- Tuesday
- July 29th, 2025

யாழ் குடாநாட்டில் குற்றச் செயல்கள் ஒழிந்து இப்போது அமைதி நிலவுவதாகவும், இந்த அமைதிய சீர்குலைப்பதற்கு எந்த ஒரு சக்திக்கும் இடமளிக்க முடியாதெனவும் அவ்வாறு அமைதியை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் புதிதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரானிஸ்லாஸுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில்...

தமிழ்த் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், அவர் நலமாக இருக்கிறார். இலங்கையைச் சேர்ந்த தமிழ் சினிமா இணையத்தளம் ஒன்று இன்று காலை ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியானது. அது, அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் மாரடைப்பால் காலமானார் என்றும், இத் தகவலை அவருடைய மகள்...

தென்மராட்சியின் மறவன்புலோ பகுதியில் வெடிபொருள் மீட்கப்பட்ட சம்பவத்தினில் ஆளுநர் சிறிசேன கூரேயின் உதவியாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரான றெஜினோல்ட்குரேயின் வலதுகரமாக செயற்பட்டு வந்த முரளி என அழைக்கப்படும் சிவராசா சிவகுலன் (வயது 29) என்பவரே கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினால் 11ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநராக...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை எனவும் ஆனால் நாட்டில் நிலையான தீர்வை எட்டுவதற்கு தமிழ் மக்களின் தனிப்பட்ட அடையாளங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமையாகும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் சிறிலங்காவின் வடக்கிற்குப் பயணம் செய்த ஐ.நாவிற்கான அமெரிக்காவின் தூதுவர்...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரை மிக இலகுவாக எதிர்கொள்வோம் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். "சர்வதேச நாடுகள் இலங்கை அரசு மீதும், ஜனாதிபதி மீதும் நம்பிக்கை கொண்டுள்ளன. அதனால், இம்முறையும் போதுமான கால அவகாசத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வழங்கும்" என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்....

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமாக காணியை அரசுடைமையாக மாற்றி அங்கு 400 குடும்பங்களை உடனடியாக மீள்குடியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்னமும் 14 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதோடு, இவர்களில் 11 ஆயிரம் குடும்பங்கள் யாழ். மாவட்டத்திலுள்ள 31 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அமைச்சரவையின் முடிவுகளை...

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் தடைசெய்யப்பட்ட க்ளைபோசெட் (Glyphosate) எனும் கிருமி நாசினியை விட, அதிக விஷமுடைய பிறிதொரு விவசாய இரசாயனம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. இதன்படி க்ளுபோசினேட் (Glufosinate) எனும் பெயரில் குறித்த கிருமி நாசினி சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இப் புதிய களை நாசினி க்ளைபோசெட்டை விட 15 மடங்கு அதிக...

சர்வதேச உறவுகளைப் பலப்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் மிகவும் நேர்மையான, திறந்த வெளிநாட்டுக் கொள்கையையே பின்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பூகோள செயற்பாடுகளில் இலங்கை – 2015 ஜனவரி முதல் கடந்து வந்த பாதை என்ற தொனிப்பொருளில் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற புலைமைத்துவ கலந்துரையாடலில்...

இறுதிப் போரின்போது காணாமல் போனோரின் விபரங்களைத் தருமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோரியிருந்தபோதிலும், இதுவரை அவர்கள் அதனை வழங்குவதற்கு எந்தவொரு அக்கறையும் செலுத்தவில்லையென ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இந்த விபரங்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்றிருந்தால் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஓரளவுக்கு நிறைவுபெற்றிருக்கும். ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,...

வவுனியா இளைஞர் ஒருவரால் தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.வவுனியா, ஓமந்தைப் பகுதியில் வசித்து வரும் என்.என்.ஜக்சன் (வயது 30) என்ற இளைஞனால் மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி இயங்கக் கூடிய தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது 10 வயதில் இருந்து சூழலுக்கு பாதிப்பில்லாத இயந்திரங்களை கண்டு பிடிப்பது தொடர்பில்...

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அனைத்து இலங்கையர்களும் அர்த்தபூர்வமான பங்களிப்பினை வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹுசெய்ன் தெரிவித்துள்ளார். நேற்றய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வுகளின் ஆரம்ப உரையிலேயே அவர் இவ்வாறு...

வடக்கு அரசியல்வாதிகளின் அரசியல் நியாயங்களுக்காக வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது. அதேபோல் இராணுவமும் வெளியேற்றப்படாது என அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பும் தெரிவித்துள்ளன. வடக்கு முதல்வரின் கருத்துகளுக்கு எம்மால் எந்த பதிலையும் தெரிவிக்க முடியாது. நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது. வடக்கில்...

யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தி துரிதமடைகிறது. வடக்கு கிழக்கில் மீள்கட்டுமானங்கள் சிறப்பாக நடக்கிறதென அரசு சொல்லித்திரிந்தாலும், யதார்த்தமென்னவோ வேறாகத்தான் இருக்கிறது. யுத்தத்தால் சிதைவடைந்த பகுதி மக்களின் வாழ்க்கையும் சிதைவடைந்துதான் கிடக்கிறது. அரசின் எந்த புனரமைப்பு திட்டமும் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கு உதவவில்லையென்பதே யதார்த்தம். யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலொன்றான முல்லைத்தீவில் நடக்கும் இந்த அதிர்ச்சி சம்பவங்கள் அபிவிருத்தி...

அண்மையில் இடம்பெற்ற சலாவ வெடிவிபத்தையடுத்து தென்பகுதியில் இருக்கும் ஆயுதக் களஞ்சியங்கள் அனைத்தும் தற்போது வடபகுதிக்கு மாற்றப்பட்டுவருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அனுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே புதிய ஆயுதக் களஞசியங்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சன அடர்த்திகூடிய பிரதேசத்தில் அமைந்திருக்கும் வியாங்கொட ஆயுதக் களஞ்சியத்தையும் வேறு...

இறுதிப் போரில் நடந்த போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக இருக்கிறாராம். இந்தத் தகவலை கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும், போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணைகளை...

இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால நீதிப் பொறிமுறைகளில், சாட்சியமளிக்கத் தயார் என, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தமது பாதுகாப்பு மற்றும் அடையாளம் வெளிப்படுத்தப்படாது என்பதற்கும் உத்தரவாதம் வழங்குகின்ற பட்சத்தில் சாட்சியமளிக்க தயார் என அவர்கள் கூறியுள்ளதாக,...

தாம் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, 40 இலங்கையர்கள் இந்தோனேஷியாவில் நிர்க்கதியான நிலையில் உள்ளதாக அந்தநாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளதாக, இந்தோனேஷியப் பொலிஸார் கூறுகின்றனர். இவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம் தொடக்கம் எல்லாவற்றையும் பிளவுபடுத்தி பழக்கப்பட்டவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் மாகாண சபையையும் குழப்பி பேரினவாதிகளுக்கு தீனி போடுவதற் வட மாகாண சபையில் சிலர் உடந்தையாக இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார். வடக்கு விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக வடமாகாண சபையில் உள்ள சுமந்திரன் ஆதரவு உறுப்பினர்கள் சிலர் நம்பிக்கையில்லாத்...

கொஸ்கமவில் நடந்தது போன்று மயிலிட்டியில் நடந்தால் குறித்த பகுதியே பாழாய்போய்விடும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா உள்ளூராட்சி திணைக்களத்தின் அதிகாரிகளுடன் வவுனியா உள்ளுராட்சி திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வட பகுதியில் உள்ள இராணுவ...

யுத்தத்தினால் வீடுகளை இழந்த வட கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்காக கட்டப்படவுள்ள 65,000 விடூகளை பெற்றுக் கொள்வதற்கு 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மீள் குடியேற்ற மற்றும் சிறைச் சாலைகள் தொடர்ப்பான அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் உரையாற்றிய போது...

All posts loaded
No more posts