தென்னிந்திய படங்களை பார்த்தே யாழில் குண்டர் குழுக்கள் உருவாகின: பகீர் தகவல்!

தென்­னிந்­திய திரைப்­ப­டங்­களே யாழ்.குடா­நாட்டில் “ஆவா குறூப்”, “ரொக்டீம்” போன்ற குண்டர் குழுக்கள் உரு­வாக கார­ண­மாக உள்­ள­தாக விசா­ர­ணைகள் மூலம் தெரி­ய­வந்­துள்­ள­தாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சாஹல ரட்­நா­யக்க தெரி­வித்தார்.

23 இன் கீழ் 2 இல் ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்­தா எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யிலேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

சபா பீடத்தில் சமர்­பிக்­கப்­பட்ட நீண்ட பதிலில் அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது-

தென்­னிந்­திய திரைப்­ப­டங்­களை அதி­க­மாக பார்க்கும் யாழ் குடா­நாட்டு இளை­ஞர்­களைப் போன்று குழுக்­க­ளாக ஒன்று சேர்ந்து யாழ் நகரின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளிலும் குற்­ற­செ­யல்­களில் ஈடு­ப­டு­கின்­றனர். யாழில் குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­மை­யினால் கைது செய்­யப்­பட்ட தனி நபர்கள் மற்றும் குழுக்கள் குறித்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போது குறித்த விடயம் கண்டு பிடிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். ‘ஆவா குறூப்’ என்ற பெயரில் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட ஆறு பேர் கொண்ட குழு சுன்­னாகம் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளது.

சந்­தேக நபர்­களை நட­ராஜா குரேஷ்­வரன், செல்­வ­ரட்னம் தருணன், ஆனந்­த­ராஜா கஜீபன், கோணேஸ்­வரன் கிரிஷார், கும­ரேஷ்­வரன் வினோதன் எனப்­படும் குமரே, ரத்னம் வினோசன் எனப்­படும் ஆவா மற்றும் சேனா­தி­ராஜா அணேகன் ஆகியோர் காணப்­ப­டு­கின்­றனர். இவர்கள் வீடு­க­ளினுள் அத்­து­மீறி நுழைதல், இரு­வரைத் தாக்கி காயப்­ப­டுத்­தி­யமை வாளால் வெட்டி படு­கா­யங்­களை ஒரு­வ­ருக்கு ஏற்­ப­டுத்­தி­யமை போன்ற சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பா­கவே கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இவர்கள் மல்­லாகம் நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்டு குற்­ற­வா­ளி­க­ளாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளுக்கு ஒரு வருட சிறைத்­தண்­ட­னையும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மானிப்பாய் பகு­தியில் இடம்­பெற்ற வாள்­வெட்டு சம்­ப­வங்­களில் தொடர்பில் மேற்­படி குழு­வுடன் தொடர்­பு­டைய சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்ட 12 பேர் பிணையில் செல்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் 3 சந்­தேக நபர்கள் ஆஜர் செய்­யப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

ஆவா குறூப் என்ற குழு­வி­லி­ருந்து பிரிந்து சென்­ற­தாக சந்­தே­கப்­படும் ரொக் டீம் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் குழு­வா­னது கடந்த மே மாதம் 8 ஆம் திகதி யாழ் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளது. ஏழு குற்றச் செயல்கள் தொடர்பில் அக்­கு­ழுவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இந்தக் குழு தொடர்­பாக முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் ரொக் டீமுடன் அர­சி­யல்­வாதி ஒரு­வரின் புதல்வர் தொடர்­பு­பட்­டுள்­ள­தா­கவோ இக் குழு­விற்கு சுவிட்­சர்­லாந்­தி­லி­ருந்து பணம் வரு­வ­தா­கவோ தெரி­ய­வ­ர­வில்லை.

கைது செய்­யப்­பட்ட அக்­கு­ழுவின் சந்­தேக நபர்­க­ளது வங்கிக் கணக்கு தொடர்­பான அறிக்கை பெறு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. கைது செய்­யப்­பட்ட அந்தக் குழுவில் பாடசாலை மாணவர்களும் இருக்கின்றமை தெரியவரவில்லை.

இக்குழு மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. ஆவா குறூப், ரொக் டீம் போன்றவற்றின் செயற்பாடுகளை தடுப்பதற்காக புலனாய்வு பிரிவினரால் தகவல்கள் சேகரிக்கப்படுவதோடு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. எனத் தெரிவித்தார்

Related Posts