Ad Widget

வடக்கு முதல்வர், மாவை சேனாதிராஜா உட்பட நான்குபேருக்கு நீதிமன்றம் அழைப்பு!

வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து சிங்கள இனவாதக் கட்சிகள் சில இணைந்து கொழும்பு நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்னர் வழக்குத் தொடர்ந்தமை யாவரும் அறிந்ததே.

அதையடுத்து வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இந்த அழைப்பாணைக்கமைய முதலாம் எதிரியாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவும், இரண்டாம் எதிரியாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனும் அவர்களும், மூன்றாவது எதிரியாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்களும், நான்காவது எதிரியாக பிரதம செயலாளர் பத்திநாதன் அவர்களும் குறிப்பிடப்பட்டு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி வழக்கறிஞர் ஊடாக வடக்கு மாகாண சபை தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் என ஊடகங்களுக்கு தெரிவித்த அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், எதிர்வரும் மே மாதம் 13 அல்லது 14அல்லது 17ஆம் திகதிகளில் திறந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts