- Monday
- December 29th, 2025
ஆட்சியாளர்கள் அரங்கேற்றிவரும் நாடகங்கள், வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வை பெற்றுக்கொடுக்கப் போவதில்லையென தென்னிலங்கையைச் சேர்ந்த சுதந்திர பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் திருகோணமலையில் கடந்த 25 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் இன்று (புதன்கிழமை) சுதந்திர பெண்கள் அமைப்பினர் இணைந்து தமது ஆதரவை தெரிவித்தனர்....
இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும் எனவும், காணாமல் போனவர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைக்க இருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். போராட்டத்தை நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வடமாகாண முதலமைச்சர் தனது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்தச்...
முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து 7 ஆவது நாளாகவும் இன்றும் (புதன்கிழமை) முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இந்நிலையில் குறித்த மக்களை நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, அவர்களது நிலைமை குறித்துக் கேட்டறிந்தார்....
போரின் போது, அங்காங்கே சில குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார். சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசியலில் நுழைவதற்கு விரும்பாவிடினும் நாட்டுக்குச் சேவையாற்றும் வாய்ப்பை நிராகரிக்கமாட்டேன். நான் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பேன் என்பது நிச்சயமில்லை. ஆனால்...
போரின் போது குற்றம் இழைத்தவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வலியுறுத்துகின்றோமே தவிர ஒட்டுமொத்த ராணுவத்தினரையும் தண்டிக்குமாறு வலியுறுத்தவில்லை. அதனையே சர்வதேசமும் வலியுறுத்துகின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ .வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுவிஸ்நாட்டின் இலங்கைக்கான தூதுவர், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார். அந்த...
முல்லைத்தீவு, வட்டுவாகல் கடற்படைத்தளம் அமைந்துள்ள பிரதேசம், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற பிரதேசம் என கடற்படையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டுவாகல் பகுதியில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 372 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய 617 ஏக்கர் காணியில் வட்டுவாகல் கடற்படைத்தளம் அமைந்துள்ளது. இப்பகுதியில், பொதுமக்களுக்கு சொந்தமான 600 வரையான கால்நடைகளும் உள்ளன. இவற்றை பொது மக்கள் விடுவிக்குமாறு பல தடவைகள் கோரியபோதும்...
இந்தோனேஷியாவிலிருந்து, 22 இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட உள்ளனர் என்று செய்தி வெளியானதையடுத்து, தாங்கள் நாடு கட்டத்தப்பட்டால், துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் அவர்கள் உறைந்து போயுள்ளனர் என இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. இந்தோனேசிய கடலில் 2016ஆம் ஆண்டு தத்தளித்த இலங்கை தமிழ் அகதிகள் 44 பேர், பல்வேறு அழுத்தங்களுக்குப் பின்னர் அந்நாட்டில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்பு படைத் தலைமைகத்தினால் 20,000 ஏக்கர்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 2000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதில் மேலும் 4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஐர் ஜென்ரல் மகேஸ் சேனாநாயக்கா தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயகத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத்...
படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை எதிர்வரும் ஏழு நாட்களுக்குள் விடுவிக்காவிட்டால் தங்களது போராட்ட வடிவத்தை மாற்றி தீவிரப்படுத்தவுள்ளதாக முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பூர்வீக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இம் மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 26 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், தமது போராட்டத்தின் ஓர் அங்கமாக...
இராணுவத்தின் கையில் கொடுத்த தமது பிள்ளைகள் தொடர்பில் விசாரணைக்காக செல்லும்போது உங்கள் பிள்ளையை இராணுவத்திடம் கொடுத்ததற்கான சாட்சிகள் உள்ளதா? என கேட்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர். இறுதி யுத்தம் நிறைவடைந்த நிலையில் இராணுவத்தின் கையில் கொடுத்து விட்டே தாம் நலன்புரி நிலையங்களுக்கு சென்று தமது பிள்ளைகள் வருவார்கள் என காத்திருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்....
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்காக அரசாங்கத் தரப்பால் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியினாலும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் பாவிக்கப்படுகின்ற கைப்பொம்மையாகவே சுமந்திரன் உள்ளார். இங்கு நடைபெறுகின்ற விடயங்களைப் பார்த்தாலும் அவ்வாறே எண்ணத் தோன்றுகிறது. அதற்கமையவே சுமந்திரனும் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டதை வரவேற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பானது, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் முகமாக 2015ம் ஆண்டின் 30/1 பிரேரணையை...
மன்னார் விடத்தல்தீவு கடற்பகுதியில் ஸ்ரீலங்கா கடற்படையினரின் படகு மோதி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரு கடற்படையினரும் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாசன் கில்மன் என்ற குறித்த மீனவர் குல்லா படகு மூலம் விடத்தல் தீவு கடற்பரப்பில் நேற்று இரவு மீன் பிடியில் ஈடுபட்டுள்ளார். இதன்போது கடற்படையினரின்...
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஊழியர்களுக்கு, எதிர்வரும் 29ம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் அனைவரும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு அல்லது இலங்கை கொன்சல் ஜெனரல் அலுவலகத்திற்கு சென்று தகவலளிக்குமாறு, வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரியப்படுத்தியுள்ளது. மேலும், தமது உறவினர்கள் யாரேனும் இவ்வாறு...
40 நாடுகள் இணை அனுசரனை வழங்கிய பிரேரணை வாக்கெடுப்பின்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கைக்கு 2 வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படியான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கே இவ்வாறு இரண்டு வருட கால...
தனது தலைமையில் மரணப்படை ஒன்று செயற்பட்டதாக சர்வதேச ஊடகமான பிரான்ஸ் செய்திச் சேவை (AFP) வௌியிட்ட செய்தி தவறானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். இதன்காரணமாக குறித்த செய்தியை திருத்தி பிரசுரிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ தனது சட்டத்தரணியூடாக பிரான்ஸ் செய்திச் சேவைக்கு (AFP) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஊடகவியலாளர் லசந்த...
தமது பிரச்சினைகளை கேட்டுத் தீர்ப்பதற்கு முடியாவிட்டால் வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் பதவி விலக வேண்டுமென, வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தமது வேலையில்லா பிரச்சினையை தீர்க்குமாறு கோரி வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 25 நாட்களாக யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு...
யுத்த குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. யார் சர்வதேச தரப்பிடம் வாக்குறுதிகளை கொடுத்தாலும் ஜனாதிபதியின் நிலைப்பாடு உள்ளக விசாரணை பொறிமுறை என்பதே என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது. ஆட்சி மாற்றம் ஏற்படாது இருந்திருப்பின் இராணுவமும் ராஜபக் ஷக்களும் போர்க்குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் 551 பேர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். கொழும்பு நகரிலும், அதன் புறநகரங்களிலும் இவ்வாறு மனிதக் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவ்வாறு கடத்திச் சென்று படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பு...
ஸ்ரீலங்கா தொடர்பாக தமது அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து பரிந்துரைகளுமே முக்கியமானவை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ரா-அத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா தொடர்பிலான அறிக்கையை நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக முன்வைத்து உரையாற்றிய மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது முன்னுரிமை அளிக்கத் தேவையற்றது என பிரிவுகள்...
Loading posts...
All posts loaded
No more posts
