Ad Widget

வித்தியாவிற்கான நீதிக்கு துணை வருகிறது சுவிஸ்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு சட்ட உதவி வழங்குவதற்கு தயாராகவிருப்பதாக இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதானி ஃபைன்ஸ் வோகர் நெதர்கூன் தெரிவித்துள்ளார்.

வித்தியா கொலை வழக்கு தற்போது ட்ரயல் அட் பார் முறைக்கு மாற்றப்பட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆதார வாக்குமூலங்களுடன் யாழ். மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை, வித்தியா கொலைச் சம்பவத்தை தமது அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாணவி வித்தியா படுகொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக விளங்கும் சுவிஸ் குமார், தமது நாட்டுப் பிரஜை இல்லை என்றும், குறித்த நபர் அங்கே தற்காலிகமாக தங்கியிருந்த ஒரு இலங்கையரே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts