யாழில் இபோச பஸ் மீது தாக்குதல்

காரைநகர் ஊடாக வவுனியாவிற்கான சென்ற இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.15 இற்கு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் வரணி கொடிகாமத்தினைச் சேர்ந்த கதிர்காம குமார் குலசிங்கம் (55) யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் இருந்து வவுனியாவிற்கு சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் உரும்பிராய் பகுதியில் சென்று கொண்டிருந்த வேளை இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், யாழ். சண்டிலிப்பாய் பகுதியிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts