Ad Widget

வட. மாகாண வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வந்துள்ள அமெரிக்க நிறுவனம்

வட. மாகாணத்தில் காணப்படும் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்க நிறுவனமொன்று முன்வந்துள்ளது.

அதன்படி வடக்கு சூழலுக்கு ஏற்ற தரமான வீடுகளைப் அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் வீட்டுத்திட்டத்தில் பங்கெடுக்கவுள்ளதாக அமெரிக்க வர்த்தக மற்றும் தொழில்நுட்ப சர்வதேச நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியான ரி.பரமானந்தன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த செலவில் தரம் வாய்ந்த வீடுகளை அமைத்துக் கொடுக்கும் குறித்த நிறுவனமானது, 12 இலட்சம் ரூபா செலவில் 550 சதுர அடியில் வீடுகளை அமைத்து கொடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரு படுக்கையறைகள், சமயலறை, வீட்டுடன் இணைந்த குளியலறை மற்றும் முன்விராந்தை ஆகியவற்றை கொண்டதாக வீடுகள் அமைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் அமைக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத்திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறித்த நிறுவனத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts