Ad Widget

மாணவர்களுக்கு பொதுமன்னிப்பு: யாழ்.பல்கலை மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு வகுப்புத் தடையை எதிர்க்கொண்டிருந்த மாணவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததையடுத்து, நிர்வாக அடக்குமுறைக்கு எதிராக யாழ். மாணவர்கள் முன்னெடுத்துவந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழகத்திற்கான புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் குழப்பம் விளைவித்ததாக தெரிவித்தே இம் மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதுடன், கலைப்பீடமும் மூடப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் கலைப்பீட மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டதற்கிணங்க, மாணவர்களின் நலன் கருதி பொதுமன்னிப்பு வழங்குவதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கலைப்பீடத்தின் கல்விச் செயற்பாடுகள் நேற்றுமுன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், குறித்த மாணவர்கள் மீதான தடை நீக்கப்படாத நிலையில், மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தின் முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று இரண்டாவது நாளாக நீடித்த உண்ணாவிரத போராட்டத்தின் போது மூன்று மாணவர்கள் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts