Ad Widget

யாழில் 800 பேருக்கு வீடமைக்க உதவி

வீடமைப்பு கடன் திட்டத்தின் கீழ், யாழ் மாவட்டத்தில் 800 பயனாளிகளுக்கான காசோலைகளை தேசிய வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார்.

loan

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், மாவட்ட முகாமையாளர் ரவீந்திரனின் தலைமையில் இன்று காலை இந்த நிகழ்வு நடைபெற்றது.

´2025ம் ஆண்டு அனைவருக்கும் வீடு´ என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி யாழில் வறுமைக்கோட்டுக் கீழ் உள்ள பயனாளிகள் தமது வீடுகளை அமைப்பதற்கும், பழைய வீடுகளை திருத்துவதற்காகவும், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு சுமார் 800 பேருக்கு 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் வரை வீடமைப்பு கடன் திட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Related Posts