கடந்த வருடத்தையும் விட இந்த வருடம் டெங்கு நோயினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மும்மடங்கில் அதிகரித்துள்ளன.
இந்த தகவலை சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் மருத்துவர் பிரீலா சமரவீர வெளியிட்டுள்ளார்.
உயிரிழப்புக்களைப் போலவும், இந்த நோயினால் பீடிக்கப்படுகின்ற நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்தை விடவும் இந்த வருட முதல் காலாண்டில் 29 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் மொத்தம் 53 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள மருத்துவர் பிரீலா சமரவீர, அதிகமானவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே பீடிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.