- Tuesday
- July 29th, 2025

எமது அலுவலர்களில் சிலர் இராணுவத்திற்குப் பயந்து தமது முறையான சட்ட ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடாது எமக்குப் பாதகமான முறையில் நடந்து கொள்வது வரவேற்கத்தக்கதல்ல. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட துறை சார் கூட்டம் வவுனியாவில் உள்ள உதவி உள்ளூராட்சி ஆணையாளரின் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முதலமைச்சர்...

ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும் வேளை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் உள்ள சோதனை சாவடி பின் நகர்த்தப்படலாம் என யாழ்.மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா எதிர்வரும் 18ம் திகதி யாழ்பாணம் வருகை தந்து புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு ஜனாதிபதியின் யாழ்ப்பாண...

யாழ். குடாநாட்டுக்கு இரணைமடு குளத்திலிருந்து நீரைக் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடும் எண்ணமில்லையென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் உறுதியாகத் தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்று வியாழக்கிழமை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா 23...

வடக்கில் விசேட அதிரடிப்படையினரை பணியில் அமர்த்துவது தொடர்பாக வடக்கில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தவண்ணமேயுள்ளன. சில கட்டுக்கடங்காத நிலமை ஏற்படும்போது விசேட அதிரடிப்படையினரை பணியில் அமர்த்துவதில் தவறில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு வடக்கில் பணியில் விசேட அதிரடிப்படையினரை பணிக்கமர்த்துமாறு யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்...

காணாமல் போனவர்கள், கடந்த்தப்பட்டவர்கள் தொடர்பாக இராணுவத்தினருக்கெதிராக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை இராணுவம் ஏற்றுக்கொள்ளும் என தான் நம்பவில்லையென முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக சிறீலங்கா இராணுவம் ஒத்துக்கொள்ளும் என நான் ஒருபோதும் நம்பவில்லை....

கொழும்பு கொஸ்கம குண்டு வெடிப்புச் சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ந்த சிங்களப் பெண் ஒருவர் ‘இப்படிக் குண்டுகளையா வன்னியில் போட்டு தமிழர்களைக் கொன்றார்கள்‘ என கேட்டுப் புலம்பியுள்ளார். இராணுவ முகாம் இருந்த பகுதிக்கு அருகில் குடும்பத்துடன் வசிக்கும் இப் பெண்ணின் வீடும் குண்டு வெடிப்பால் கடும் சேதமடைந்திருந்தது. தனது வீட்டில் பறந்து வந்து கிடந்த பாரிய...

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட சில அமைச்சர்களுக்கு எதிராக சில உறுப்பினர்கள் சதித்திட்டம் தீட்டி வருவதாக சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வட மாகாண முதலமைச்சர் மற்றும் சில அமைச்சர்களுக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு சலுகைகள் பெற்றுத் தருவதாக அவர்கள் பேரம் பேசி வருவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்....

நாட்டுக்குள்ளும் வெளியேயும் உள்ள ஈழம் என்ற கனவு மற்றும் விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இல்லாதொழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவிட்டால் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தெஹிவளை - கல்சிசை நகரமண்டபத்தில்...

யாழ்நகரின் நுழைவாயிலான நாவற்குழியில் ‘சிங்கள ராவய’ என்ற பெயரில் இராணுவக் குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலத்திலேயே இக்கிராமத்துக்கு சிங்கள ராவய என்ற பெயர்ப்பலகை பொறிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் திட்டத்தின்படியே இக்கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கிராமம் அமைக்கப்பட்டு தற்போது அமைதியாகவும் எந்தவொரு எதிர்ப்புமின்றி விரிவாக்கப்பட்டுவருகின்றது. தற்போதைய அதிபர்...

வடக்கில் படையினர் வசம் உள்ள பல காணிகள் தொடர்பில் அரசாங்க அதிபர்கள் தகவல்களை தரவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டியுள்ளார். அவர் யாழ்ப்பாண செய்தியாளர் யாழ்.தீபனுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்:- கேள்வி: வடக்கு மாகாணசபையின் அதிகாரங்கள் குறித்து நீங்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் எதுவரை எந்தளவில் வெற்றியளித்துள்ளன? பதில்: தமிழ் சிங்கள அரசியல் தலைவர்கள் புரிந்து...

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்கு சமூகமளித்திருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, பூகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொஸ்கம - சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 39 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோமீற்றருக்குள் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம் என இராணுவப் பேச்சாளர் இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது....

முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு தனது மனச்சாட்சியை வெளிப்படுத்தியுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம ஐ.பி.சி.தமிழ் செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நோ்காணலில் அவர் மனம் திறந்துள்ளார். மெக்ஸ்வெல் பரணகம முன்னாள் நீதியரசர் ஆவார். அரசாங்கத்துக்கு...

"இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணையை தாமதப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தை இலங்கை வரும் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளரிடம் அழுத்தம் திருத்தமாக நேரில் தெரியப்படுத்தவுள்ளோம். அத்துடன் போர்க்குற்ற விசாரணையை உடன் ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசுக்கு ஐ.நா. அழுத்தம் வழங்க வேண்டும் என்பதையும் இதன்போது வலியுறுத்தவுள்ளோம்.'' - இவ்வாறு சிவில் சமூகத்தினர் தெரிவித்தனர். இலங்கைக்கு வருகைதரும் ஐ.நாவின்...

வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு தொலைபேசிமூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்து 12 இலட்சம் கப்பம்கோரிய நபர் நேற்று (வெள்ளிக்கிழமை) வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி வட மாகாண சுகாதார அமைச்சரின் தொலைபேசிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து 12 இலட்சம் கப்பம் கோரியதாக வவுனியா காவல்துறையில் முறைப்பாடொன்றை சத்தியலிங்கம் பதிவுசெய்திருந்தார். இதனையடுத்து வவுனியா காவல்துறையினரால் இரண்டு...

சாவகச்சேரி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் நீண்டகாலமாக தமிழ் மக்கள் வாழ்ந்த நிலத்தை அந்த மக்களுக்கு வழங்குங்கள் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்திருந்த வேண்டுகோளையும் பொருட்படுத்தாமல் அந்த நிலத்தில் படையினருக்கான குடியிருப்பு அமைக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு வாழ்ந்த தாம் அச்சுறுத்தி வெளியேற்றப்பட்டதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். நாவற்குழி பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகிறார். இதன்போது காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியில் இருந்து 'தல்சவன' ஹோட்டல் வரையான சுமார் 400 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது இந்திய அரசாங்கத்தால் புனரமைக்கப்பட்ட துரையப்பா பொது விளையாட்டரங்கை அவர் கையளிப்பார் எனத் தெரிகிறது. மேலும் அன்று சர்வதேச யோகா...

வடக்கில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில், இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களை அங்கு மீள்குடியமர்த்தும் அரசாங்கத்தின் யோசனைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். யுத்தத்தினால் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த...

"இலங்கையில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டுமெனில் சமஷ்டியே பொருத்தமானது'' என்று நோர்வே தூதுக்குழுவினரிடம் தமது நிலைப்பாட்டை முன்வைத்திருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்றுமுன்தினம் கொழும்பு வந்த நோர்வே துணை வெளிவிவகார அமைச்சர் டொரே ஹற்ரெம் தலைமையிலான குழுவினர் நேற்று புதன்கிழமை வடக்குக்குச் சென்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்துக்...

வலி. வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து 400 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு இராணுவம் திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை உயர் அரச அதிகாரி ஒருவர் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ளார். விடுவிக்கப்படவுள்ள 400 ஏக்கர் காணிகள் இன்னும் சில வாரங்களில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன...

All posts loaded
No more posts