- Monday
- August 18th, 2025

தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆகிய இரண்டையும் அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ மொழியாக மாற்றுவது தொடர்பில் அரசியல் நிர்ணய சபை யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. குறித்த யோசனைக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை நேற்றய தினம் வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், வட கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தமையினால் கட ந்த...

கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்தில் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம் (வயது 62) என்ற விவசாயியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த...

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 5 இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 வாள்கள், வாள்வெட்டுக்கு தயாராகும் புகைப்படங்கள், வீடியோக்கள் அடங்கிய கையடக்க தொலைபேசி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் முயற்சியில்...

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 20ம் திகதி பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்து இருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான்...

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், எனினும் உடனடியாக இரு மாகாணங்களையும் இணைப்பது நடைமுறைச் சாத்திமற்றது என குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

பயணிகளின் தேவையை பூர்த்தி செய்தியுமளவுக்கு ரயில் சேவைகள் நடத்தப்படுவதாக ரயில் கட்டுப்பாட்டு அதிகாரி விஜயசமரசிங்க தெரிவித்தார். இதே வேளை பயணிகளின் நலன்கருதி கூடுதலான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்தார். பயணிகளின் நலன்கருதி நேற்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நான்காயிரத்து 100 பஸ்கள் குறுந்தூர மற்றும் நெடுந்தூர...

நாட்டில் மீண்டுமொரு இரத்தகளரி உருவாக வேண்டும் என்று சிலர் எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேசிய ஒருமைப்பாடு, தேசிய சகவாழ்வு மற்றும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூல விவாதத்தில் கலந்து சிறப்புரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசியல் தீர்வை முன்வைப்பது தேசத்துரோக நடவடிக்கையல்ல...

தென்மேற்கு வங்காளவிரிகுடாவில் உருவாகியுள்ள NADA சூறாவளியானது கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து தற்போது அதன் வலு குறைவடைந்து, தாழமுக்கமாக உருமாறியுள்ளது. இந்த NADA சூறாவளியானது இலங்கையின் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்காக 200 கிலோமீற்றர் தூரத்திலும் சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 290 கிலோமீற்றர் தூரத்திலும் புதுச்சேரியிலிருந்து தென்கிழக்காக 210 கிலோமீற்றர் தூரத்திலும்...

வானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்துவரும் 24 மணிநேரங்களுக்குள் வீசக்கூடும். அதேவேளை 46 மில்லிமீற்றரில் இருந்து 57 மில்லிமீற்றர் வரையான மழைவீச்சியும் அடுத்துவரும் 24 மணிநேரத்தினுள் எதிர்பார்க்கப்படுகிறது. சடுதியான கனமழை காரணமாகவும் கடும் சுழல்காற்றுக் காரணமாகவும் நேரக்கூடிய போக்குவரத்துத் தடை, மின்சார மற்றும்...

சுன்னாகம் பிரதேசத்தில் குடிநீரில் கழிவு எண்ணெய் கலப்பிற்கு காரணமாக நிறுவனம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நோர்தன் பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையம் சார்பாக பேராசிரியர் ரவீந்திர காரியவசம் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை நேற்றைய தினம்...

யாழ்.குடாநாட்டில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நீடித்துவரும் நிலையில் வரலாறு காணாத வகையில் குடாநாட்டின் வெப்பநிலை 19.8 பாகை செல்சியஸ் ஆக உள்ளதாக யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் கூறியுள்ளார். குடாநாட்டின் காலநிலை நிலவரம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தென்மேற்கு வங்க கடலில் உருவான ´நடா´ சூறாவளி தற்சமயம்...

அடுத்து வரும் 12 மணித்தியாலங்கள் முதல் சூறாவளி வீச கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகினர் அறிவித்து உள்ளனர். இது தொடர்பில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகினர் ஊடகங்களுக்கு அனுப்பி உள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருப்பதாவது, திருகோணமலையிலிருந்து 40 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளது, இத்தாழமுக்கம் யாழ்...

யாழில் இயங்கும் ஆவா எனும் குழு தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 11 பேரையும் சரீரப் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். அண்மைக் காலங்களில் யாழில் இடம்பெற்ற சில வன்முறைச் சம்பவங்களுடன் ஆவா எனும் குழு தொடர்புபட்டுள்ளதாக, தகவல் வௌியானது. இதற்கமைய, பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த குழுவுடன்...

நாங்கள் எதிர்பார்க்காத அதிர்ச்சி தரக்கூடிய அரசியல் மாற்றமொன்று இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் விஷேட கூட்டம் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், நாட்டின்...

கடந்த 2001ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கென ஊர்காவற்துறை நோக்கிச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த நெப்போலியன் தலைமையிலான குழுவினரே தாக்குதல் நடத்தினர் என நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றை தனியார்பஸ் ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.குறித்த விபத்தில் தனியார் மினிபஸ்சில் பயணித்த 14 பேர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில்...

மாவீரர் தினத்தை அனுஷ்டித்ததனூடாக வடக்கிலுள்ளவர்கள் சட்டத்தை அவமதித்துள்ளதாகவும், அவர்களை உடனே கைதுசெய்து காவல்துறைமா அதிபர் நீதியை நிலைநாட்டுவார் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று ஹெல உறுமயவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு இடமளிக்க மாட்டோம்...

“ஆரம்பத்தில் ஒன்றாகச் சேர்ந்து போரிட்டிருந்தால், வடக்கு, கிழக்கை அல்ல, முழு இலங்கையையுமே பிடித்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செயற்பட்டு, தனிநாடு எடுப்பதை இந்தியா விரும்பவில்லை. அதேபோன்று தமிழர்கள் ஒன்றாகுவதையும் இந்தியா விரும்பவில்லை” என, மீள்குடியேற்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். “எங்கள் தமிழுக்காக, தமிழ் மண்ணுக்காக மடிந்தவர்களை நினைவுகூரவேண்டியது, தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்”...

வரும் ஒரு சில மாதங்களிற்குள் ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்ட தீர்வு முன்வைக்கப்படவுள்ளதாகவும் அதனை எதிர்க்கும் அமைப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திகழ்வதால் தமது கட்சியை முடக்கும் திரைமறைவுச் சதிகள் நடைபெற்றுவருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்று (27) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் தலைமையகத்தில் மாலை 06.05 மணிக்கு...

தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் கைலாசபதி கலையரங்கின் நுழைவாயில் சிவப்பு, மஞ்சள் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு, தலைவர் பிரபாகரனின் படம் வைக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் கேக்கில் மேதகு பிரபாகரன் என எழுதப்பட்டு 62 ஆவது மெழுகு திரி கொழுத்தப்பட்டுள்ளது.

All posts loaded
No more posts