Ad Widget

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா ஓய்வு!

இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா நேற்று (வியாழக்கிழமை) இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

prasana_di-silva-army

நேற்றுடன் 55 வயதை எட்டியுள்ள அவர் இராணுவத்திலிருந்து ஓய்வினைப் பெற்று வீடு சென்றுள்ளார். 1984ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த இவர் 33 ஆண்டுகளாக இராணுவத்தில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார்.

இறுதிப்போரின்போது மேஜர் ஜெனரல் பிரசன்ன டி.சில்வா முகமாலையிலிருந்து புதுமாத்தளன் பகுதியால் முன்னேறிய 55ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டிருந்தார்.

போரின் இறுதி நாட்களில் 59ஆவது படையணியின் பிரதிக் கட்டளைத் தளபதியாகவும் செயற்பட்டிருந்தார்.

போர் முடிந்த பின்னர் பிரித்தானியாவில் உள்ள சிறீலங்காத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றியிருந்தார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூட்டுப் படையணியின் தலைமையக இணைப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts