Ad Widget

யாழ். போதனா வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தரின் பொறுப்பற்ற செயலால் பிறந்த சிசு பலி

யாழ். போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை விடுதி பொறுப்பு தாதிய உத்தியோகத்தரின் பொறுப்பற்ற செயலால் பிறந்த சிசு ஒன்று சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்துபோன துயரச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சத்திரசிகிச்சை மூலம் பிறந்த குழந்தைக்கு உடனடியாக ஒட்சிசன் வழங்கவேண்டிய நிலையில்இ விடுதியில் ஒட்சிசன் சிலிண்டர் இருக்கவில்லை. இதுவே குழந்தை மரணமடையக் காரணம் என மருத்துவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குழந்தையின் இறப்புக்கு இதுவே பிரதான காரணம் என்பதை யாழ். போதானா வைத்தியசாலை மருத்துவ நிபுணரும் வட பிராந்திய அரச வைத்திய உத்தியோகத்த சங்க இணைப்பாளர் ரீ.காண்டிபன் இதனை உறுதிப்படுத்தினார்.

இந்தப் பாரதூர சம்பவம் யாழ்.போதானா வைத்தியசாலையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து அவசர பிரசவம் ஒன்றிற்காக கர்பினி தாய் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.அந்தத் தாய்க்கு சத்திரசிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவிக்க தீர்மானிக்கப்பட்டு சத்திர சிகிச்சை இடம்பெற்றது.

சத்திரசிகிச்சை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததும் உடனடியாக குழந்தைக்கு வழங்கவேண்டிய ஒக்சிசனை வழங்க மருத்துவர்கள் தயாரானார்கள்.ஆனால் அங்கு ஒட்சிசன் சிலிண்டர் இல்லாமல் உள்ளதை அறிந்து அவர்கள் ஆத்திரமடைந்தனர்.

சத்திர சிசிச்சை விடுதியில் எப்போதும் இருக்க வேண்டிய ஒட்சிசன் சிலிண்டரை பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் அங்கு எடுத்து வைக்கவில்லை எனத் தெரிய வந்தது.

ஒட்சிசன் சிலிண்டரை எடுத்துவந்து சிகிச்சை வழங்க தாமதமானதால் பிறந்த குழந்தை மூச்சுத் திணறி இறந்துபோனது.

இது தொடர்பில் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தரிடம் விளக்கம் கேட்ட போது அவர் மருத்துவர்களை அவதூறக பேசியாதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இப்பொறுப்பற்ற செயலிற்கு காரணமான குறித்த தாதிய அதிகாரியினை குறித்த சத்திரசிகிச்சை பிரிவில இருந்து வெளியேற்றுமாறு வைத்தியர்கள் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த தாதிய உத்தியோகத்தரை பணி இடமாற்றம் செய்ய வழங்க 48 மணிநேர கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சனிக்கிமை (18) முதல் சத்திரசிகிச்சை பணிகளை மேற்கொள்ளமாட்டோம் என சத்திரசிகிச்சை வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவர்களின் இந்தத் தீர்மானத்தையும் வட பிராந்திய அரச வைத்திய உத்தியோகத்த சங்க இணைப்பாளர் ரீ.காண்டிபன் உறுதி செய்தார்.

Related Posts