- Wednesday
- July 30th, 2025

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் கல்விகற்கும் மாணவிகள் ஐவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று புதன்கிழமை (22) மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தால் பாடசாலைச் சூழலில் பதற்றம் நிலவுகின்றது. இதனையடுத்து, கலகம் அடக்கும் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள்...

வவுனியா கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு 7.15 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார். சண்முகம் செல்வராசா (வயது 55 ) என்ற வர்த்தகரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். வவுனியாவிலிருந்து தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இவர், தனது வீட்டு வாசலில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.வாகனமொன்றில் வந்தவர்களால் இவர் கடத்தப்பட்டதாக...

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக அண்மையில் வௌியான செய்திகளுக்கு, அரசாங்கம் உரிய பதில் எதனையும் வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் குறித்து தற்போது எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை என, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளதோடு, குறித்த அறிக்கை பற்றி ஆராய்வதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர்...

வெளிநாட்டவர்கள் காணிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மூன்று நான்கு வாரங்களில் அரசாங்கம் இந்த புதிய நடைமுறையை அமுல்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் விரைவில் காணிச் சட்டத்தை திருத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வெளிநாட்டுப் பிரஜைகள் காணிகள் கொள்வனவு செய்வதனை தடுக்கும் வகையில் தற்போது நாட்டில் சட்டம் காணப்படுகின்றது. எதிர்வரும் காலங்களில்...

கிளிநொச்சியில், இளைஞர் ஒருவர் 15 வயதுச் சிறுமி ஒருவருடன் வைத்திருந்த, பாலியல் உறவினால் அந்த சிறுமி கர்பமாகி உள்ளதாக வைத்தியசாலைப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தி உள்ளன. கிளிநொச்சி கரடிபோக்கு சந்திக்கருகில் அமைந்துள்ள, யாழ் தினசரிப் பத்திரிகை ஒன்றின் மாவட்ட அலுவலகத்தின் பணியாளர் தங்கும் விடுதியில், இந்த பாலியல் துஸ்பிரயோக சம்பவம் இட்பெற்றுள்ளதாக, சிறுமியின் வாக்கு மூலத்தின் வாயிலாக...

இறுதிக்கட்ட போரில் ஸ்ரீலங்கா படையினர் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் (cluster bombs) (AO-2.5RT, RBK-500 AO-2.5RT) வன்னி பிரதேசத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்களாக அமைந்துள்ளதாக த கார்டியன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில்...

இருக்கின்ற கோவில்களில் வழிபாடு செய்வதற்கு மக்கள் இல்லாத நிலையில் புதிது புதிதாக கோவில்களை அமைக்க முயல்வது பயனற்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். துணைவி கலைவாணி சனசமூக நிலையத்தின் 31வது ஆண்டு விழாவும் அமரர் சி. சிதம்பரப்பிள்ளை ஞாபகார்த்த கலைவாணி கலையரங்கு திறப்புவிழாவும் நேற்றைய தினம் துணைவி, சங்கரத்தையில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக...

தென்மராட்சி - வரணிப்பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் மற்றும் அதிபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நன்னடத்தைப்பிரிவினரிடமும், கொடிகாமம் பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது....

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகச் சுமத்தப்படும் படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விட்டுக்கொடுப்பு அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு இலங்கை சட்டமா அதிபர் ஜயந்த ஜெயசூரியவிடம் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமா அதிபரை அவரது பணியகத்தில் சந்தித்த இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக சத்ஹண்ட சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினருக்கு...

தான் 18 பில்லியன் டொலர்களை கொள்ளையிட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபித்தால் கழுத்தை அறுத்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் அந்த நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அவ்வாறு சில சந்தர்ப்பங்களில் குற்றம்சுமத்தியுள்ளதாக இதன்போது குறிப்பிட்ட மஹிந்த, தான் ஒரு...

நேற்று சனிக்கிழமை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வீட்டிற்கு பயணம் செய்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். நேற்றயதினம் துரையப்பா விளையாட்டரங்கைத் திறந்துவைப்பதற்கு யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அன்றைய தினம் தனது மகளின் பிறந்தநாளாகையால் வீட்டுவருமாறு சரவணபவன் அழைத்திருந்தார். இந்த அழைப்பையேற்ற சிறீலங்கா அதிபர்...

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு திறந்து வைக்கப்படவிருந்த சமயத்தில் மேடை ஏறிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கால் தடுக்கி கீழே விழுந்துள்ளார். இந்த நிலையில், மேடையில் நின்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால பதறிப் போய் முதலமைச்சருக்கு அருகில் செல்ல முற்பட்ட வேளை அங்கு நின்ற அதிகாரிகளால் முதலமைச்சர் தூக்கி விடப்பட்டுள்ளார். முதலமைச்சர் தனது வேட்டி தடுக்கி கீழே விழுந்தாரா?...

கடந்த டிசம்பரில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மாதங்களுக்குள் சகல மக்களையும் மீள்குடியேற்றுவேன் என்று கூறியிருந்தார். எனினும், எதிர்வரும்-22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் அவர் கூறிய ஆறு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நீங்கள் வழங்கிய உறுதிமொழியை நம்பி இருந்தோம். தற்போதும் நம்பிக்கையுடனிருக்கின்றோம். அந்த நம்பிக்கைக்கு ஏமாற்றம்...

யாழ்.நகரப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தொன்றில் திருமண வீட்டிற்கு சென்ற தாய் ஸ்தலத்தில் பலியானதுடன் அவரது மகள் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பரிதாப சம்பவம் இன்று காலை 8.45 மணியளவில் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. திருமண வீடு ஒன்றிற்கு செல்வதற்காக தாயை...

யாழ். போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை விடுதி பொறுப்பு தாதிய உத்தியோகத்தரின் பொறுப்பற்ற செயலால் பிறந்த சிசு ஒன்று சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்துபோன துயரச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சத்திரசிகிச்சை மூலம் பிறந்த குழந்தைக்கு உடனடியாக ஒட்சிசன் வழங்கவேண்டிய நிலையில்இ விடுதியில் ஒட்சிசன் சிலிண்டர் இருக்கவில்லை. இதுவே குழந்தை மரணமடையக் காரணம்...

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கான ஆதாரங்களுடன் கூடிய பாரதூரமான குற்றச்சாட்டுகள் உள்ளன என்று அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகம் கடுமையான ஆனால் ஆதரவை வழங்கும் நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். லண்டனைத் தளமாகக் கொண்ட தமிழ் கார்டியனுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு...

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது சொந்த நிலங்களை விடுவிக்காவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக வலிகாமம் வடக்கு மக்கள் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவை நம்பி வாக்களித்த தம்மை ஜனாதிபதி ஏமாற்றி விட்டதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பட்டதில் நேற்று வெள்ளிக்கிழமை...

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பிலான பணியகம், இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பெசில் ராஜபக்ச, கோட்டாபய, சவேந்திர சில்வா போன்ற இரண்டாம் தரப்பினரையும் விசாரணை செய்ய வேண்டும் என்று மெக்ஸ்வல் பரணகம கோரிக்கை விடுத்தார். செய்தி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே காணாமல்போனோர் தொடர்பாக முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி...

யாழ்ப்பாணத்துக்கு நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் நிலையில் அவரது வருகையின் போது வலி.வடக்கில் மேலதிக காணிகளை விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வமான எந்த நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை என யாழ்.மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் முன்னர் தமக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் நிலவிடுவிப்பு மற்றும் மீள்குடியேற்ற அறிவிப்பை யாழ்ப்பாணம் வருகையின் போது ஜனாதிபதி விடுவிப்பார் என...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் அல்ஹுசைனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று சந்தித்துப் பேசினார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையை ஆணையாளர் செயித் அல்ஹுசைன் எதிர்வரும் 29ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு முன்னர் தற்போதைய நிலைமைகள்...

All posts loaded
No more posts