Ad Widget

தமிழ் மக்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை! நீதியைப் பெற்றுத்தருவது ஐ.நாவின் கடமை!! ஆணையாளரிடம் சுமந்திரன் நேரில் வலியுறுத்து !!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் அல்ஹுசைனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று சந்தித்துப் பேசினார்.

suman

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையை ஆணையாளர் செயித் அல்ஹுசைன் எதிர்வரும் 29ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு முன்னர் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆணையாளருடனும் ஐ.நா. உறுப்பு நாடுகளின் முக்கியஸ்தர்களுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் பேச்சு நடத்தும் என்று சுமந்திரன் எம்.பி. சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இதற்கமைவாக அவர் நேற்று ஆணையாளரை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசு மந்தகதியில் செயற்படுகின்றது எனவும், வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற இலங்கைக்கு ஐ.நா. தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் இந்தச் சந்திப்பின்போது சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, தமிழ் மக்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை என்றும், போராலும் மனித உரிமை மீறல்களாலும் பாதிக்கப்படட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவது ஐ.நாவின் கடமை என்றும் இதன்போது சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts