- Tuesday
- December 30th, 2025
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது அவசியமானதென்றும் அதன் ஒவ்வொரு அமர்விலும் பெரும்பான்மை தேசிய நீதிபதிகளுடன் குறைந்தபட்சம் ஒரு சர்வதேச நீதிபதி நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நீதிபதிகளின் தெரிவு தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளின் ஆலோசனையை பெற்று, அரசியலமைப்பு...
யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவிருந்த “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” பிராந்திய அலுவலக திறப்பு நிகழ்வு, தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இறுதி யுத்தம் முடிவடைந்த போது ராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தெரியும் என முன்பு சாட்சியம் அளித்த ராணுவ அதிகாரி ஒருவர், நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் அதுபற்றி எதுவும் தெரியாது எனத் தெரிவித்திருக்கிறார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவராகிய நடேசு முரளிதரன், அவருடைய மனைவி ஜெயக்குமாரி, அவர்களுடைய...
வடக்கு மாகாண முதலமைச்சரை சில தவறான வழிநடத்தல் காரர்களே கனடா நாட்டிற்கு அழைப்பதாகவும் அவரை அங்கு செல்லவேண்டாமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கனடா நாட்டின் மார்க்கம் நகரில் நிகழ்வுகளை நடாத்துபவர்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கனடாவிற்குச் செல்லவுள்ள நிலையில், அந்நிகழ்வுகளை நடாத்துபவர்கள்...
நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்கொலை செய்யும் முன் அவா் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கணவன்...
போக்குவர்த்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படவுள்ளதாக உத்தேசி்க்கப்பட்ட 25,000 ரூபா அபராதம் விரைவில் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வௌியிட்டார். மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்ட...
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி இரணைமடு சந்தியில் ஒன்று திரண்டு வேலை வாய்ப்பு வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளாகிய தம்மை விடுதலை செய்யும்போது வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் என உறுதியளித்த போதிலும், இன்றுவரை தாம் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமக்கு வேலை...
தமிழ் சமூகத்தை பேரதிர்ச்சிக்கு உட்படுத்தும் விதமாக நடாத்தப்பட்ட திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை இடம்பெற்று இன்றுடன் பத்து வருடங்கள் கடந்து ஒரு தசாப்தம் ஆகியுள்ளது. இந்தப் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின் போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுக்கு இப்படுகொலையும் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. 2006 ஜனவரி 2 ஆம் நாள் திருகோணமலை,...
சாவகச்சேரியைச் சேர்ந்த இனியவன் என்று அழைக்கப்படும் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தர்மசேனா ரிசீகரன் என்ற 34 வயதான 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் உறுப்பினராக செயற்படும் இவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் என்கின்ற சொற் பிரயோகங்களை சர்வதேசஅளவில் மாத்திரமன்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் தமது சுயலாபங்களுக்கு பயன்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை பொறுத்தவரையில் அது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல. இன்றுவரைக்கும் அது ஒரு பிரச்சினையாக இருந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். வடமாகாண சபையின் புதிய...
2009ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது கணவரை மீட்டுத் தாருங்கள் என புவனேந்திரராசா இராசேஸ்வரி என்ற குடும்பத் தலைவி கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத்தினரின் அறிவிப்புக்கேற்ப சரணடைந்த தனது கணவனை மனநோயாளியாக்கி காணாமல் போகச் செய்துள்ளனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சி – கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதான அருணாச்சலம்...
“கேப்பாப்புலவுக்கு வருகை தரும் ஜனாதிபதியிடம் இராணுவ முகாம்களை அகற்றி கேப்பாப்புலவு கிராமத்தினை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவோம்” என கேப்பாப்புலவு மக்கள் தெரிவிக்கின்றனர். “இடம்பெயர்ந்த போது, இராணுவத்தினர் எமது கிராமத்தினை முழுமையாகக் கைப்பற்றி இராணுவ முகாம்களை எமது பூர்வீக நிலத்தில் அமைத்தனர். எம்மை நலன்புரி நிலையங்களில் இருந்து அழைத்து வந்த இராணுவத்தினர், 2012ஆம் ஆண்டில்...
சிங்கள, பௌத்த தீவிரவாதத்தை தூண்டி, தமிழ் மக்களுக்கு எதிரான இனத்துவேசத்தை வளர்த்து, அதனூடாக ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்சவினுடைய இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் எவ்வாறான மாற்று நடவடிக்கை எடுக்கப் போகின்றது...
அக்காவுக்கு ஏதாவது நடந்தால் குண்டுவைக்கவும் தயங்கமாட்டேன் என கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, அண்மையில் நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பார் என கருத்து வெளியிட்டிருந்தார். இந்த நிலையில்...
இருட்டிலிருந்த தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் தலைவர் பிரபாகரனே. அவர் மீது தமிழ் மக்களுக்கிருக்கும் மரியாதையை ஒருபோதும் இல்லாமலாக்கமுடியாது. அதன்காரணமாகவே விஜயகலா மகேஸ்வரனும் தலைவர் பிரபாகரன் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார் என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். நவசம சமாஜக் கட்சி அலுவலத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைவர்...
காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி நேற்று இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக அரசு உடன் பொறுப்பு கூற வேண்டும். தவறினால் வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கப் போவதாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.ரி.சிவலிங்கம் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையினை குற்றப்புலனாய்வு பிரிவினர்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பிரதமர் பதவியொன்று வழங்கப்படும் பட்சத்தில் இணைந்து கடமையாற்ற தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிததுள்ளார். கொழும்பில் நேற்று வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த சந்தர்ப்பத்திலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்திப்பின் போது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பிரதமர் பதவியொன்று வழங்கப்படும் பட்சத்தில், ஜனாதிபதியுடன் இணைந்து...
2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கமைய யாழ்ப்பாணத்தில் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு மத்திய அரசாங்கத்தினால் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவர் வைத்தியசாலையானது போதனா வைத்தியசாலையுடன் இணைந்ததாகவே அமைக்கப்படவேண்டுமென்பதால், யாழ். போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகில் 1.5...
மீளக்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட பலாலி வடக்கில் 137 வீடுகளின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக தெல்லிப்பழை பிரதேசச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீள்குடியேற்ற அமைச்சின் 8 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அன்ரனிபுரம் பகுதியில் 30 வீடுகளின் பணி நிறைவடைந்துள்ளது. அதேபோல் காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அரச காணியில் கட்டப்பட்ட 107 வீடுகளின் பணிகளும்...
Loading posts...
All posts loaded
No more posts
