Ad Widget

அகதிகள் இல்லாத நிலையை ஏற்படுத்துமாறு இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்தல்

இலங்கையில் அகதிகள் இல்லாத நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பணிப்பாளர் டெய்ஸி டெல் வலியுறுத்தியுள்ளதாக வட.மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பணிப்பாளர், வட. மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையிலேயே முதலமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து மேலும் தொிவித்த முதலமைச்சர், “யாழ்.மாவட்டத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினர் மக்களின் காணிகளை அபகரித்துள்ளதால் மக்களுக்கு காணிகளை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இராணுவம் மக்களின் காணிகளை விட்டுச் சென்றால் மாத்திரமே, மக்கள் தமது காணிகளுக்குச் திரும்பிச் செல்லும் நிலை ஏற்படும்.

அத்துடன் இந்தியாவிலிருந்தும் மக்கள் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகள் அலுவலகம் முன்வர வேண்டுமென்று ஐ.நா.அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளேன். அவற்றினைப் பரிசீலிப்பதாக அவர்கள் என்னிடம் உறுதியளித்துள்ளனர்” என்றார்.

Related Posts