- Monday
- July 28th, 2025

சாத்வீக போராட்டங்களை சர்வதேச ரீதியில் மேற்கொண்டு காணி சுவீகரிப்பு மற்றும் ஏனைய உரிமைகளை பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை இயக்கதின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 30வது நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, கடந்த காலத்தினைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் எமது எதிர்காலம் பற்றியும்...

முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதேசத்தில் படையினரின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டு வரும் புதிய விகாரை அமைக்கும் பணிகளை நிறுத்துவதற்கு காணி உரிமைப் பத்திரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தடையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தந்தையின் பெயரில் காணி உரிமைக்கான அனுமதிப்பத்திரம் உள்ளதால் தனது காணியையும் உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப்பணிகளை சட்டத்தின் மூலமும் நிறுத்த முடியவில்லையென காணியின் தற்போதைய...

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் உயர் மட்டக்குழு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முக்கிய விசாரணையாளர்கள் 7 பேர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்குடன் புலம்பெயர் நாடுகளிலிருந்து செயற்படுபவர்களை இலக்கு வைத்து குறித்த குழு தேடுதலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள்...

அண்மையில் சிறுவர் இராஜாங்கப் பிரிவு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், கடந்த அரசாங்கத்தில் நான் உட்பட 90ஆயிரம் பெண்கள் விதவையாக்கப்பட்டோம் எனவும் விதவைகளாக தகுதியற்ற இளம் பெண்கள் அந்த அரசிலே விதவைகளாக்கப்பட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த அரசிலேயே வெள்ளை வான் கடத்தல்,...

யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் வாள், கைக்கோடரி மற்றும் இரும்பு கம்பிகளுடன் இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிளில் வன்முறை கும்பல் ஒன்று நேற்று முன்தினம் வர்த்தக நிலையப் பணியாளர்கள் மற்றும் வீதியால் சென்றவர்களை அச்சுறுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் பல்சர் வகை உந்துருளியில் சில்வர் கலர் கோடரி மற்றும் வாள்களுடன்...

இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா நேற்று (வியாழக்கிழமை) இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். நேற்றுடன் 55 வயதை எட்டியுள்ள அவர் இராணுவத்திலிருந்து ஓய்வினைப் பெற்று வீடு சென்றுள்ளார். 1984ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த இவர் 33 ஆண்டுகளாக இராணுவத்தில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். இறுதிப்போரின்போது...

சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் நேற்றுமுன்தினம் வவுனியாவில் இயங்கும் இராணுவத்தினரின் ஜோசப் சித்திரவதை முகாமுக்குள் சென்று சோதனை நடாத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னிப் படைகளின் தலைமையகமாக இயங்கும் ஜோசப் முகாமில் கடந்த காலங்களில் பலர் இரகசியமாகத் தடுத்துவைத்து படுகொலைகள் செய்யப்பட்டதாகவும், இன்னமும் சித்திரவதைகள் தொடர்வதாகவும் அடிப்படையில் அது ஒரு சித்திரவதை முகாம்...

யாழ்ப்பாணத்தை மட்டுமன்றி முழு நாட்டையும் பரபரப்படையச் செய்திருந்த புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் யாழ்.மேல்நீதிமன்றத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் விசேட மனு ஒன்றை நீதிபதி...

"புனர்வாழ்களிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்படுவதால் மக்கள் மத்தியில் அச்சநிலை உருவாகியுள்ளது. எனவே, கைதுக்கான காரணத்தை அரசு உடனடியாகத் தெளிவுப்படுத்த வேண்டும்." இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தியது. நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நுண்நிதியளிப்புச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியும் குழுக்களின்...

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்டுள்ளது எனத் தொடரப்பட்ட வழக்கிற்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்கவேண்டுமென வடமாகாண பிரதம செயலாளருக்கு மல்லாக நீதிமன்ற நீதவன் ஏ.யூட்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் குறித்த வழக்கு விசாரணைக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் முன்னிலையாகவேண்டிய அவசியமில்லை எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்....

சிலர் காயம்: ஒருவர் வைத்தியசாலையில் 1 1/2 மணிநேரம் அவை ஒத்திவைப்பு ஜே.வி.பி, கூட்டமைப்பு எம்.பி.க்கள் குசும்பு மக்கள் கலரியிலிருந்தோர் வெளியேற்றம் விசாரிப்பதற்கு விசேட குழு நியமனம் அரசாங்கத் தரப்பினருக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சபையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியதில், சபையே பெரும் அல்லோலகல்லோலப்பட்டது. இரு தரப்பைச் சேர்ந்த பின்வரிசை...

"தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சமஷ்டி தொடர்பில் தென்பகுதி மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள். இதன் மூலமாகவே தென்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்க முடியும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்திய கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில்...

விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அப்படி கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஒரு ஸ்தூபி எழுப்பப்படுவதை யாரும் எதிர்க்க முடியாது எனவும் அவர் கூறுகிறார். அடுத்த ஐந்து வருடங்களுக்குள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஒரு ஸ்தூபி அமைக்கப்படும் எனவும்...

தினமும் மாலை ஆறு மணிக்கு பின்னர் என்ன நடக்குமோ- ? யார் வந்து வெட்டுவார்களோ? என்ற அச்சத்தில் வாழ்வதைவிட இந்த ஊரை விட்டு வெளியேறுவதே சரியான முடிவாகும் என யாழ். வாசி ஒருவர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் தனது அபிப்பிராயத்தை தெரிவித்திருக்கிறார். இதேவேளை, வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார் அசமந்தமாகச் செயற்படுவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்...

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீண்டும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராம், நகுலன் மற்றம் தயாளன் ஆகிய விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் கடந்த வாரமளவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த மூவரும், முறையாக புனர்வாழ்வு பெறாத நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த...

இரனைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்கொண்டு செல்லப்படுவது தவிர்க்கபட முடியாதது. என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று(02) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வட மாகாண குடிநீர்திட்டம் தொடர்பிலான உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பிரபா என்றழைக்கப்படும் கலைநேசன் (வயது 46), மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் (ரி.ஐ.டி) கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள தங்களது வீட்டுக்கு நேற்றுக் காலை 6.30க்கு வந்த, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர், தனது கணவனைக் கைது செய்து அழைத்துச் சென்றதாக, அவரது...

இலங்கையில் பெருமபான்மையான தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உரசல்கள் வலுத்து வருவது போலத் தோன்றுகிறது. கூட்டமைப்பில் உள்ள பெரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி, இதர கட்சிகளை உதாசீனம் செய்து, கூட்டமைபை பலவீனப்படுத்துகிறது என, அதில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான ஈ பி ஆர் எல் ஃப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்...

நியாயமானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வு கிட்டப்படவேண்டும். அதன்மூலம் மக்கள் அந்த அங்கிகாரத்தை பயன்படுத்தும் நிலை இருக்கவேண்டும். இந்த பொறுப்பை அரசாங்கம் ஐ.நாவில் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கும் தொழிலாளர்கள் இன்று கூறுகின்ற குறைபாடுகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. இவ்வாறானதொரு தீர்வு எட்டப்படும்போது பல குறைகள் தீர்க்கப்படும்' என்று எதிர்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்...

உடுவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (01) இரவு வாள்வெட்டினை மேற்கொள்வதற்குத் தயாராக இருந்த 5 இளைஞர்களை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைதான நபர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் தடிகள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் கூறினர். இரவு நேர ரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் சட்டவிரோதக் கூட்டம் கூடி நின்ற இளைஞர்களைக் கைதுசெய்து விசாரணை...

All posts loaded
No more posts