Ad Widget

தற்கொலை அங்கி விவகாரம் ஆளுநரது உதவியாளரும் கைது!

தென்மராட்சியின் மறவன்புலோ பகுதியில் வெடிபொருள் மீட்கப்பட்ட சம்பவத்தினில் ஆளுநர் சிறிசேன கூரேயின் உதவியாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

murali-jaffna-chavakachcheri-bom

வடக்கு மாகாண ஆளுநரான றெஜினோல்ட்குரேயின் வலதுகரமாக செயற்பட்டு வந்த முரளி என அழைக்கப்படும் சிவராசா சிவகுலன் (வயது 29) என்பவரே கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினால் 11ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக ஜெஜினோல்ட்கூரே நியமிக்கப்பட்ட பின்னர் ஆளுநருக்கான ஆளணியில் சிவகுலனும் உள்வாங்கப்பட்டிருந்தார்.

இவர் முரளி என்ற பெயரில் ஆளுநர் அலுவலகத்தில் செயற்பட்டு வந்ததுடன் இவரை தேடி ஏராளமான யுவதிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆளுநர் அலுவலகத்திற்க படையெடுத்துள்ளனர்.

வேலைவாய்ப்பு, நிதிஉதவி போன்றவற்றை ஆளுநர் குறித்த நபர் ஊடாக செயற்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.

இவர் ஆரம்பித்தில் ஈபிஆர்எல்எவ் அமைப்புடன் இணைந்து செயற்பட்டிருந்த நிலையில் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஹத்துருசிங்க இராணுவத் தளபதியாக இருந்த போது அவருடன் நெருங்கிச் செயற்பட்டிருந்தார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட சாவகச்சேரியைச் சேர்ந்த சேர்ந்த சர்வா மற்றும் வடமராட்சியைச் சேர்ந்த அகிலதாஸ் போன்றவர்களுக்கு ஆதரவாகத் தொழிற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவதற்கு அந் நேரம் வந்திருந்த தற்போதைய ஆளுநர் றெஜினோல்ட் கூரே இவரது வழிநடத்தலிலேயே தொழிற்பட்டதாகத் தெரியவருகின்றது.

மகிந்த அரசாங்கத்தின் மிக முக்கிய விசுவாசியாக காணப்பட்ட இவர் ஆளுநராக றெஜினோல்ட் கூரே நியமிக்கப்பட்டவுடன் பல்வேறு மோசடிகளிலும் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவருகின்றது.

இதனிடையே கைதான சிவகுலனை விடுவிக்கப்போவதாக புறப்பட்டு சென்ற பொதுசன ஜக்கிய மக்கள் முன்னணியின் வடமாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் மிரட்டலையடுத்து கொழும்பிலிருந்து திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts