால் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 30 நாள்களுக்குள் 33 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் வடக்கு, கிழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமுக்கும், கொழும்பு நான்காம் மாடிக்கும் கொண்டுவரப்பட்டுள்ளனர். சிலர் வவுனியாவிலுள்ள பயங்கரவாத தடுப்புப்...

"இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்துவதற்கோ, தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கோ அரசு ஒருபோதும் இடமளிக்காது. இதனை மீறும் எந்தவொரு வரைவுக்கும் - தீர்மானத்திற்கும் அரசு ஆதரவு வழங்கவே மாட்டாது." இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சியுடன் கூடிய சமஷ்டி முறைமையே அவசியம் என்று வடக்கு...

முன்னாள் விடுதலை புலிகளின் பிரதேசிய தலைவர்கள் சிலரை கைது செய்தமைக்கான காரணம், சமீபத்தில் வடக்கில் தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைவாகவே என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். பி.பி.சி வானொலிக்கு கருத்து தெரிவித்த அவர், குறித்த கைதுகளை காவற்துறை பயங்கரவாத புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார்.முன்னாள் விடுதலை புலிகளின்...

உலகிலேயே முப்படையை பெற்றிருந்த வலிமையான போராளிகள் இயக்கம் என்ற பெருமை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. இலங்கை அரசுக்கு பெரும் அச்சத்தை கொடுத்ததில் விடுதலைப்புலிகளின் வான்படை பிரிவுக்கு மிக முக்கிய பங்கு இருந்தது. விடுதலைப்புலிகளின் வான் படைப் பிரிவு மற்றும் அதன் வல்லமை குறித்து உலக நாடுகளை வியந்து பார்த்த காலம் இருந்தது. விடுதலைப்புலிகளின்...

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், வெள்ளை வானில் வந்தவர்களால் புதன்கிழமை (27) மாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். எனினும், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் இதுவரையில் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை. ஜோர்ஜ் இராஜநாயகம் மற்றும் வி.மைக்கல் என்ற இருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவர்களை வானில்...

நில அளவைத் திணைக்களத்தினால் பல இடங்களிலும் காணி அபகரிப்பு நடைபெறும் எனத் தெரிந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அக்கறை செலுத்தாமையால் கடந்த செவ்வாய்க்கிழமை செம்மலைப் பகுதியிலுள்ள 120 ஏக்கர் தென்னங்காணி படையினர் வசம் சென்றுவிட்டது. இது குறித்துத் தெரியவருவதாவது, படையினரின் பொதுத் தேவைக்காக காணிகளை அபகரிக்கும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி அளவீடுகள் நடைபெற்று வருகின்றது....

யாழ்ப்பாண மாவட்டத்தில் சில இடங்களில் பொலிஸார் அசமந்தமாக செயற்படுவதாக எனக்கும் முறைபாடுகள் கிடைத்துள்ளன. இதை நாம் சாதாரணமாக விட்டுவிட முடியாது' என யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார் யாழ். மாவட்ட சிவில் சமூக கூட்டம், யாழ். மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (26)இடம்பெற்றது. இதன் போது மேற்படி விடயத்தினை யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் கட்டளையிடும் அதிகாரியான நகுலன் என்றழைக்கப்படும் சிறிசிவமூர்த்தி கணபதிபிள்ளையை ஒளிந்திருக்குமாறு நான் சொன்னேன் என்று கூறிய நீர்வேலி முகாமிலிருந்து நகுலனின் வீட்டுக்கு வந்து செல்லும் ரவி, அவன் ஏன் ஒழிந்து இருக்கவில்லை என்றும் கேட்டுள்ளார். நகுலன், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (ரி.ஐ.டீ) யாழ்ப்பாணம், நீர்வேலி...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்பட்டு வருவதனால், புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ள புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன் என்றழைக்கப்படும் ராம் என்பவர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (ரி.ஐ.டீ) கடந்த 24ஆம் திகதியன்று...

All posts loaded
No more posts