- Friday
- August 29th, 2025

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையானது, சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டு, பல கோடி ரூபாய் கைமாற்றப்பட்டு இடம்பெற்ற ஒரு சதியென்றும், அதற்கு வித்தியா பலிக்கடா ஆகியுள்ளார் என்றும் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா சாட்சியமளித்துள்ளார். வித்தியா கொலை வழக்கின் சாட்சியப்பதிவு யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று...

வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலய ஆக்கிரமிப்பில் இருந்து 27 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ளது மயிலிட்டித் துறைமுகம். இந்நிலையில் மயிலிட்டி துறைமுகத்தை விடுவித்து மக்களிடம் ஒப்படைக்க படைத்தரப்பு இணங்கியுள்ளது எதிர்வரும் 3 ஆம் திகதி திங்கட்கிழமை துறைமுகம் உட்பட துறைமுகத்தைச் சுற்றியுள்ள ஜே-249 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 54 #ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்பட்டு மாவட்ட அரச...

“ஈழத்தமிழ் மக்களின் தொன்மங்கள் மீதும் அவர் தம் அடையாளங்கள் மீதும் குறிவைத்துத் தாக்கி, தமிழரை இனவழிப்புச் செய்கின்ற மூலோபாயத்தின் கருவிகளாக, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். கடந்த வாரம், கிளிநொச்சி நகரில் திறந்து வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை பொருத்தப்பட்டிருந்த பூகோள உருவில் பொறிக்கப்பட்டிருந்த “ஈழம்”...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு பொலிஸார் வழங்கிய தகவலில் சில உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதென சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தாம் இந்த விடயத்தை நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி...

கேப்பாப்பிலவு மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு இதுவரை எழுத்துமூலம் அறிவிக்கப்படவில்லையென தெரிவித்ததாக, கேப்பாப்பிலவு மக்கள் குறிப்பிடுகின்றனர். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய கேப்பாப்பிலவு மக்கள், அதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் மகஜரொன்றை கையளித்தனர். ஜனாதிபதியை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சமந்தி ரணசிங்கவிடமே...

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சைட்டம் தனியார் நிறுவனத்தில் கற்கும் மாணவர்களுக்கு மருத்துவ சபையில் அனுமதி வழங்கப்பட்டமை மற்றும் அவர்களுக்கு அரச மருத்துவமனைகளில் பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட பல...

வடக்கில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஏனைய இரு அமைச்சர்கள் தொடர்பாகவும் விசாரிப்பதற்கு புதிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த விசாரணைக் குழுவில் முன்னிலையாக மாட்டோம் என சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இவ்வாறான விசாரணைக் குழுவை அமைப்பதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் 13ஆது திருத்தச் சட்டத்திலோ மாகாண சபை தேர்தல் சட்டத்திலோ முதலமைச்சருக்கு...

தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை செயற்பட்டு வருகின்றதென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும், இவ்வாறான செயற்பாடுகளால் கட்சியை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாதென மாவை மேலும் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) வெளியாகியுள்ள தமிழ் நாளிதழொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் ஓர் சமூக...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு மக்களை தூண்டிவிட்டால், அவர் மேல் நம்பிக்கையில்லாப் பிரேரணையல்ல, அதைவிட வேறு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் கடவத்தை விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், சிறிலங்கா இராணுவத்தினராலேயே வடக்கு மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதற்குப்...

இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது எனவும், இதனைத் தெரியப்படுத்தினால் தேசத் துரோகிகள் எனக் கூறுவார்கள் என்ற அச்சத்தினால் தமிழ் அரசியல் வாதிகள் வாய்திறக்காது மௌனிகளாக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....

தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சியிலிருக்கக் கூடிய மேல்மட்ட உறுப்பினர்கள் சி.வி.கே. சிவஞானத்தைப்போல் பணம் படைத்தவர்கள் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எங்களைப் பொறுத்தவரையில் வடமாகாணத்தின் முதலமைச்சர் பதவியோ, அமைச்சர் பதவியோ, அவைத்தலைவர்...

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சில நிதி நிறுவனங்கள் குடும்பங்களை குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்களை மாத்திரமே இலக்கு வைத்து, இந்த நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதன் பின்னணி என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றய தினம் (22) நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடயம்...

கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிமுதல் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு, மலையகம் என நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இப் போராட்டம் காரணமாக நோயாளர்கள் பெரிதும்...

வடக்கு மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சராக தற்காலிகமாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் முதலமைச்சர் நேற்று(புதன்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் குருகுலராஜா இருவரும் ஊழலில் ஈடுபட்டுள்ளமையை நிரூபித்து விசாரணைக்குழு அறிக்கை வெளியிட்டிருந்தது....

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இராணுவத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் காணாமல் போனோர் குறித்த சம்பவத்திற்கும் நேரடி தொடர்புள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் 450 பேர் வரை காணாமல் போயுள்ளனர்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில்...

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணங்களை 6.28 சதவீதமாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போது குறைந்தபட்ச பேருந்து கட்டணமாக உள்ள 9 ரூபா, ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து 10 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது....

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக, கடந்த வியாழக்கிழமை கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, நேற்று (19) வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது. வடமாகாண சபையைச் சேர்ந்த அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அந்த நால்வரில் இருவரை, அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்யுமாறும், இருவரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்,...

வடக்கு முதலமைச்சருக்கு தமது ஆதரவை வழங்குவதாக புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையை கருத்தில் கொண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண சபையின் முதல்வராக சீ.வீ விக்னேஸ்வரன் இருக்க வேண்டும் . அவருக்கு எதிராக தழிழரசு கட்சி...

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத இரு அமைச்சர்களுக்கும் விதிக்கப்பட்ட கட்டாய விடுமுறையை வலியுறுத்த மாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்து ஒரு மாதகால கட்டாய விடுமுறையையே தான் வலியுறுத்த மாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள...

ஊழல் மோசடி குறித்து குற்றஞ்சாட்டப்பட்ட வடக்கு மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கு ஆதரவாக வவுனியாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் குறித்த ஆர்ப்பாட்டத்தில், இளைஞர் குழுவொன்று திடீரென பிரவேசித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கலைந்துசெல்லுமாறு கோரி கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அப்பிரதேசத்தில் பெருமளவு...

All posts loaded
No more posts