போராளிகளின் மர்ம மரணம் தொடர்பாக கூறுவதற்கு நான் வைத்தியனல்ல: டி.எம்.சுவாமிநாதன்!

இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்படும் முன்னாள் போராளிகள் பலர் மர்மமாக மரணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் வினவியபோது ‘இது பற்றிக் கூற நான் வைத்தியனல்ல’ எனவும் தன்னிடம் இதுபற்றிக் கேட்பதில் எந்தவித பயனுமில்லை எனவும் எனத் தெரிவித்துள்ளார்.

DM-Swaminathan

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வுக்குப் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்ட பல முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் மரணமடைந்து வருவதாக சித்திரவதைகளுக்கு உள்ளானோருக்கு ஆதரவு அளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட முன்னாள் போராளிகளின் பெற்றோர் சிலர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இக்குற்றச்சாட்டுக் குறித்து யாழப்பாணத்துக்கு வருகைதந்திருந்த புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related Posts