- Monday
- August 18th, 2025

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்ளைச் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிரமதான பணிகள் இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிரமதானப் பணிகளில் அப்பகுதி மக்கள் மற்றும் வடமாகாண கல்வியமைச்ச குருகுலராசா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் ஆகிய பகுதிகளில் மொத்தமாக...

வடக்கு மாகாண மக்களுக்கான பொருத்து வீட்டுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட எந்தத் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் நான் அத்திட்டத்தை அமுல்படுத்தியே தீருவேன் என மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன பொருத்து வீட்டுத் திட்டத்தை நிறுத்தியுள்ளார் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ்த் தேசியக்...

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடற்படைத் தளம் அமைந்துள்ள நிலப்பகுதியினை புதிய சரத்தின் கீழ் அபகரிக்கும் பொது அறிவித்தல் நேற்றுமாலை பிரதேச செயலாளரினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் உள்ள பொதுமக்களிற்குச் சொந்தமான 617 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கடற்படை முகாம் பகுதியினை முழுமையாக அபகரிக்க இதுவரை காலமும் காணி சுவீகரிப்பின் 38 ஏ யின்...

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை எந்த பெயரைக் கொண்டு நினைவுகூர்ந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் மாவீரர்களை நினைவுகூர முடியாது எனஅரசாங்கம் அறிவித்துள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் கடந்த முறை முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தினத்தில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்து கொண்டதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன, இம்முறை எத்தனை பேர் கலந்துகொள்வார்கள்...

“‘எல்.ரீ.ரீ.ஈ தலைவரொருவர் இருக்கிறார். அவரை, நாளை கொல்லப்போகிறோம். போவோமா?’ என, கருணா அமைப்பைச் சேர்ந்த சாமி என்பவர் கேட்டார். அதற்கு நான், சரி எனக் கூறினேன்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் முதலாவது சாட்சியாளரான பிருதிவிராஜ் மனம்பேரி, நேற்றுப் புதன்கிழமை (23), கொழும்பு...

பருவ நிலை மாற்றத்தால் உலகில் 48 நாடுகள் நீரில் மூழ்கும் ஆபத்து நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் பூமி அதிக அளவு வெப்பமாகி வருகிறது, இதன் காரணமாக பனிப்பாறைகள் உருகுகின்றன. அவை தண்ணீராக மாறி கடல் நீரில் கலக்கின்றன. இதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதே நிலை நீடிக்குமானால், பூகோள...

யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் ஆயுதம் தரித்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் பிறந்த தினத்தை கொண்டாடும் நோக்கில் மாணவர்கள் பலர் ஒன்றுகூடிய நிலையில், சுமார் இரவு 11 மணியளவில் திடீரென விடுதிக்குள் நுழைந்த பொலிஸார் மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஏனைய மாணவர்களின்...

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பாதுகாப்பான வதிவிடமொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தற்போதுள்ள வதிவிடத்தில் எதிர்கட்சித் தலைவர் வசிப்பதாக வரவுசெலவுத் திட்டம் மீதான குழு நிலைவிவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன்...

யாழ்ப்பாணம் துன்னாலை வடக்கு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை பொலிஸார் மீது, மிளகாய்பொடி வீசி ஆயுதங்களை பறிக்க முற்பட்ட சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (20) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியூடாக மண் கடத்தல் இடம்பெறுவதையடுத்து, கெட்டிசந்தி பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பகல் கடமைக்கு 5 பேரும், இரவுக் கடமைக்கு 5...

கடந்த காலங்களை போலல்லாது இம்முறை மாவீரர் வாரத்தை எவ்வித இடையூறும் இன்றி அனுஷ்டிக்கலாம் என பலத்த எதிர்பார்ப்புகள் காணப்பட்ட நிலையில், அதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார். உரிமைகளுக்காய் ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை நினைவுகூருவதற்காக அனுஷ்டிக்கப்படும் மாவீரர் வாரம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதற்கென...

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உக்ரேனில் வைத்து அடித்துக்கொல்லப்பட்டுள்ளதாக குறித்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்வதற்காக உக்ரேனில் தங்கிநின்றபோதே கடந்த 28 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வல்வெட்டித்துறை கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த இரத்னசிங்கம் வினோதரன் வயது 32 என்ற இளைஞரே அந்நாட்டு...

இலங்கையர்கள் 32 பேர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்று வருகின்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், சில இணையத்தளங்கள் போலியான வதந்திகளை...

சிறீலங்காவில் சிங்கள மக்களை அச்சத்தில் உறையச்செய்துவிட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ இழைத்த தவறுகளை தாம் உணர்ந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், தவறுகளைத் திருத்திக்கொண்டு தாம் மீண்டும் ஆட்சிபீடம் ஏற மக்கள் தமக்கு வாக்களிக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். முன்னாள் ஆட்சியாளர்...

இனவாதம் பேசுவோருக்கெதிராக எந்தவொரு தயவு, தாட்சயணியமும் பாராது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபி மைத்திரிபால சிறிசேன காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றித் தெரிவிக்கையில், நேற்றிரவு எட்டு மணியிலிருந்து 10.00 மணிவரை நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில்...

சுவிட்ஸர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டு நாட்டை வந்தைடைந்த ஈழத்தமிழர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுவிட்ஸர்லாந்தில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 9 தமிழர்கள் விஷேட விமானம் மூலம் நேற்றைய தினம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்நிலையில் அவர்களை நேற்றைய தினமே கைது செய்திருந்த ஸ்ரீலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை...

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் 41 பேர் உட்பட ஸ்ரீலங்கா இராணுவத்திடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களான யோகி, புதுவை, எழிலன் உட்பட 41 பேரும் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தமைக்கான சாட்சிகள் இருப்பதாக...

“ஆவா“ குழுவின் உறுப்பினர்கள் 11 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

யாழ். மாநகர சபை சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பினால் யாழ். நகர் முழுவதும் கழிவுப்பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தினால் வயிற்றோட்டம், கொலரா மற்றும் டெங்கு ஆகிய நோய்கள் பரவலாம் என அரச மருத்துவ சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை ஆரம்பித்துள்ளதால் கழிவுகள் நீரில்...

ஆவா குழு என சந்தேகிக்கப்படும் 62 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 38 பேர் தற்போது வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் அனுரகுமார திஸாநாயக்கவால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழுவினர் முதலில் வாள்களை பிரேசிலில் இருந்தே கொண்டு வந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், முன்னதாக இந்தியாவுக்கு அவற்றை...

இலங்கையில் ஆட்கடத்தலும் சித்திரவதைகளும் இராணுவம் உள்ளிட்ட அரச படையினராலும் புலனாய்வுப் பிரிவினராலும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, இலங்கை படையினரின் மரபணுக்களின் இவ்வாறான செயல்கள் ஆழமாக உறைந்துபோயுள்ளதென குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வெள்ளைவான் கடத்தல்களும் சித்திரவதைகளும் தொடர்வதோடு, வதை முகாம்களும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள...

All posts loaded
No more posts