- Monday
- September 1st, 2025

கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அனுமதி வழங்காததால் பணியாளர்களின் தங்க நகைகளை அடகு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு உற்பத்தி வரி செலுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கோணாவில் போத்தல் கள் அடைப்பு நிலையத்தில், இந்த வருடம் 5 இலட்சம் போத்தல் கள் அடைக்கப்பட்டு 15 மில்லியனுக்குமேல் உற்பத்தி வரியாக மதுவரித் திணைக்களத்திற்கு...

“இன்று தமிழ் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளது. அதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை கொண்டு வரவேண்டியது காலத்தின் தேவையாகும்” என, அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைப்பதற்காக கடந்த ஆட்சிக் காலங்களில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றன. இந்தப்பாவம் அனைத்தும், அன்றைய ஆட்சியாளர்களையும் ஊடகவியலாளர்களையுமே சேரும்...

மன்னாரில் மனித மனித எச்சங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு அருகிலுள்ள கழிவு நீர் செல்லும் மதகிலிருந்து குறித்த மண்டையோடு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைகளான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரையும் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார் . யாழப்பாணத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட அவர், நாம் தொடர்ந்து மக்கள் சந்திப்புக்களினை நடத்திவருகின்றோம்.மக்களது கேள்விகளிற்கு பதிலளிக்கின்றோம். பலரும் மாகாணசபை விவகாரம், அரசியல்...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு, நீதாய விளக்கம் முன்பான (ட்ரயல் அட் பார்) ஐந்தாம் நாள் சாட்சிப் பதிவுகள், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04), யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில், மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது....

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனி ஈழம் ஒன்றை அமைக்கும் கனவில் இருக்கின்றார் என்பதுடன் தமிழ் மக்களிடையே பிரபலமாகி தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெரியப்பாவாக முயற்சி செய்கின்றார் எனவும் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பின் பார்வையானது தீர்வுக்கு உதவாது என செவ்வியொன்றின்போது தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வடமாகாண மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற இழுவைப் படகுமூலமான மீன்பிடியைத் தடைசெய்யும் சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலில் குழப்பம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, மீனவ பிரதி நிதிகளுடனான கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இழுவைப்படகு மூலம் தொழில் செய்யும் உள்ளூர் மீனவர்களுக்குப் பிரச்சனையில்லையெனவும், இந்திய இழுவைப்படகுகளுக்கே சட்டமூலம்...

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாகும் சாத்தியம் இல்லையென யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த வலி.வடக்குப் பகுதியினுள் உள்ளடக்கப்பட்டிருந்த மயிலிட்டி இறக்குதுறை மற்றும் 54 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு...

பாதுகாப்புப் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விரைவில் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் உள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றதன் பின்னர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து...

மட்டக்களப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு இரு தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென உச்ச நீதமன்றம் நேற்று (திங்கட்கிழமை) தீர்ப்பளித்துள்ளது. அத்தோடு, பாதிக்கப்பட்ட தரப்பிற்கு அரசாங்கம் தலா பத்து இலட்சம் ரூபாவை நட்டஈடாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி மட்டக்களப்பு...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் (5ம் திகதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அச் சங்கத்தின் உறுப்பினர்கள் இதனைக் கூறியுள்ளனர்.

யாழ்.வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் இன்று (திங்கட்கிழமை) இராணுவத்தால் விடுவிக்கப்பட்டது. மயிலிட்டி ஜே151ஆவது கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட 54 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, அதற்கான உறுதிப்பத்திரங்களை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் யாழ். மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி கையளித்துள்ளார்....

பத்திரிகையாளர் தராகி சிவராம் படுகொலையில் தான் சம்பந்தப்படவில்லையெனவும், வடமாகாண முதலமைச்சர் தனக்கு தனிப்பட்ட ரீதியில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சில விடயங்கள் யாழ் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வரும்வகையில் வெளியே கிடைக்கச் செய்தமை, முதலமைச்சருக்கும் மாகாணசபை உறுப்பினருக்கும் இடையில் இருக்கக்கூடிய தனிப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களை பெறுமதியற்றதாக்கியுள்ளது. மாகாணசபை உறுப்பினர்களிடம் பெறப்பட்ட சுயவிவரக் கோவைகளும் அதற்கான பதில்களும்...

இடம்பெயர்ந்து வாழும் மயிலிட்டி மக்கள் அனைவரையும் நாளை மறுதினம் திங்கட்கிழமை முற்பகல் 9 மணிக்கு மயிலிட்டி துறைமுக முன்றலில் ஒன்றுகூடி விடுவிக்கப்படாதுள்ள ஏனைய நிலப்பரப்புக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த மயிலிட்டி துறைமுகம் உட்பட அதனை அண்டிய பிரதேசம் சூழவுள்ள...

தற்போதைய நிலைமையின் படி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது நாட்டுக்கும் தமிழர்களுக்கும் இனங்களிடையேயான நல்லிணக்கத்துக்கும் நல்லது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நான் தொடர்ச்சியாக...

அரச தரப்பு சாட்சியாக தன்னை மாற்ற குற்றபுலனாய்வு துறை அதிகாரி உதவினால் அவருக்கு தான் 2 கோடி ரூபாய் பணம் வழங்க தயார் என தன்னிடம் சுவிஸ் குமார் தெரிவித்ததாக ஆறாவது சாட்சியான முஹமட் இப்ரான் என்பவர் ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் மூன்றாம் நாள் சாட்சி...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு சட்ட உதவி வழங்குவதற்கு தயாராகவிருப்பதாக இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதானி ஃபைன்ஸ் வோகர் நெதர்கூன் தெரிவித்துள்ளார். வித்தியா கொலை வழக்கு தற்போது ட்ரயல் அட் பார் முறைக்கு மாற்றப்பட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆதார வாக்குமூலங்களுடன் யாழ். மேல் நீதிமன்றத்தில்...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் இரண்டாம் நாள் சாட்சி பதிவுகள், நேற்றய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் ” ரயலட் பார் முறைமையில் நடைபெற்றது. அதன் போது...

வலி.வடக்கில் உள்ள தையிட்டிப் பகுதியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கான காணி அளவீட்டுப் பணிகள் நேற்று, மூன்று பௌத்த பிக்குகளின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1983ஆம் ஆண்டுக்கு முன்னர், தையிட்டிப் பகுதியில் 20 பரப்புக் காணியில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாக வலி. வடக்கு பிரதேசசபை ஆவணங்களின் குறிப்பிடப்பட்டிருந்தமைக்கு அமைவாகவே, இந்த அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த விகாரையை விட்டு...

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் கட்சி நிலைப்பாடுகளை தாண்டி செயற்படுவதாகவும் அவருக்கு ஆதரவு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என சின்னக்கதிர்காமர் தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். விக்கினேஸ்வரன் வீட்டில் ஒடுங்கிய வீதிக்குள் திரண்ட நூறு பேரை வைத்துக்கொண்டு முதலமைச்சர் தனக்கு மக்கள் செல்வாக்கு உண்டென கருதுவாராக இருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சொன்னதைப்போலவே நானும் சொல்கிறேன் முடிந்தால் மாகாணசபையை...

All posts loaded
No more posts