Ad Widget

இலங்கை பாதுகாப்பு பிரிவை எச்சரிக்கின்றது அமெரிக்கா!

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகள் ஸ்ரீலங்காவிலும் பிரவேசிக்கும் அபாயம் காணப்படுவதாக அமெரிக்க இராணுவத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் ஹெரி பீ ஹரிஸ் ஸ்ரீலங்கா பாதுகாப்பு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமது இலக்கு நாடுகள் மீது தாக்குதலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா போன்ற அமைதி நிலைவும் நாடுகளில் பிரவேசித்து திட்டங்களைத் தீட்டும் முயற்சியில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயததாரிகள் ஈடுபடும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளதெவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்காவுக்கு அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த மேஜர் ஜெனரல் ஹெரி பீ ஹரிஸ், பாதுகாப்பு அமைச்சின் முக்கியஸ்தர்கள் சிலருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இந்த சந்திப்புக்களின் போதே இவ்விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் ஆயுததாரிகள் தமது இலக்காக குறித்திருக்கும் நாடுகள் மீது தாக்குதல்களை நடத்த அமைதியான நாடுகளில் இலகுவாக பிரவேசித்து தாக்குதலுக்கான திட்டங்களை வகுத்து வருகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்திருப்பதாக மேஜர் ஜெனரல் ஹெரி பீ ஹரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் ஆயுததாரிகள் பிரவேசிப்பது இலகுவான விடயம் என்று சுட்டிக்காட்டிய அவர், எனவே ஸ்ரீலங்காவிற்கு வரும் அல்லது செல்லும் வெளிநாட்டுப் பிரஜைகள் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகள் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறிய நாடுகள் மீது சர்வதேச பாதுகாப்பு அமைப்புக்கள் கவனம் செலுத்துவது குறைவாக உள்ள நிலையில் அதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தும் ஐ.எஸ். ஆயுததாரிகள், சிறிய நாடுகளுக்குப் பிரவேசிக்கும் அபாயமும் காணப்படுவதாக மேஜர் ஜெனரல் ஹெரி பீ ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

Related Posts