புலிகள் மீள உருவாகும் சாத்தியம் இல்லை :யாழ். கட்டளைத் தளபதி

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாகும் சாத்தியம் இல்லையென யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த வலி.வடக்குப் பகுதியினுள் உள்ளடக்கப்பட்டிருந்த மயிலிட்டி இறக்குதுறை மற்றும் 54 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும்அவர் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் நல்லிணக்கம், பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இராணுவம் காணிகளை விடுவித்து வருகின்றது.

நாம் காணிகளை விடுவிப்பதற்கு முன்னர் குறித்த பிரதேசத்திற்கு பாதுகாப்புஅச்சுறுத்தல் இருக்கின்றதா? புலிகள் மீள் உருவாகும் சாத்தியம் இருக்கின்றதா என ஆராய்ந்தே குறித்த பிரதேசங்களை விடுவித்து வருகின்றோம்.

அது 100 வீதம் திருப்தியாக உள்ளது. விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி தொடர்பான எந்த அச்சுறுத்தலும் கிடையாது எனத் தெரிவித்தார்.

Related Posts