விக்னேஸ்வரனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து கோரியுள்ளது

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து கோரியுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனினால் எழுத்து மூலமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சர் அண்மையில் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் எடுத்த தீர்மானம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது எதிர்ப்பு போக்கை வௌியிட்டுள்ளது. குறித்த...

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்து இயங்க முடிவு?

வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறாவிட்டால், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகியன நாடாளுமன்றத்திலும் தனித்து இயங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவருகின்றது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சி சார்பில்...
Ad Widget

நேற்றய போராட்டம் வெற்றி ! : ஒத்துழைத்த அனைவருக்கும் தமிழ் மக்கள் பேரவை நன்றி தெரிவிப்பு

முதலமைச்சரின் நிலைப்பாடுகளிற்கெதிராக சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ள்ப்பட்டுவரும் சதி நடவடிக்கைகளுக்கு,எதிர்ப்புதெரிவித்தும் ,முதலமைச்சரின் கோட்பாடுகளுக்கான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியும் நேற்று நடைபெற்ற கடையடைப்பிற்கு எமது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளை தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துக்கொள்கிறது. காலநெருக்கடி மிகுந்த சூழலில், மிகக்குறுகிய முன்னறிவித்தலின் மத்தியிலும், தாமாக முன்வந்து ஆதரவு வெளிக்காட்டிய...

முதலமைச்சர் சி.வி.க்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்: மாவை

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்து தமிழரசுக் கட்சியை புறக்கணித்து வருகின்ற நிலையில், முதல்வருக்கு எதிரான மாகாண சபை உறுப்பினர்களின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மாகாண அமைச்சர்களினால் நம்பிக்கையில்லா பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வடக்கு...

தமிழ்மக்கள் பேரவையின் அவசர ஒன்றுகூடல்

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பிலும், மக்கள் முதல்வர் விக்னேஸ்வரன் ஐயாவின் கொள்கைகளை தொடர்ந்தும் கொண்டுசெல்வது குறித்துமான மக்கள் கலந்துரையாடல் ஒன்றிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இடம் : 65, அம்மன் வீதி , நல்லூர் - வீரமாகாளி அம்மன் ஆலயத்திற்கு முன் செல்லும் வீதி காலம் : இன்று...

தமிழ் தேசிய உணர்வினை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் சாகடிக்கின்றனர்: சர்வேஸ்கரன்

தமிழ்த் தேசிய உணர்வினை சாகடிக்கின்ற செயலினை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடி குற்றஞ்சாட்டப்பட்ட வடக்கு அமைச்சர்கள் இருவரை பதவி விலகுமாறு பணித்தமை மற்றும் இருவருக்கு கட்டாய விடுமுறை வழங்கியமை தொடர்பாக, முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளுநரிடம் 22 உறுப்பினர்கள் ஒப்பமிட்டு கடிதமொன்றை...

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வடக்கு ஆளுநர் அறிவுறுத்தல்!

வடக்கு மாகாண சபையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அறிவுறுத்தல் விடுத்துள்ளார். வடக்கு முதல்வருக்கு எதிராக 22 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுநரிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரிடம் வடக்கு ஆளுநர் இவ் அறிவுறுத்தலை முன்வைத்துள்ளார். வடக்கின் அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், இருவர்...

முதலமைச்சருக்கு எதிராக கையெழுத்திட்டவர்கள் இவர்கள்தான்!

வடக்கு மாகாண முதலமைச்சரை மாற்றக் கோரி நேற்றைய தினம் (புதன்கிழமை) ஆளுநர் ரெஜினால்ட் குரேயிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது. அந்தவகையில், வட. மாகாண சபையின் ஆளும் தரப்பினை சேர்ந்த தமிழரசு கட்சியின் 15 உறுப்பினர்களும், ஏனைய கட்சிகளை சேர்ந்த 7 பேரும் மேற்படி முதலமைச்சருக்கு எதிரான கடிதத்தில்...

யாழில் தொடரும் வாள்வெட்டு

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மூவர் வியாபார நிலையமொன்றின் மீது வாள்களை கொண்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த மூவரும் தாக்குதல் நடாத்திய சம்பவமானது அருகில் இருந்த மற்றுமொரு வியாபார நிலைய கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது… நேற்று மாலை யாழ்ப்பாணம்...

வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவருவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முயற்சித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியை சேர்ந்த சிலரே முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதற்காக எதிர்க்கட்சி...

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.க்கு எதிராக ஆளுநரிடம் கடிதம்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மாற்றுவதற்கான கோரிக்கைக் கடிதம், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் நேற்று இரவு கையளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்கட்சியின் 6 உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். வடக்கு ஆளுநர் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதாகக்...

அமைச்சர்கள் விடயத்தில் முதலமைச்சர் தன்னிச்சையாக செயற்பட முடியாது: தவராசா

மாகாண அமைச்சர்களை நீக்குவதற்கும் புதிதாக நியமிப்பதற்குமான முழு அதிகாரமும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உண்டு என்றாலும், தற்போதைய நிலையில் வடக்கு மாகாண சபை அமைச்சர்களின் பதவி நீக்கம் தொடர்பில் முதலமைச்சர் தன்னிச்சையாக செயற்பட முடியாதென வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக ஊழல் மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோடு,...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை : விம்மி விம்மி அழுதார் தாயார்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில், ட்ரயல் அட் பார் முறையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில், நேற்றுத் திங்கட்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசி மகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் முன்னிலையே விசாரணைக்கு...

அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை மக்கள் நலனுக்காக முறையாக பயன்படுத்துவது அவசியம் : ஜனாதிபதி

உரிய அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மக்கள் நலன்கருதி முறையாக செலவளிப்பது அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கில் அமுலாகும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் எதிர்கால திட்டங்கள் போன்றவை பற்றி ஆராயும் நோக்கில் யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். வட...

வித்தியா கொலை சந்தேக நபா்களுக்கு எதிராக 41 குற்றச்சாட்டுக்கள்!

வித்தியா கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபா்களுக்கும் எதிராக 41 குற்றச்சாட்டுக்கள் சட்டமா அதிபா் திணைக்களத்தினால் நீதிமனறத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட் பார் தீர்ப்பாய முறையில் நேற்று யாழ் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கமைய வவுனியா மேல்...

காணாமல் போனோர்களின் பெயர் விபரத்தினை வெளியிடுவேன்: ஜனாதிபதி உறுதி

காணாமல் போனோர்களின் பெயர் விபரத்தினை வெளியிடுமாறு முப்படைகளுக்கும் கட்டளையிடுவேன் என காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஜனாதிபதி யாழில் உறுதியளித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் காணாமல் போனோரின் உறவுகளையும், சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் போது, காணாமல் போனோரின் உறவுகள்...

எட்டு மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம்!

நாட்டில் எட்டு மாவட்டங்களில் டெங்கு நோய் பரவலுக்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதாக சுகாதார சேவை குடம்பிகள் ஆய்வு தொடர்பான உதவியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, குருநாகல், களுத்துறை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகரிப்புக்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்துள்ளார். இந்த...

புங்குடுதீவு மாணவி படுகொலை தீர்ப்பாயம் கூடியுள்ளது

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தின் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று (12) திங்கட்கிழமை அழைக்கப்பட்டது. வழக்குத் தொடுநர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் எஸ்.குமாரரத்தினம் தீர்பாயத்தில் முன்னிலையாகி 9 சந்தேக நபர்களுக்கும் எதிரான குற்றப் பத்திரிகையை தீர்பாயத்தில்...

அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை : வடக்கு மாகாண சபையின் அடுத்த நடவடிக்கை என்ன?

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் டான் தொலைக்காட்சியில் நேற்றய தினம் ஒளிபரப்பாகிய அச்சமில்லை அச்சமில்லை நிகழ்ச்சி

யாழில் பெண்ணைத் தாக்கி பாரிய கொள்ளை

அச்சுவேலி தெற்கு வைத்தியசாலை வீதியில் உள்ள வீட்டுக்குள், வெள்ளிக்கிழமை (09) மாலை புகுந்த கொள்ளையர்கள், தனிமையில் இருந்த பெண்ணைத் தாக்கி, 52 பவுண் தங்க நகை மற்றும் 16 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றமை தொடர்பில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார், தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான ஸ்ரீமதி நடேசமூர்த்தி (வயது 59) என்ற...
Loading posts...

All posts loaded

No more posts