Ad Widget

ஆரம்பித்தது முதல்வரிற்கு எதிரான போராட்டம்! கூட்டமைப்பின் எம்.பி சிவமோகனும் இணைவு!!!

வவுனியா பொருளாதார மத்திய நிலைய விவகாரத்தை மேலும் சிக்கல்படுத்தும் விதமாக வவுனியாவில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி, சிறிரெலோ கட்சிகளின் பிரமுகர்களுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி சிவமோகனும் கலந்து கொண்டுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

vavuniya-27-06-2016

பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும், ஓமந்தையில் அமைக்க முயலும் முதல்வரை எதிர்க்கிறோம் என இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஒருவரின் பின்னணியில் முதல்வர் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என ஏற்கனவே பலரும் எச்சரித்திருந்த நிலையில், இன்று இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் ஐக்கிய தேசியக்கட்சி வவுனியா அமைப்பாளர், மகிந்த அரசுடன் நெருக்கமாக இருந்த சிறி ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா, மாகாணசபை உறுப்பினர் ஜெயதிலக உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி சிவமோகனும் கலந்து கொண்டுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது

Related Posts