Ad Widget

சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு அவசியம் : சம்பந்தன்

சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் அவசியத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் நாடாளுமன்றத்தின் தலைவர் பேராசிரியர் டொக்டர் நார்பெர்ட் லாமெர்ட்டுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே இந்த சந்திப்பு நேற்று (04) இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் தெளிவுபடுத்தினார். அத்துடன், சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ரோய்ட் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts