- Tuesday
- August 4th, 2026
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி.ரிசிதரன் சிங்கள மாணவர்கள் நான்குபேருக்கு எதிராக கோப்பாய்ப் பிரதேச காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், மாணவர் ஒன்றியத் தலைவர் ரிசிதரனை நேற்றைய தினம் கோப்பாய் காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். இதனையடுத்து ரி.ரிசிதரனை 2,00,000 ரூபா பிணையில் செல்வதற்கு சின்னத்துரை...
யாழ்ப்பாண பல்கலைக்கழக நிலைமைகள் வழமைக்குத் திரும்பவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் நிலைமைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக கூறிய போதிலும் உண்மையில் இயல்பு நிலை ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்....
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதே பொருத்தமானது என்று ஜனநாயக ரீதியாக முடிவெடுக்கப்பட்டு விட்டாலும் சில சுயநலன் சார்ந்த சக்திகள் மேலும் குழப்பங்களையும், இழுபறியையும் உருவாக்கிய வண்ணம் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறாயினும் பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக தாம் இருப்பதாகவும்...
ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூலில் தனக்குத் தெரிந்த தமிழினியைக் காணவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார். அந்த நூலில் அவரால் கூறப்பட்டவைகள் எனச் குறிப்பிடப்பட்டிருப்பவைகளுக்கும் அவர் வாழ்ந்த நடைமுறை வாழ்க்கைக்கும் வேறுபாடு உள்ளதாகவும் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார். முன்னாள் அரசியல் துறைப் போராளி வெற்றிச்செல்வி எழுதிய பம்பைமடு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் அபாயத்தை நோக்கி நகர்த்திக்கொண்டி ருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சுமத்தியுள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புகூறல் ஆகியன இரண்டும் சமாந்திரமாக...
யாழ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடாமல் வடக்கு மற்றும் தெற்கிலுள்ள சில இனவாதிகள் அதனை மேலும் குழப்புவது எவ்வாறு என ஆராய்வதாக, வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நல்லிணக்க கொள்கைகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் வடுக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...
படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவரான மகாலிங்கம் தவநிதி என்பவரின் மரண சடங்கில் கலந்துகொள்ள மற்றைய சந்தேகநபர் மற்றும் வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்கள் இருவருக்கும் ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சபேசன் அனுமதியளித்துள்ளார். வித்தியாவின் வழக்கு விசாரணை ஊர்காவல்துறை...
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து, த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு, சேதமடைந்த நிலையிலான அடையாள அட்டை, கைக்குண்டு, பழுதடைந்த நிலையிலான சயனைட் குப்பி என்பவை செவ்வாய்க்கிழமை (19) மாலை மீட்கப்பட்டுள்ளன என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். மாவிலங்குதுறை கிராமத்திலுள்ள காளிகோவில் வீதியில் தங்கரசா தவேந்திரன் என்பவருக்கு சொந்தமான காணியில்...
யாழ். மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி.சிசீந்திரன் இரண்டு லட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்ட நிலையில், ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிங்கள மாணவனின்...
யாழ்.பல்கலைகழக மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் முறைப்பாட்டின் பிரகாரம் தமிழ் மாணவர்கள் மூவரை கோப்பாய் பொலிசார் விசாரணைக்காக அழைத்துள்ளதாக நேற்றிரவு செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் நேற்றிரவு வரை எவரும் கைதுசெய்யப்பட்டாத அதேநேரம் எந்நேரமும் மாணவர்கள் சிலர் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், தமிழ் சிங்கள மாணவர்களிற்கிடையிலான மோதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரை யாழ்.மேல் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் சிங்கள மாணவனின் முறைப்பாட்டின் பிரகாரம் தமிழ் மாணவர்கள் மூவரை கோப்பாய் பொலிசார் விசாரணைக்காக அழைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம், சித்த மருத்துவ அலகு, வவுனியா வளாகம், விவசாய பீடம் என்பவற்றின் கற்றல் நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை மீண்டும் ஆரம்பமாகின்றன. யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறை மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் யாழ். பல்கலைக்ககழகத்தின் அனைத்துப் பீடங்களும் கடந்த திங்கட்கிழமை முதல் இயங்கவில்லை. இந்நிலையில் விஞ்ஞானபீடம், கலை, வணிக பீடங்களின் கற்றல் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பமாகும்...
காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளைப் பொலிஸார் வேலிகளை அமைத்து மக்கள் பாவனைக்கு அனுமதி மறுத்தனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "காணிகளைத் துப்புரவாக்கிக் கொண்டிருந்த எம்மை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் பணித்தனர். மீறி நின்றால் கைதுசெய்வோம் என்றும் எச்சரித்தனர்'' என்று மக்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் 25ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வலி.வடக்கில் 201 ஏக்கர்...
யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்ததைப்போன்று ஏனைய பல்கலைக்கழகங்களிலும் மோதல்கள் இடம்பெறக்கூடும் என அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் பல்கலைக்கழக மானியங்களின் தலைவர் பேராசிரியர் மெகான் டி சில்வா. இது தொடர்பாக அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், கலைப்பீட மாணவர்கள்தான் மோதலை ஆரம்பித்தனர். இதனையடுத்து கடந்த சனிக்கிழமையிலிருந்து பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்புக்காக அவர்கள்...
எந்தவொரு நபருக்கும் சட்டத்தை கையிலெடுக்க முடியாது எனவும், யாழ்ப்பாண சம்பவம் தொடர்பில் சட்டத்தை பிழையின்றி செயற்படுத்தவுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக மோதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்திக்க நேற்று அமைச்சர் தேசிய வைத்தியசாலைக்கு சென்றார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இங்கு மேலும் கூறியதாவது,...
கடந்த சனிக்கிழமை யாழ் பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து இன்று முக்கிய உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்னம் ஆகியோர் உட்பட மாணவர்களும் குறித்த...
யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மோதலுக்குக் காரணமான மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார். “இந்தச் சம்பவம் தொடர்பான சிறிலங்கா காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மோதலில் தொடர்புடைய மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கான, ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுக்குமாறு யாழ்....
யாழ்.பல்கலைக்கழகத்தில் கண்டிய நடனம் ஆட வேண்டும் என கோரும் சிங்கள மாணவர்கள், ருகுணு பல்கலைக்கழகத்திலும், பேராதனை பல்கலைக்கழகத்திலும் தமிழ் மரபு கலாசார நிகழ்வுகளை அனுமதிப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழ். பல்கலைக்கழகத்தில் இராணுவத்தின் துணையுடனேயே கண்டிய நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின்...
யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தால் அறிக்கையொன்று வௌியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு உபசார நிகழ்வு கடந்த 16.07.2016இல் விஞ்ஞானபீட சிரேஸ்ட மாணவர்களால் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. வரவேற்பு உபசார விழா நடத்துவது வழமையானது. இந்தநிலையில் நிகழ்ச்சி நிரலில் மாற்றம்...
Loading posts...
All posts loaded
No more posts
