Ad Widget

நாட்டில் சுமார் 8 லட்சம் பேருக்கு மனஅழுத்தம்!

இலங்கையர்களில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் மனநோயாளர்கள் என கொத்தலாவல பாதுகாப்பு சேவை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் மனநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணருமான டாக்டர் நீல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதில், அதிகமானோர் சிசிக்சைகள் எதுவுமின்றி வாழ்ந்து வருவதாகவும் அவர் மேற்கொண்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனஅழுத்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த மனநோய், இருதய அடைப்பு, புற்றுநோய், உறுப்புக்களின் செயலிழப்பு என்பவற்றுக்கு காரணமாகவும் அமைகின்றன. அத்துடன், இது தற்கொலை செய்து கொள்வதற்கும் தூண்டுதலாக அமையும் எனவும் டாக்டர் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டாகும் போது இந்த மனஅழுத்தம் மேற்படி நோய்களுக்கு ஆளாவதற்கு பிரதான காரணமாக விளங்கும் எனவும் டாக்டர் விளக்கியுள்ளார்.

Related Posts