- Monday
- August 18th, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பகுதி தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலம் சிங்களக் குடியேற்றங்களுக்கு அபகரிக்கப்பட்டு அங்கு வாழும் தமிழ் மக்கள் அச்சுறுத்தல் காரணமாக தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், அண்மைக்காலமாக கொக்குளாய் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் பிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை அமைத்து வருகின்றார். இதற்குரிய காணியை முல்லைத்தீவு மாவட்ட...

யாழ். கோப்பாய் பகுதியில் வாள் மற்றும் கஞ்சாவுடன் ஆறு இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் நிலைய பொறுப்பதிகாரி சுபாஷ் மஞ்சுள காந்தோல தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், கோப்பாய் பகுதியில் கஞ்சா புகைத்து விட்டு குழப்பத்தை தோற்றுவிக்கும் கும்பல் ஒன்று தொடர்பாக மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்றய தினம் அதிகாலை பொலிஸார்...

வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்க இடமளிக்கக்கூடாது என வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் தவறானது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பௌத்தர்கள் வாழாத இடத்தில், சட்டவிரோதமான முறையில் பலாத்காரமாக புத்தர் சிலைகளைத் தனியார் காணிகளில் இராணுவத்தினரின் துணையுடன் அமைப்பதையே வடமாகாண சபை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நீதியமைச்சர்...

வடக்குக் கிழக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றபோதிலும், அங்குள்ள பொதுமக்கள் இராணுவத்தினரின் பிரசன்னத்தையே விரும்புகின்றனர் என பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, பூநகரிப் பிரதேசங்களில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் சூரியசக்தியினால் இயங்கும் இயந்திரங்கள் கையளிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றையதினம்...

வடக்குக் கிழக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கல்லினால் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் வீட்டுத் திட்ட இழுபறி நிலமை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வடக்கு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவைப்பதில் தமக்கு எந்தப் பிரச்சனையுமில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்....

புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக, மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவைப் பெறுவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலின்போது சிறீலங்கா அரசாங்கம்...

வடபகுதி கடற்பரப்பில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் உதவியுடன் அத்துமீறும் தென்னிலங்கை இழுவைப் படகுகளை விரட்டியடிப்பதற்கு ஆயுதம் ஏந்துவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று வடமாகாண கடற்தொழில் சமூகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அட்டகாசங்களை விட கடலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத இராணுவத்தின் அட்டீழியங்கள் அதிகரித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். வடமாகாண கடற்தொழிலாளர் இணையம்,...

தமிழர் தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் மற்றும் அநியாயச் செயல்களுக்காக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடக பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து...

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது 2001 ஆம் ஆண்டு தாக்குதல் நடாத்தியமை தொடர்பான வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நெப்போலியன் எனும் நபர் பிரபல ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் ஆவார். கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில் நிமலராஜன் வீட்டில்...

கடந்த அரசாங்கமானது முன்னாள் போராளிகளுக்கு முறையான ரீதியில் புனர்வாழ்வளிக்காமல் விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அதனால் வடக்கிலிருந்து எக்காரணம் கொண்டும் இராணுவத்தை வெளியேற்ற முடியாதென குறிப்பிட்டுள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் செலவீனங்கள் தொடர்பான குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தினால் புனரவாழ்வளிக்கப்பட்டவர்கள் எங்கு உள்ளனர் என தெரியாத...

இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்போர் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கோரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் நேற்று வெளியிடப்பட்ட சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் இறுதி அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் 10 பேர் கொண்ட...

7 குற்ற செயல்களுக்கு தீர்மானிக்கப்பட்ட 25,000 ரூபாய் தண்டப்பணத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த 7 குற்றச்சாட்டுகளுக்கும் சட்டத்தை செற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், சாரதி...

இறுதி யுத்தத்தில் 12ஆயிரம் புலிகள், பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. இந்நிலையில், வடக்கிலிருந்து பாதுகாப்பு படையினரை குறைக்கமுடியாது என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தனர்.

“மாவிலாறு யுத்தம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தின் களரியில் வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பியுமான இரா. சம்பந்தனை சந்தித்தேன்“ என்று தெரிவித்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல, “யுத்தத்தை பிரகடனப்படுத்தியதை இட்டு நாங்கள் பெரும் சந்தோஷம் அடைகின்றோம். ஏனென்றால் அப்போதுதான் தமிழீழத்தை விரைவில் பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.

யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள படைவீரர்களை மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாரத்ன நிர்வகிக்கிறார். இவர் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட இராணுவ அதிகாரியென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. இதுவே தென்னிலங்கையில் நிகழ்ந்திருந்தால் நிலமை வேறானதாக இருக்கும் என்றும் பிரதமர்...

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி, இருவரை படுகொலை செய்ததுடன் 20 பேர் வரை காயமடைந்தனர். குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று எதிரிகளுக்கும் இரட்டை மரண தண்டனையும் பத்து வருட சிறைத் தண்டனையும் விதிக்க வேண்டும் என்று சட்ட மாஅதிபர் சார்பில் பிரதி அரச...

யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.1981ம் ஆண்டில் யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார். குறித்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக மன்னிப்பு கோருமாறு கூட்டு எதிர்க்கட்சியினரிடமும் அவர் கோரியுள்ளார். 1981ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதாகவும் இது பிழையானது...

யாழ் மாவட்ட பொதுமக்கள் துணிந்து தமது குறைகளையும் பிரச்சினையும் வழங்குவதற்கு பொதுமக்கள் குறைகேள் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ் மேலதிக அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். குறைகள் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகவோ, மேலதிக அரசாங்க அதிபரிடமோ, 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது கடிதமூடாகவோ தொடர்புகொள்ளுமாறும் தகவல் அவர் தெரிவித்துள்ளார். இவற்றை வழங்குபவர்கள் தொடர்பிலான விபரங்கள...

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இரவு நேரங்களில் விசேட அதிரடிப் படையினரின் ரோந்து நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சுமார் 10 எண்ணிக்கையைக் கொண்ட இந்த விசேட அதிரடிப் படையினர், நகரப் பகுதிகளின் வீதிகளில் ரோந்து செய்து வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் மாவீரர்தினம் அனுஸ்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வீதி...

13 ஆவது திருத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டதனால் பிரச்சினைக்கு ஒருமித்த நாட்டுக்குள் தீர்வொன்றைக்காண அனைவரும் முன்வரவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் கொழும்பு மாநாகர மேயர் க.கணேசலிங்கத்தின் 10 ஆவது வருட நினைவு தினைத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்து மாமன்றம் மற்றும் இந்து வித்யா விருத்திசங்கத்தின் ஏற்பாட்டில் பொழும்பு...

All posts loaded
No more posts