- Tuesday
- December 30th, 2025
யாழ்.குடாநாட்டில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நீடித்துவரும் நிலையில் வரலாறு காணாத வகையில் குடாநாட்டின் வெப்பநிலை 19.8 பாகை செல்சியஸ் ஆக உள்ளதாக யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் கூறியுள்ளார். குடாநாட்டின் காலநிலை நிலவரம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தென்மேற்கு வங்க கடலில் உருவான ´நடா´ சூறாவளி தற்சமயம்...
அடுத்து வரும் 12 மணித்தியாலங்கள் முதல் சூறாவளி வீச கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகினர் அறிவித்து உள்ளனர். இது தொடர்பில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகினர் ஊடகங்களுக்கு அனுப்பி உள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருப்பதாவது, திருகோணமலையிலிருந்து 40 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளது, இத்தாழமுக்கம் யாழ்...
யாழில் இயங்கும் ஆவா எனும் குழு தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 11 பேரையும் சரீரப் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். அண்மைக் காலங்களில் யாழில் இடம்பெற்ற சில வன்முறைச் சம்பவங்களுடன் ஆவா எனும் குழு தொடர்புபட்டுள்ளதாக, தகவல் வௌியானது. இதற்கமைய, பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த குழுவுடன்...
நாங்கள் எதிர்பார்க்காத அதிர்ச்சி தரக்கூடிய அரசியல் மாற்றமொன்று இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் விஷேட கூட்டம் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், நாட்டின்...
கடந்த 2001ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கென ஊர்காவற்துறை நோக்கிச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த நெப்போலியன் தலைமையிலான குழுவினரே தாக்குதல் நடத்தினர் என நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றை தனியார்பஸ் ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.குறித்த விபத்தில் தனியார் மினிபஸ்சில் பயணித்த 14 பேர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில்...
மாவீரர் தினத்தை அனுஷ்டித்ததனூடாக வடக்கிலுள்ளவர்கள் சட்டத்தை அவமதித்துள்ளதாகவும், அவர்களை உடனே கைதுசெய்து காவல்துறைமா அதிபர் நீதியை நிலைநாட்டுவார் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று ஹெல உறுமயவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு இடமளிக்க மாட்டோம்...
“ஆரம்பத்தில் ஒன்றாகச் சேர்ந்து போரிட்டிருந்தால், வடக்கு, கிழக்கை அல்ல, முழு இலங்கையையுமே பிடித்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செயற்பட்டு, தனிநாடு எடுப்பதை இந்தியா விரும்பவில்லை. அதேபோன்று தமிழர்கள் ஒன்றாகுவதையும் இந்தியா விரும்பவில்லை” என, மீள்குடியேற்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். “எங்கள் தமிழுக்காக, தமிழ் மண்ணுக்காக மடிந்தவர்களை நினைவுகூரவேண்டியது, தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்”...
வரும் ஒரு சில மாதங்களிற்குள் ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்ட தீர்வு முன்வைக்கப்படவுள்ளதாகவும் அதனை எதிர்க்கும் அமைப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திகழ்வதால் தமது கட்சியை முடக்கும் திரைமறைவுச் சதிகள் நடைபெற்றுவருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்று (27) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் தலைமையகத்தில் மாலை 06.05 மணிக்கு...
தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் கைலாசபதி கலையரங்கின் நுழைவாயில் சிவப்பு, மஞ்சள் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு, தலைவர் பிரபாகரனின் படம் வைக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் கேக்கில் மேதகு பிரபாகரன் என எழுதப்பட்டு 62 ஆவது மெழுகு திரி கொழுத்தப்பட்டுள்ளது.
உயிர்நீத்த உறவுகளுக்காக கண்ணீர் சிந்துவதும் அஞ்சலி செலுத்துவதும் மக்களின் அடிப்படை உரிமையாகும். இதனை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார். கடந்த 21ஆம் திகதி முதல் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நாளை மாவீரர் தின நினைவேந்தல்களை நடத்த எதிர்ப்பார்த்துள்ள நிலையில், அரச தரப்பில்...
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்ளைச் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிரமதான பணிகள் இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிரமதானப் பணிகளில் அப்பகுதி மக்கள் மற்றும் வடமாகாண கல்வியமைச்ச குருகுலராசா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் ஆகிய பகுதிகளில் மொத்தமாக...
வடக்கு மாகாண மக்களுக்கான பொருத்து வீட்டுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட எந்தத் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் நான் அத்திட்டத்தை அமுல்படுத்தியே தீருவேன் என மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன பொருத்து வீட்டுத் திட்டத்தை நிறுத்தியுள்ளார் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ்த் தேசியக்...
முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடற்படைத் தளம் அமைந்துள்ள நிலப்பகுதியினை புதிய சரத்தின் கீழ் அபகரிக்கும் பொது அறிவித்தல் நேற்றுமாலை பிரதேச செயலாளரினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் உள்ள பொதுமக்களிற்குச் சொந்தமான 617 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கடற்படை முகாம் பகுதியினை முழுமையாக அபகரிக்க இதுவரை காலமும் காணி சுவீகரிப்பின் 38 ஏ யின்...
போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை எந்த பெயரைக் கொண்டு நினைவுகூர்ந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் மாவீரர்களை நினைவுகூர முடியாது எனஅரசாங்கம் அறிவித்துள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் கடந்த முறை முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தினத்தில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்து கொண்டதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன, இம்முறை எத்தனை பேர் கலந்துகொள்வார்கள்...
“‘எல்.ரீ.ரீ.ஈ தலைவரொருவர் இருக்கிறார். அவரை, நாளை கொல்லப்போகிறோம். போவோமா?’ என, கருணா அமைப்பைச் சேர்ந்த சாமி என்பவர் கேட்டார். அதற்கு நான், சரி எனக் கூறினேன்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் முதலாவது சாட்சியாளரான பிருதிவிராஜ் மனம்பேரி, நேற்றுப் புதன்கிழமை (23), கொழும்பு...
பருவ நிலை மாற்றத்தால் உலகில் 48 நாடுகள் நீரில் மூழ்கும் ஆபத்து நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் பூமி அதிக அளவு வெப்பமாகி வருகிறது, இதன் காரணமாக பனிப்பாறைகள் உருகுகின்றன. அவை தண்ணீராக மாறி கடல் நீரில் கலக்கின்றன. இதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதே நிலை நீடிக்குமானால், பூகோள...
யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் ஆயுதம் தரித்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் பிறந்த தினத்தை கொண்டாடும் நோக்கில் மாணவர்கள் பலர் ஒன்றுகூடிய நிலையில், சுமார் இரவு 11 மணியளவில் திடீரென விடுதிக்குள் நுழைந்த பொலிஸார் மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஏனைய மாணவர்களின்...
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பாதுகாப்பான வதிவிடமொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தற்போதுள்ள வதிவிடத்தில் எதிர்கட்சித் தலைவர் வசிப்பதாக வரவுசெலவுத் திட்டம் மீதான குழு நிலைவிவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன்...
யாழ்ப்பாணம் துன்னாலை வடக்கு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை பொலிஸார் மீது, மிளகாய்பொடி வீசி ஆயுதங்களை பறிக்க முற்பட்ட சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (20) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியூடாக மண் கடத்தல் இடம்பெறுவதையடுத்து, கெட்டிசந்தி பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பகல் கடமைக்கு 5 பேரும், இரவுக் கடமைக்கு 5...
Loading posts...
All posts loaded
No more posts
