- Monday
- August 18th, 2025

ஜெனீவா மனித உரிமை பேரவையில் கடந்த நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது தொடர்பான எழுத்து மூலமான அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் பேரவையில் வெளியிடவுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 24ஆம் திகதிவரை...

யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் லக்ஷ்மன் ஆகியோரின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கருணா குழுவினருக்கு வழங்கப்பட்டது என நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த ரி-56 ரக துப்பாக்கியானது இராணுவத்தின் மத்திய ஆயுதக் களஞ்சியத்தினூடாக இராணுவ புலனாய்வு படையணிக்கு வழங்கப்பட்டு அங்கிருந்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மூன்றாம் இராணுவப் புலனாய்வு...

வெளிநாடுகளில் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள அதிநவீன சத்திரசிகிச்சை கூடத்திற்கு யாழ்ப்பாணத்திலுள்ள சில வைத்திய நிபுணர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்திற்கு கிடைக்கவுள்ள மிகச் சிறந்த வைத்திய கூடம் திரும்பிச்செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படுமாக இருந்தால், தனியார் வைத்தியசாலைகளின் வருமானம் இழக்கப்படும் என்று கருதியே யாழ்ப்பாணத்தின்...

வரிவிலக்கு அனுமதி பத்திர திட்டத்தை தவறான பயன்படுத்தியமை குறித்து அரசாங்கம் மற்றும் எதிர்கட்சியிலுள்ள 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நம்பகமானதும் சுயாதீனமானதுமான விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரிவிலக்கு...

சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் விட்டுவிடும் செயற்பாட்டையே அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், இதற்கு இடமளிக்க முடியாதென்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடு தொடர்பில் அரசாங்கத்திற்கு இடித்துரைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்.நூலக மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற கூட்டத்தில் ஆற்றிய...

தமிழ் மக்கள் பேரவையின் முதலாம் ஆண்டு பூர்த்தி! பேரவைக்கூட்டத்தில் இணைத்தலைவர் Dr.லக்ஸ்மன் ஆற்றிய உரை
தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு பூர்த்தியடைந்துள்ள இன்றையநாளில் (19-12-2016) , மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூடியிருக்கின்றோம். எதுவித தனிப்பட்ட , சுய அரசியல் நலன்களை விடுத்து இனத்தின் நலனை மட்டும் இலக்காக கொண்டு நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இயங்கவேண்டிய காலத்தின் தேவைப்பாட்டை உணர்ந்து தமிழ் மக்கள் பேரவை 19/12/2915அன்று முதன்முறையாக...

வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் இணங்க மாட்டாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். இரண்டு மாகாண முதலமைச்சர்களை பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ள நிலையில் ஒருவரைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியை எடுப்பது புத்திசாலித்தனமல்ல எனவும் அமைச்சர் கூறினார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்...

காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, தமிழ் நாடு காரைக்கால் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் சேவையை நடாத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதற்கிணங்க, காங்கேசன்துறையிலிருந்து, காரைக்காலுக்கு கப்பல்சேவை நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதிவரை திருவெம்பாவைத் திருவிழா சிதம்பரத்தில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. திருவெம்பாவின் இறுதி நாளான, திருவாதிரையன்று ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தில் உள்ள...

சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் விசேட வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து களுத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. சங்கத்தானை பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் வேனில் பயணித்த 11 பேர் உயிரிழந்தனர். களுத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வேனும் யாழ்ப்பாணத்தில் இருந்து...

வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற எந்தவொரு அமைதியற்ற செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று புனவாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க கூறினார். புனர்வாழ்வு பயிற்சி வெற்றிகரமாக அமைந்ததால் அவர்கள் மீண்டும் ஒருபோதும் மோதலுடன் தொடர்புபட மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். எதிர்வரும் இரண்டு...

காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானநிலையம் மற்றும் திருகோணமலை எண்ணெக்குதம் போன்ற அரசாங்கச் சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது தொடர்பாக அக்கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவிக்கையில், விலைமனுக்கோரலின்றி எந்தவிதக் கொடுக்கல் வாங்கல்களும் இடம்பெறாது எனக் கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது....

பாவனைக்குதவாத வகையிலான ஜெலியை விற்பனை செய்த நிறுவனத்திற்கு கால அவகாசத்துடன் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார் பருத்தித்துறை நீதவான் சிவகுமார். யாழ்ப்பாணத்தில் தூசு, இறந்த நிலையிலுள்ள பூச்சிகள் கலந்த ஜெலிகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பாவனையாளர் அதிகார சபையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே நேற்றயதினம் நீதவான் தண்டம் விதித்ததுடன் அந்த...

குரும்பசிட்டி கிழக்கு, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார் என்று, அவரது பெற்றோரால், தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிறுமி, கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. மகேந்திரன் வினித்தா என்ற மேற்படி சிறுமி, கடந்த 12ஆம் திகதி மாலை வேளையில், வீட்டில் இருந்த போதே,...

அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திகதிகள் எதனையும் நிர்ணயம்...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி...

முல்லைத்தீவு மாவட்டத்தில் கூடிய விரைவில் தமிழ் மக்கள் சிறுபான்மை இனமாக மாறும் நிலை ஏற்படும் என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களை சிறுபான்மையாக்குவதற்கான அடித்தளங்கள் இடப்பட்டு வருகின்றன. மக்களிருக்கும் நிலங்களை...

பொது மக்களுக்குச் சொந்தமான ஓமந்தை சோதனைச் சாவடி காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். குறித்த காணிக்கு மாற்றீடாக வேறு 6 ஏக்கர் காணியை இராணுவத்தினருக்கு வழங்கவும் மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று ஓமந்தைச்...

ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டும் சரணடைந்த நிலையிலும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு, விஷ ஊசி ஏற்றியிருக்கின்றார்கள் என்ற சந்தேகம் தொடர்ந்தும் வலுப்பெற்று வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா அச்சம் வெளியிட்டுள்ளார். புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்ட நிலையில், காய்ச்சல் காரணமாக...

ஒற்றையாட்சி மூலம் சமஷ்டி பண்புகளை பெறமுடியாதென்றும் அதனை ஏற்றுக்கொள்ள தயாரில்லையென்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சமஷ்டி என்ற சொல்லில் தங்கியிருக்கக் கூடாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் மாவை மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். அத்தோடு, 13ஆவது திருத்தச்...

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற நாடுகள் எடுத்த முயற்சிகளுக்கு இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டதாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலரும், பாதுகாப்புச் செயலருமான சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன்...

All posts loaded
No more posts