நேற்று சனிக்கிழமை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வீட்டிற்கு பயணம் செய்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.
நேற்றயதினம் துரையப்பா விளையாட்டரங்கைத் திறந்துவைப்பதற்கு யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அன்றைய தினம் தனது மகளின் பிறந்தநாளாகையால் வீட்டுவருமாறு சரவணபவன் அழைத்திருந்தார். இந்த அழைப்பையேற்ற சிறீலங்கா அதிபர் மைத்திரிபாலசிறிசேன பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.
இப்பிறந்தநாள் நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராசா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அங்கஜன் மற்றும் மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டனர்.