- Monday
- November 17th, 2025
யாழ்நகர மையத்திற்கும் மருத்துவ பீடத்திற்கும் இடையில் விசேட பேரூந்து சேவைகள் நேற்றையதினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை உறுப்பினராக கபிலன் சுந்தரமூர்த்தி அவர்கள் தெரிவிக்கையில்.... யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பீடம் என்பவற்றில் பட்டக்கல்வியைத் தொடரும் மாணவர்கள் யாழ்ப்பாண நகரமையத்திலிருந்து குறித்த இரு...
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்றது. இதன்போது கொல்லப்பட்டவர்களின் உருவப் படங்களுக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்....
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்றையதினம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் “மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியா, இந்த மண் எங்களின் சொந்தமண்,...
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி விடுதி ஒன்றில் வைத்து முதலாமாண்டு மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் வலுக்கட்டாயமாகப் பொய் வாக்குமூலங்களில் கையொப்பம் இடுமாறு மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்களால் பணிக்கப்பட்டமை மற்றும் மாணவர்களின் சம்மதமின்றி காணொலி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து அறிக்கையிடுமாறும், பாதிகப்பட்ட மாணவர்களுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கைகளில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர்,...
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், "யாழ்ப்பாண...
யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் இன்று பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நீண்ட கால வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்னிலையில் பேரணியை இடைமறித்த பொலிசார் பேரணியை நடத்த வேண்டாம் என வலியுறுத்திய நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவம் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று (19) ஆரம்பமாகியது. மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் அணிவகுத்து வர, கொடி, குடை, ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகைதந்த துணைவேந்தர் அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிப் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே நேற்யை (09) தினம் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், காயமடைந்த இரு மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நேற்றைய தினம் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதன்போது 3ஆ ம் மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்பட்டது....
நேற்றய தினம் இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது. அதேவேளை பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்கு பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் வருமாறு, அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தின் பின்னர்...
மே இரண்டாம் திகதி முதல் 44 நாட்களாக தொடர் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். சம்பள முரண்பாடு, MCA கொடுப்பனவு அதிகரித்து வழங்குதல்...
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஊர்வலமாக வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். "ஊழியரின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொள், MCA கொடுப்பனவை அதிகரி, கல்விசாரா ஊழியர்களை மாற்றான் வீட்டு...
இனப்படுகொலைப் போரின் வலிகளை தலைமுறைகளிற்கும் கடத்தும் வகையில் தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டும் வரும நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கல்வியங்காட்டுச் சந்தியில; நேற்று புதன்கிழமை (15) வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு தினமும் பல்வேறுபட்ட இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்த அழைப்பு விடுக்கப்பட்டமைக்கமைய, இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் திருமதி துஷானி சயந்தன், பல்கலைக் கழகச் சட்டத்துக்கு விரோதமான முறையில் நிதியாளர் தனது சம்பளத்தை நிறுத்தியதனால் தனது வாழ்வாதாரம் சவாலுக்குட்டபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஏழாண்டு விடுமுறையை நிறைவு செய்து கொண்டு குறிப்பிட்ட திகதியில்...
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 'தமிழ் வேள்வி 2023' என்ற நிகழ்வில் 'ஈழத் தமிழ்ச் சமுதாயத்தில் தற்பொழுது இளைஞர் அமைப்புகளின் எழுச்சி அவசியமானதா? அவசியமற்றதா?' என்ற தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராகக் கலந்துகொண்ட...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று (14) ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பட்டமளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை வரையில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. அதில் 2,873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் 46 தங்கப்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலட்சினையை அனுமதியின்றி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டு்ள்ளதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 14ஆம், 15ஆம், 16ஆம் திகதிகளில் நடைபெறுவதையொட்டி பல்வேறு ஒளிப்பட, வணிக மற்றும் விற்பனை...
Loading posts...
All posts loaded
No more posts
