யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள்: பின்னணியில் படையினரா?

யாழில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், இவற்றை கடத்துவது யாரென்ற விடயம் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதானது படையினர் மீதே சநதேகத்தை ஏற்படுத்துகின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே சிறிதரன் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் இன்று ஒன்றரை இலட்சம் வரையான படையினர் இருப்பதோடு, கடற்பாதுகாப்பும் பலமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் கேரளாவிலிருந்து அண்மையில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கஞ்சாவை வடக்கிற்கு யார் கொண்டுவந்தார்கள் என்றும் கேள்வியெழுப்பினார்.

இச் செயற்பாட்டால் மாணவர்களின் எதிர்காலம் அச்சுறுத்தலாகிவிடும் என்றும் இதன் பின்னணியில் செயற்படுபவர்கள் தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் சிறிதரன் மேலும் தெரிவித்தார்.

Related Posts