- Monday
- December 29th, 2025
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பிரதேசத்தில் பிறந்து ஒரு நாள் மாத்திரமே ஆகின்ற சிசு ஒன்றின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மல்லிகைத்தீவு கிராமத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் இந்த குழந்தையை பிரசவித்து, எரித்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார்....
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட குற்றவாளி, அடையாள அணிவகுப்பின் போது தம்மை அடையாளம் காட்ட வேண்டாம் என தெரிவித்து 5 இலட்சம் ரூபா பேரம் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின்...
மாலபே சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 7ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 7ஆம் திகதி காலை 8 மணிமுதல் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
“பேஸ்புக்கில் (FACEBOOK) அடிமையாகி இருப்பதனால், இலங்கை இளைஞர்களின் பெறுமதிமிக்க இளமைக்காலம் கரைந்தே போய்விடுகின்றது” என, பிரித்தானியாவின் சரே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். “பேஸ்புக் மட்டுமே சமூக ஊடகமாகும் எனத் தவறாக புரிந்துகொண்டமையால், தங்களுடைய பெறுமதியான இளமை காலத்தை, இலங்கை இளைஞர்கள் இழந்துவிடுகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அலைபேசிகளை, சரியானமுறையில்...
சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இரு இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று இரவு மட்டுவில் வடக்கு முத்துமாரி அம்பாள் ஆலயதிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உந்துருளியில் வந்த இனந்தெரியாத நான்குபேர் வீதியோரத்தில் கதைத்துக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிவிட்டு...
எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட்பீறியுடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த...
வடக்கு மாகாணத்திலுள்ள விசேட தேவையுடையோருக்கான புனர்வாழ்வு செயல் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தின இணக்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இரத்த வங்கி திறப்புவிழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையின் பிராந்திய இரத்த வங்கி சுகாதார அமைச்சர் டாக்டர்...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதில் கூறுவதற்கு, ஒருமாத கால அவகாசம் தனக்கு தருமாறு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் கோரிக்கை விடுத்தார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், 38ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புபோராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் வடக்குக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள, சுகாதார அமைச்சர்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இருவரை, எரித்துப் படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவத்தின் லெப்டினன்ட் கேர்ணல் உள்ளிட்ட அறுவருக்கு எதிராக அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. புலி உறுப்பினர்கள் இருவரும், 1997ஆம் ஆண்டே எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவத்தைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
வட மாகாண முதலமைசரால் நேற்று ஜனாதிபதிக்கு பின்வரும் விடயங்கள் தெரியப்படுத்தப்பட்டன. வட மாகாணத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள பிரதிநிதிகளும் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிகளும் சென்ற வாரம் தங்களுடைய அன்புக்குரியவர்கள் காணமற் போனமை பற்றி என்னைச் சந்தித்துப் பேசினார்கள். அதே போல தங்களுடைய காணிகளை விடுவிப்பது பற்றி இடம்பெயர்ந்து வாழ்வோர் என்னுடன் தொடர்புகொண்டார்கள். மேலும் வேலையற்ற பட்டதாரிகளும்...
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகள் ஸ்ரீலங்காவிலும் பிரவேசிக்கும் அபாயம் காணப்படுவதாக அமெரிக்க இராணுவத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் ஹெரி பீ ஹரிஸ் ஸ்ரீலங்கா பாதுகாப்பு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது இலக்கு நாடுகள் மீது தாக்குதலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா போன்ற அமைதி நிலைவும் நாடுகளில் பிரவேசித்து திட்டங்களைத் தீட்டும் முயற்சியில்...
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு வகுப்புத் தடையை எதிர்க்கொண்டிருந்த மாணவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததையடுத்து, நிர்வாக அடக்குமுறைக்கு எதிராக யாழ். மாணவர்கள் முன்னெடுத்துவந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழகத்திற்கான புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் குழப்பம் விளைவித்ததாக தெரிவித்தே இம் மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதுடன், கலைப்பீடமும்...
முல்லைத்தீவு பிரதேசத்தில் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பில் அரசாங்கத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மக்களுடைய காணிகள் உள்வாங்கப்படவில்லை என நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று 32 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...
“யாழ்.மேல் நீதிமன்ற வரலாற்றில் முதல் தடவையாக மூன்று மரண தண்டனை வழங்கப்பட்து இன்றைய தினமே” என, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டி படுகொலை செய்தமை மற்றும் இருவரை கொலை செய்யும்...
கேப்பாபுலவில் அமைந்துள்ள 279 ஏக்கர் காணிகள், எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி விடுவிக்கப்படுமென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். கடந்த வாரம், அமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாகவே, கேப்பாபுலவில் உள்ள 279 ஏக்கர் காணியை, மே 15ஆம் திகதிக்கு முன்னர்...
நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியுடனான காலநிலையினால் 9 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வரட்சியுடனான காலநிலையினால் 2 லட்சத்து 61 ஆயிரத்து 979 குடும்பங்களைச் சேர்ந்த 9 லட்சத்து 66 ஆயிரத்து 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வரட்சியுடனான காலநிலையினால் வட மாகாணத்தில் ஒரு லட்சத்து...
இலங்கையர்களில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் மனநோயாளர்கள் என கொத்தலாவல பாதுகாப்பு சேவை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் மனநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணருமான டாக்டர் நீல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதில், அதிகமானோர் சிசிக்சைகள் எதுவுமின்றி வாழ்ந்து வருவதாகவும் அவர் மேற்கொண்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டியுள்ளார். மனஅழுத்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த மனநோய், இருதய அடைப்பு,...
நான் செய்தது பெரிய குற்றம், மூவரது மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளேன். நான் செய்ததை நியாப்படுத்த முனையவில்லை என முக்கொலை வழக்கின் எதிரி தனது சாட்சியத்தில் தெரிவித்து உள்ளார்.கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலை வழக்கு விசாரணை புதன்கிழமை மதியம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா....
யாழ். மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாறாக பதுளை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு குறைக்கப்படும் ஒருவரது சந்தர்ப்பம் யாழ். மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளது. பதுளை மாவட்டத்தில் இதுவரை இருந்த 09 உறுப்பினர்கள் என்பது 08 உறுப்பினர்களாக குறைக்கப்படும். யாழ்ப்பாண...
தாய்நாட்டுக்காக போராடிய எந்தவொரு படைவீரரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அரசாங்கம் தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியின் புதிய கட்டிடத்தை மாணவர்களுக்கு உரித்தாக்குதல் மற்றும் விருசர சலுகை அட்டைகளை படைவீரர்களுக்கு வழங்கும் நிகழ்வில் நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி...
Loading posts...
All posts loaded
No more posts
